Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Saturday, May 23, 2026

Shri Prajna: ஒடிஷா - DIARIES - ( பூரி-கொனார்க்-பிப்லி - ரகுராஜ...

Shri Prajna: ஒடிஷா - DIARIES - ( பூரி-கொனார்க்-பிப்லி - ரகுராஜ...:        ஓடிஷா ஒரு அமைதியான கலாச்சார மையம், ஒரு பயணத்தின் வழி மனம் மலர்வதைத் தவிர வேறென்னாவாயிருக்க முடியும், ஓடிஷாவின் கோவில்கள் கட்டிட கலையி...

ஒடிஷா - DIARIES - ( பூரி-கொனார்க்-பிப்லி - ரகுராஜ்புர்)

       ஓடிஷா ஒரு அமைதியான கலாச்சார மையம், ஒரு பயணத்தின் வழி மனம் மலர்வதைத் தவிர வேறென்னாவாயிருக்க முடியும், ஓடிஷாவின் கோவில்கள் கட்டிட கலையின் ஆகச் சிறந்த படைப்புகள்..ஜெகன்னாத் பூரி முதல் கொனார்க் வரை ஒரு முகம் காட்டும் ஓடிஷா ரகுராஜ்புர் முதல் பிப்லி வரை வேறு  நிறம் காட்டும் ....கோவில்கள், கிராமங்கள் கடற்காற்று , கலை நிலம் என்று மணலும் மரபு  பேசும்  மனதில் நின்ற பயணமாக அமைந்தது.....நானும் எதிர்பாராதது...
                                                        
                                                           
                                                          
                                                        

பூரியின் தெருக்களில் நான் அலைந்து கொண்டிருந்தேன் ,மனம் ஏதோ ஒரு விதத்தில் அமைதிப்பட்டிருந்தது. ஒரளவிற்கு ஹிந்தி பேசினார்கள், பெரும்பாலும் ஓடியா பேசினார்கள். அவர்கள் தாய்மொழியை நான் ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தேன், ஒரு மனிதனின் சுயசிந்தனை அவனின் தாய் மொழியில் அல்லவா உள்ளது ...

ஏனோ  சிரித்த முகம் மலர்ந்த ஆண்களை நான் பார்க்கவில்லை,பெண்கள் அப்படித்தெரியவில்லை...புபனேஷ்லிருந்து பூரிக்கு 65 கிமீ...50 ரூ ட்ரவல்ஸ்  மினி பஸ் மாதிரி அதிகாலை ஆறுமணிக்கு  ஏறி 8 மணிக்குள் பூரி வந்து சேர்ந்தேன், 

ஜெகன்னாத் லாட்ஜ் இது பேருந்து  நிறுத்ததின் அருகில் இருந்தது, இப்போதெல்லாம் போய் பாத்துதான் BOOK செய்வதுRED BUS APP ல் ஒருமுறை, BOOK செய்து விட்டு போய் பார்த்தால்  WINE SHOP இருக்கிறது, பணமும்  RETURN  வரவில்லை.· FAMILY க்குத்தான் கொடுப்போம் ஆனால் பரவாயில்லை கொடுக்கிறோம்  என்றார்..செம COMPACT NEAT ROOM, 800₹  கேட்டேன் இல்லை என்றார், வெளியில்  போய் பார்த்துவிட்டு திரும்பவும் அங்கேயே வந்தேன்..எல்லோரும் FAMILY கேட்டார்கள், 1500ரூ ROOM RENT  கேட்டார்கள்..
மறந்தும் சிரிக்கமாட்டேன் என்று இருப்பார்கள்,, தொந்தரவு என்று எதுவும் இல்லை காலை சரியாக 7 மணிக்கு பணம் கேட்டு கதவு தட்டப்படும் EXTEND செய்வதானால்,... பணம் தர தாமதமானால்  HEATER CUT செய்யப்படும் அவ்வளவு தான்...

கொனார்க் , பிப்லி, மங்கள் காட் , பூரி BEACH, என்று எங்கேயாவது தினமும் சுற்றிவிட்டு வருவதற்கு மிக வசதியாக இருந்தது..

                                                                    

    


BEACH மற்றும் BEACH ROAD நல்ல JOLLY VIBE ல் இருக்கும்...பூரியிலிருந்து கொனார்க் செல்லும்  MARINE DRIVE ல் பயணிக்கும்  போது  குஷபத்ரா (KSHAPHADRA RIVER) கண்ணுறமுடியும்..

கொனார்க், (KONARK) சிற்பங்கள் காண காண பிரமிப்பாக குதூகலமாக இருந்தது, இது மனிதர்களால்  சாத்யப்படக்கூடியதா என்ற வியப்பும் மேலோங்கி  இருந்தது










நிதானமாக சுற்றி சுற்றி வந்தேன், தனிமை பயணம் எனக்கு மிகப் பெரும் சுதந்திரத்தை கொடுத்திருந்தது...ஆழ்ந்து பார்க்கும் தன்மை சிரிதெனினும் வயப்பட்டது.. நானும் நானும் ,மட்டுமே அவ்வுலகம் அது..செல்ஃபி மட்டுமே எடுத்துக்கொண்டிருந்தேன், வழியில் சென்ற இருவரிடம் கேட்க போஸ் கொடுக்கச் சொல்லி இஷ்டத்துக்கும் எடுத்துக்கொடுத்தனர்..






                                                
கொனார்க் சூரிய கோவிலுக்கு அருகில் சந்த்ர பாகா என்ற ஆறு ஓடியதாகவும் இப்பொழுது  சிறிய குளம் மட்டும் கொனார்க் கடற்கரையின் அருகில் காணப்படுகிறது

பெரும்பாலும் தினமும்  நான் பூரி கோவிலுக்கு செல்வேன் எனது இருப்பிடத்திலிருந்து  10 ரூ SHARED RIKSHAWS ல்   போய்விடுவேன், பெரும்பாலும் நள்ளிரவு வரை அங்கு தான் இருப்பது.மிகுந்த கலை நயத்துடன்
கட்டபட்ட தாமரை மொட்டு வடிவிலான அக்கோபுரங்கள்   இரவு நேரத்தில் கண்ணுரும்போது அலாதியானதொரு இன்பம் பொங்கும். வார்த்தைகளில் பதிவிடமுடியா உணர்வு அது. அலைமோதும் கூட்டதினிடையில் அமைதியில் கிடக்கும் மனம்..யாரோ அரவணைப்பது  போல்..அந்நிம்மிடம் தோன்றியதெல்லாம் இறையென்பது  உணர்வு , உள்ளில்  எழுவது காண்பது அறிவது.. அது மதத்திற்கு அப்பாற்ப்பட்டது என்பதே..


பூரி கோவிலின் உள்ளே சந்தை  போன்று ஒன்றில் மஹா ப்ரசாதம் என்று விற்கிறார்கள்,,  கோவிலின் சமூகத்தை சார்ந்தவர்கள் உய்ர உயர மண் பானை களில் நல்ல சுவையுடன் அதை வாங்கி சாப்பிடுவதும் ஒரு அனுபவமே.. 

கோவிலுக்கு செல்லும் பாதை எங்கும்  நடைபாதை கடைகள் நிறைந்திருக்கும் ,
ஒரு சிறிய மண் குவளையில் பழுப்பு பால் வாங்கி குடித்து பார்தேன் அமிர்தமாய் இனித்தது, ஆடையும் பாலுமாக..( வேறு மாதிரிசெய்கிறார்கள். நன்றாய் இருந்தது..இது இரவில் , மதியம் அரிசி உணவு , மீன் , காய் கறி பருப்பு  நன்றாக இருந்தது ....விதவிதமான பண்டங்கள் நான் மொமோஸ் , ச்சோலாபூரி, நூடுல்ஸ் என்று சாப்பிடுவேன், மதியம் கண்டிப்பாக  மீன்  சாப்பிட்டேன்...பெங்காலி மக்கள் அதிகம் புலங்குவதால் மீன் குழம்பு சாப்பாடு கிடைக்கிறது, ஆனாலும் ஒன்றை கவனித்தேன்,  NON VEG என்பது  நல்ல உணவு பழக்கம் அல்ல என்பது போல். நானும் VEG  தான்  என்றால் ஒகே என்பது போல், புலி பசித்தாலும் பிரியாணி தானே கேட்கும்...

ஓடிஷா ( ODISHA)   மாநிலத்தின்  மொழி  ஓடியா(ODIA) சுமார் 1500 -2000 ஆண்டுகள் பழமையானது என்று கணக்கிடப்பட்டு  செம்மொழி அந்தஸ்தும்  2014 ல் வழங்கப்பட்டிருக்கிறது..ஓடியா எழுத்தும்(ODIA SCRIPT) உள்ளது ..

பூரியிலிருந்து சுமார்  15 கிமீ  தூரத்தில் ரகுராஜ்புர்( RAGHURAJPUR) என்ற ஊரில் பட்டசித்ரா என்ற பனைஓலையில் ஓவியங்கள் செதுக்கல்கள்  மற்றும் பாரம்பரிய கலைகள் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது
                                                            
                                                                       



                                                                     

                                                    
பிப்லி , பூரியிலிருந்து 40 கிமீ ,அப்ளிக் கைவேலைப்பாடுகள், அலங்கார குடைகள் , தொங்கும் (HANGINGS) அலங்காரங்கள் துணி கைவினைப் பொருட்கள் உலகப் புகழ் பெற்று  விளங்குகிறது.

பூரி ஜெகன்னாதர் ஆலயத்தின் தேர் அலங்கார  வேலைப்பாடுகள் இங்கு பல ஆண்டுகளாக வாழும் முஸ்லிம் மக்களால் செய்யப்படுவதாக கூறினர்..

மொழி, கலாசாரம் , உணவு , பண்பாடு இவற்றில்  சிறிது வேறுபாடுகள் காணப்பட்டாலும்  மனிதர்கள் மிகவும் யதார்த்தமானவர்கள் அன்பானவர்கள்
பயணிப்பதும் அதற்காய் உயிர் வாழ்வதுமே எனதின்பம்.....  
   

Tuesday, February 10, 2026

Something Interesting

I came through some questions.

.they are here

 1.

If someone told you,

you are a lot like your partner would this be a complement to you??     

Or you Truly fulfilled or just less lonely or you able to be unapologetically yourself or 

do you feel the need to show up differently to please your partner or 

are you in love with who your partner is right now as a whole or you only love with their good side or the potential or the idea of them or

 would you want your future or an imagined child to date someone like your partner.. ...

MY ANSWERS

 1)) I am who I am. I wouldn’t take being told I’m like my partner as a compliment, because every soul is unique and so am I...

 2))

In any relationship, I don’t think one can feel complete fulfillment...at best, it may ease the sense of loneliness.

I may not be able to remain exactly as I am, out of love, we change a little, and that’s okay.

All is fair in love and war...so, we grow, we adjust, and we keep going...

3)))

When we enter a relationship, we should step in with genuine love for the person as a whole that itself is a form of respect for the relationship. 

4))

A human being is always a mix of both light and shadow..there’s nothing that exists as only good or only bad.

If we look only at someone’s talent or potential, that isn’t really a relationship  that’s more like searching for a person for work.

 We may feel attracted to an idea or a fantasy, but we can’t truly love a mere imagination..

if it's love then it is real...

5))

I would want her to choose someone she truly likes ...

someone who loves her with all her strengths and flaws...

Why should she choose someone similar to the person I loved?..

There is no ..like” or ..similar” here...

She is simply a child who came through me ..that’s all. She and I are different individuals. I would never expect her to love what I or whom I loved...the choice is entirely hers....

Thursday, January 29, 2026

Vysag- Travel - Day 2 nd 3

 Treebo imperia ஒரு நாள் தான் book பண்ணிருந்தேன் .. தொடர்வதற்கு பார்த்தால் , நான் book செய்த rate.. க்கு கிடைக்கவில்லை ..chat Gpt, கிட்ட கலந்து கிட்டு ..book செய்தது தான், kinnerra comforts, City பக்கம் .. morning complementary breakfast முடிச்சிட்டு  கிளம்பினேன்... breakfast ரொம்ப நல்லா இருந்துச்சு ..full கட்டு கட்டி விட்டு புறப்பட்டேன்.. எதுக்கெடுத்தாலும் cab or auto , வேண்டாம்  bike ல போவோம்னு .. driving person phone பேச .. நான் சொல்ல.. எப்படியோ .. உயிரோடு kinnerra comforts வந்தேன்..

Foot massager இருந்தது, local cable TV , chiranjeevi Sridevi படம் பார்த்தேன்... அன்று கிளம்பி நான் சென்ற இடம், ..simhachala temple, மலை மேல, நல்லா இருந்தது.. முடித்து விட்டு RK beach வந்தேன், beach ஜக ஜோதியா .. இருந்தது .. நல்ல mixed chat and coffee குடித்து விட்டு, காளி கோயில் போனேன்... சுற்றி விட்டு இரவு 9.00 மணிக்கு room வந்தேன்..





மூன்றாம் நாள் மாலை return ticket, போட்டிருந்தேன், room extern செய்வதற்கு  கேட்ட போது  reasonable ஆக செய்து கொடுத்தார்கள் .. நிறைய family, women travelers பார்த்தேன் .. இந்த stay place.. ல்..

Room விட்டு வெளியே வரவில்லை,A quiet solo day, lived at my own pace. ...musium போகல ..next time போகணும் .. கொஞ்சம் தூரமான சொந்தக்காரங்க வீடு போல.. சென்னை ல இருந்து ...I love Vysag....

Wednesday, January 28, 2026

IVYSAG - Travel

 Day -1

பொதுவாகவே தனியாக பயணம் செய்வது பிடித்ததே இல்லை, யாராவது ஒருவரை இந்த மானம் கெட்ட  மனது எதிர்பார்த்துக் கொண்டே  இருக்கும், அதை  உடைக்கவும் விரும்பினேன்.. காலத்தின்  சூழலில் சென்னையில்  வசிப்பதால் , கிடைத்த 5 நாள் விடுப்பில் ஜெய்பூர், அகமதாபாத், மும்பை மூன்றுக்கும் flight check செய்ததில் , வாய்பில்லை, ராசா என்று தோன்றியது.. மண்டை குடைந்ததில் , தமிழ் ன்னு  ஒரு Friend, ஏன்  நீங்க vysag போகலாமென்னு கேட்க, bus ticket reasonable ஆக இருந்தது, yes என்று book செய்து கிளம்பி விட்டேன் , ஒரு சில இடங்கள் தனிமையில் சென்று இருந்தாலும் நீண்ட வருடங்களாக அவ்வாறு சென்றதில்லை...








Treebo imperia hotel ல  room book, பண்ணியிருந்தேன் ... 7 .30 க்கு reach பண்ணவேண்டிய bus yes 8.00 கெல்லாம் spot  ல இறக்கி விட, auto பிடித்து போகனும்  போல என்று auto விசாரிக்க அந்த தம்புடு , அக்கடா  சூடண்டி  என்று காண்பிக்க , பிடனியில் இருந்தது hotel..

12.00க்கு check in, room free இருந்தால் கொடுக்கிறோம் என்றார்கள் 9.00க்கு கொடுத்துவிட்டார்கள்.. ஹை ஜாலி..

போய் பார்த்தால் அப்படி ஒரு luxury room, வெளிய போகவே மனசுவரலெ, bed, room toilet  எல்லாம் செம்ம neat.. நல்லா குளிச்சு நிதானமா ready ஆகி, கொஞ்சம் rest எடுத்து மதியத்திற்கு மேல் , வெளிய வந்து ஆந்திர meals கிடைக்கல , moodles வாங்கி , முழுங்கி விட்டு, uber la Taxi போட்டு, Thotla konda, buddhist monestry போனேன்.. அந்த taxi driver, hindhi ல அங்க எதுக்கு போறீங்க, அங்க ஒன்னுமே இல்ல, வெறும் lovers வந்து போவாங்க பார்க்க ஒன்னுமே இல்ல, என்று சொன்னதை தாண்டி, சென்றேன்,..

ரொம்ப அழகான சிறிய மலை குன்று, அந்த period la அவ்ளோ planning ஓட அமைந்திருந்த ,  அனைத்து கட்டிட அமைப்பும் வியக்க வைத்தது, planning designing material used and the methodology, Woww.. என்று வியந்து வியந்து பார்த்துவிட்டு , கீழ் வந்தால் வங்காள விரிகுடாவை மலை மேலிருந்து பார்க்கும் view அதி அற்புதம், cab return க்கு போட்டால்  கிடைக்கவில்லை, ..

4பேர் மூன்று bike ல  வந்திருந்தார்கள், lift கேட்டு  கீழே வந்தேன் அதில் ஒருவர் Ruchi konda beach வழி போறேன், drop பண்றேன் என்றார் , yes சொல்லி  அங்கே இறங்கி கொண்டேன், நான் இப்போ சென்னை வாசியாகி விட்டதால், அவர் raajasthan ஜெய்பூர் என்றார்..

Bye, பையா .. Thank you சொல்லிவிட்டு வெறும் 10 rs க்கு இஞ்சி tea குடித்து விட்டு, beach ல்  அமர்ந்து வேடிக்கை பார்த்து, திரும்பி வரும் வழியில், நிறைய கம்மல் வாங்கினேன்.. செம்ம cheap..

6 மணிக்கு அங்கிருந்து, கைலாசகிரி சென்று ரசித்து விட்டு, சில குட்டி பொண்ணுங்க solo travelers ஆ என்று கேட்டதற்கு பெருமையாக ஆமாம் சொன்னேன், திரும்ப Uber book செய்து காத்திருந்த நேரத்தில் ஒரு தம்புடு , நான் safe ஆக சென்று விடுவேனா என்று check செய்து கொண்டார்..

Road neat ஆக இருந்தது, பெரும்பாலும் குப்பை கண்ணில் படவே இல்லை, நல்ல reasonable ரேட்டுக்கு  stay.. good.. இரவு தங்கி இருந்த இடத்திற்கு அருகில் restaurant, treebo வினுடையது , சென்று சாப்பிடேன்... அந்த இசை சூழல் என் தனிமை எல்லாமே விரும்பி அனுபவித்தேன்..

முதல் நாள் இனிதே சென்றது 

Tuesday, August 4, 2020

மனசெனும் மாய(யா) விசை - 2

                                 


வானின் பெருவெளியெங்கும் அலைந்து திரிகிறது விசும்பு, மனம் போலவே...
அலைந்து  அலைந்து ஆழியின் உட்செல்கிறது மனம் போலவே....ஆலி
பிரவாகம் என பொங்கி படர்கிறது  மனமெலாம்....

ஜான்சியின் பூங்காக்களில் சின்னஞ் சிறுமியர் உதட்டு சாயத்துடன் கண்டிப்பாக நண்பர் அல்லது  கணவர் குழந்தையுடன் பார்க்க முடிந்தது..கல்விக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை என்பதை உணர முடிந்தது...

ஜான்சி ராணியின் கோட்டை அரண்மனை அரசாங்கத்தால் நடத்தப்படும் musium அனைத்திலும் ஜான்சியின் ராணி லக்ஷ்மி பாயின் பெருமைகள் உணர்வு பொங்க பார்க்க முடிந்தது... எப்போழ்தும் பெண்களின் வாழ்வு போராட்ட களமோ...

சைவ உணவு கிடைப்பது சற்றே அரிதாயிருந்தது..களிமண்ணும் சுண்ணாம்பும் கலந்து பூசப்பட்ட மேற் கூரையில்  சிதைந்த நிலையிலும் அழகுடன் பரிணாமளிக்கும் ஓவியங்கள்..

சிறிய அரண்மனை நகருக்கு மத்தியில உள்ளது அதன் வெளியில் வந்தால் சாலை   ஓரத்தில் தள்ளு வண்டியில் முக்காடிட்ட வயதான பெண்மணி ஒருவரின் தேனீர்  கடை இருந்தது... அவர்கள் ஒவ்வொரு முறையும் புதிதாக பாலை காய்ச்சி கண்டிப்பாக இஞ்சி போட்டு வெறும் ஐந்து ரூபாய்க்கு வாழ் நாள் முழுமைக்கும் மறக்க முடியாத டீ... அவரின் எளிமையான முகம் அப்படியே நெஞ்சில் இருக்கிறது..

கஜுராஹோ வில் வாடகைக்கு சைக்கிள் எடுத்து ஊரசுற்றினோம்.... என் நீண்ட தோள் பையை ஹாண்டில் பாரில் மாட்டியிருந்தேன்  ஒரு ஏற்றத்தில் பெடலில் கால் வைத்து ஏறி இறங்கும்போது பட் என்ற ஒலியுடன் ...நெஞ்சு முன் பாரில் ஓங்கி அடிக்க தங்கும் அறை வந்து பார்த்த போது அப்பளமாய் நொறுங்கி போயிருந்தது மொபைல் போன்...

உலகத்துடனான எல்லா தொடர்பும் துண்டிக்கப் பட்டது...whatsup ல் வேறு இல்லை, நாம் உயிரோடு இருப்பதே தெரியாதே... ஒவ்வொரு முறை தொடர்பு எல்லைக்கு அப்பால் செல்லும் போதும் எனது இறகுகள் விரிந்து கொண்டே பறந்தன...

Sunday, August 2, 2020

மனசெனும் மாயா(ய) விசை -1

                       

மனசு எது சார்ந்து இயங்குகிறது.. உடல்சார்ந்தா, உயிர் சார்ந்தா.. எவ்வாறு தவிர்த்திடினும் நினைவுகளால் எண்ணங்களால் அலைகளியும் மனதை எங்கு சென்று நிதானிப்பது ,பயணங்களிலா... ஆசை நிராசை விருப்பு வெறுப்பு  சுழன்று அடிக்கும் மாய(யா) விசை மனசே நீ தானா...

ஓர்ச்சா வின் சாலைகள் சுத்தமானவை , கஜுராஹோவிலிருந்து கிளம்பிய போது ஓர்ச்சா வரும் எண்ணம் இல்லை..கொரியன் ஒருவர் உடன் பயணித்தார்.. அவர் தான் ஓர்ச்சா பற்றி கூறினார்.. மத்தியப்பிரதேசத்தில் உள்ளது ஓர்ச்சா ..கிட்டத்தட்ட எழுநூறு வருடங்களுக்கு முன் குளியல் அறை கழிப்பறை என்று திட்டமிட்டு கட்டப்பட்ட பல அடுக்குகள் கொண்ட அரண்மனை (planned multi storied palace)..    ஓர்ச்சாவில் கோட்டையும் கோவிலும் அரண்மனையும் இருந்தது.. பெரிய கடாயில் காய்ச்சிய பால் இரவும் கிடைக்கும்..சற்றே அமைதியான ஊர்.. கஜுராஹோவிலிருந்து இரயில் வண்டி சிறிதே மெதுவாக நகர்ந்த போது இறங்கிகொண்டோம்..

காசியில் கிருஷ்ணமூர்த்தி (ராஜ்காட்)
பவுணடேஷனின், உலகளாவிய கூடுகைக்கு சென்றபோதுதான் கஜுராஹோ, ஓர்ச்சா, ஜான்சி க்கு பயணித்தது..

ராஜ்காட் க்ரிஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் பல ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது... வனத்தின் உள்ளே நடை பாதையில் நரிகள் எந்த இடையுரும் இன்றி நடமாடிக்கொண்டிருக்கும்... முகேஷ் குப்தா அந்த இன்ஸ்டிடியூடில் தான் இருக்கிறார்.. சிரித்த முகத்துடன் சிரிக்க சிரிக்க பேசும் அவரை மிகவும் பிடித்தது.. அப்படி ஒரு தோழமை...என்னை இஸ்ரேல் க்கு போக சொன்னார்.. அங்கே ஒரு commune இருப்பதாகவும் அந்த life style எனக்கு பிடிக்கும் என்றும் சொன்னார்...எல்லாவற்றையும் கேட்டுவிடுகிறதா மனது...

காசியின் நெருக்கடியான சந்துகளில் கடாயில் பால் காய்ச்சப் படுகிறது... மணிகர்ணிகாவில்   ஒன்றன் பின் ஒன்றாக இறந்த உடல்கள்  சிதையில் இடப்படுவதை கண்ணுற்ற இரவு தூக்கம் தொலைந்தது.. கங்கா ஆரத்தி ஒருபுறம் ....உடல் முழுக்க திருநீறு பூசிய நிர்வாண சாமியார்கள் .மிக மலிவு விலையில் நடையோர ஓவியங்கள் , சந்து சந்தாக நுழைந்து துப்பாக்கி ஏந்திய காவலர்களுக்கு மத்தியில் நடந்து காசி விசுவநாதரை வணங்குவது என்று காசி ஒரு வித்தியாசமான அனுபவம் தான்....ஆ அந்த படகில் போனோமே கங்கையில்...அந்த பாங் எனும் பணத்தை ருசிக்காமல் வந்தது இன்றளவும் வருத்தம் தான்...

இந்த கோரானா சமயத்தில் எவ்வாறு இருக்கும் காசி...

இந்தியாவில் எனக்கு பாண்டிச்சேரிக்கும் மணாலிக்கும் , ஹிமாச்சல்  பிரதேசத்திற்கும்,  ஸ்ரீ நகர் கும்,  ஹம்பிக்கும் கோகர்ணா விற்கும் இணையாக பிடித்த ஊர் கஜுராஹோ.....

ஊரே மோனத்தில் ஆழ்ந்து கிடக்கும்.... மக்கள் துயில் எழும்புவதே 7.00 க்கு மேல் தான் எந்த பரபரப்பும் இல்லாமல் அனாயாச பொறுமையுடன் இயங்கும் ஊர்...தெருக்கள் மிகவும் சுத்தமாக இருக்கும்...cycle வாடகைக்கு எடுத்துக் கொண்டு சுற்றினோம்... ஆம் காலையில்  ஊர் நடுவில் பெரிய குளத்தை பார்த்த படிக்கு ஒரு டீ கடை இருந்தது.. தினமும் அவர் நிதானமாக போடும்இஞ்சி டீ யில் தொடங்கும் நாள், இரவு ஒரு சிறிய மைதானத்தில்  கூடும் நடை வண்டி உணவகங்களில் முடியும்...ஒரே ஒரு wine shop இருந்தது... குட்கா போட்டு நிறைவடைந்து விடுவார்கள் போல...

ஒரு பழம் பொருட்கள் விற்கும் தனியார் கடை யில் மிகவும் வித்தியாசமான அழகான கைவினை பொருட்கள் கிடைத்தன...

அரசு தினமும் நடத்தும் நாட்டுப்புற நடன நிகழ்வு ஒன்று உண்டு..உண்மையின் உண்மையில் அவ்வளவு அற்புத நடனங்கள்..
கஜுராஹோ வின் light show மிகவும் பிடித்தது...

அழகான சிற்பங்கள்..அழகான ஊர்...



Wednesday, July 29, 2020

யாம்...


யாம் காற்றாய் சங்கமிப்பவர்கள்....
எம் இரவுகளின் காலங்கள் வானின் நீள அகலங்கள்...
நிலவும், புவியும், வெளியும் அற்ற போலிகள்.... கலாச்சார காவலர்கள் நான்கு சுவற்றிற்குள் மடியட் டும்...
யாம் முத்தங்களை நட்சத்திரங்களாய் விண்ணில் மிதக்கச் செய்வோம்...அவை புவியிறங்கி வண்ணத்துப்பூச்சிகளாய் மனிதம் வளர்க்கட்டும்......

Tuesday, July 28, 2020

                      Dancing of Birds ---- 4


செம்பூத்து எப்பவும் அருவி மரத்துக்கு வருகிறது..(greater coucal) அடர் செம்பு நிறத்தில் கருப்பு முழுவண்ணத்தில் கண் அடர் சிவப்பு நிறத்திலும் இருக்கும், ஏதோ மந்திரத்தை ஜெபிப்பது மாதிரி  ஒரு சப்தம்  கொடுக்கும்..எனக்கு செம்பூத்து பிடிக்கும்.. அது தேவேலோகப் பறவையாம்...அது மட்டுமில்லை எல்லாப் பறவைகளுமே தேவேலோகப் பறவைகள் தாம்...

இரண்டு தினங்களுக்கு முன் ஒரு மாலை நேரத்தில் வானம் கருமை படர்ந்து குளிர் காற்றுடன் மழைக்கு முன்னோட்டம் பார்த்துக்கொண்டிருந்தது நானும் ஜன்னல் வழி வானம் பார்த்துக்கொண்டிருந்தேன், மேகம் கூடிக்கொண்டிருந்தது ஒரே ஒரு கழுகு மட்டும் வானத்தில் மிக உயரத்தில் வட்டமிட்டுக்கொண்டிருந்தது..கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் அந்த உயரத்திலேயே பறந்து கொண்டிருந்தது..நான் தான் சோர்வுற்று வந்தமர்ந்து கொண்டேன்..

கழுகு அது பறக்கும் உயரம் எதையும் லட்சியம் செய்யா பயமறியா பார்வை ஏனோ கழுகை பிடிக்கும் ,  zoo வில் அடைத்து வைத்திருப்பதை கண்ணுறும் போது மனசுள்
சொல்ல முடியா அழுத்தம் தோணும்.. மடப்பசங்களா அதன் உயரம் வேறு அதன் பார்வை வேறு ஏன் இப்படி அடைத்திருகி றீர்கள் என்று தோன்றும்....கார்த்தி கிட்டே ஒரு தடவை சொன்னேன் ஏன் boss  VOC park ல அந்த hindu office பக்கம் வளைவு எடுத்து LIC சிக்னல் வர்றப்போ வெளிய இருந்து பார்த்தாலே zoo ல கழுகு அடைக்கப்பட்டது தெரியுமே பார்திருக்கீங்களா...

ஆமா boss பார்த்திருக்கேன்.. ஒரு case போட்டு அதை திறந்து விட சொல்லணும் பாஸ்..இல்லே night போயி பூட்ட ஓடைச்சிடுவோமா..இப்படியாக நாங்கள் பேசிக்கொண்டதுண்டு....கழுகிற்கு அது பறக்கும் உயரம் தெரியுமா....மழையும் காற்றும் கண்டும் தன் இடம் தேடி ஓடாமல் நிலை நின்று எப்படி பறக்கிறது...

நம் உயரம் என்ன இயல்பில் நாம் யார் சுற்றமும் சூழலும் புறந்தள்ளி இயல்பில் யோசிப்போமாயின் மூச்சு திணற அழுந்திக்கொண்டிருக்கும்  மனசோட சின்ன கதறல் கேட்கும்....

நேற்று திவ்யா phone ல ஸ்ரீ எங்கே... Hosur ல திவ்யா ..கோயம்புத்தூர் போகலியா?...இல்லே போல... ஏனோ coimbatore ரோட நெருக்கம் கொஞ்சம் வருசமாவே பயமுறுத்துது.. ஓடிக்கொண்டே இருக்கும் மக்கள் பெருக்கிக்கொண்டிருக்கும் வாகனங்கள் வளர்ச்சி வளர்ச்சி என்று வந்துகொண்டிருக்கும் பாலங்கள் விரிவு படுத்தப்படும் சாலைகள்... எதற்கோ தோண்டி மூடப்படும் குழிகள்...இதோ மற்ற அழிவின் பாதையில் செல்லும் பெருநகரங்களின் வரிசையில் கோவையும்...

கார்மேக குடையின் கீழ் பறக்கும் கழுகும்..மிக மெதுவாக தாழ பறக்கும் செம்பூத்தும்  கொஞ்சமாய் வீட்டுக்குள் எட்டிப் பார்த்துவிட்டு செல்லும் சிட்டுக்குருவியும்... இன்னும் மனிதர்களை தவிர்த்து தன் இயல்பில் வாழும் வேறு உயிரினங்களும் கூடி வாழும் இடத்தில் தான் ,, மனமே பூவாய் மலரும் வாழ்வை வாழ முடியும் இல்லையா….

Monday, July 27, 2020

                        Dancing of Birds ---- 3




 தன்னிச்சையாக சில கதவுகள் தாழிட்டு கொள்ளும் அப்படி நாவும் சிலசமயம் தன்னுள் அடங்கிக்கொள்கிறது..நா மூடிக்கொண்டால் மட்டும் மனம் அடங்கிவிடுகிறதா..அப்பொழுதான்  மனம்  அதிகம் பேசுகிறது...

தொட்டான்சிணுங்கி  செடியை (touchme not) பார்க்கும் பொழுதெல்லாம் அதை சீண்டிப்பார்பதுண்டு...நாம் தொட்டவுடன் இலையை மூடிக்கொள்ளும் நம்மிடம் கோபித்துக்கொள்வது மாதிரி ..என்ன மாதிரியான அற்புதம்அது, கண்முன்னே          உணர்வால்  தன்னை உணர்த்தும் உயிர்...

எதேச்சையாக தோழி ஒருவர் நீயா நானா நிகழ்வின் ஒரு பகுதியை காண்பித்தார் அதில் ஒரு பெண், தான் திருமணத்திற்கு  தன் தாய் வீட்டில் 50 சவரன் நகையும் 50 புடவையும் 50 செட் சுடிதாரும் கேட்டார்.. இன்னொரு பெண் தனக்கு தாங்கள் குடியிருக்கும் வீடும் அதற்கு சற்றே தொலைவில் உள்ள இடமும் தனக்கு பெற்றோர் கொடுக்க வேண்டும் எனவும்  365 புடவையும் 365 சுடிதாரும் கேட்டார்..நிகழ்வை நடத்தும் கோபிநாத் ஏன் அந்த வீடு எனகேட்ட தற்கு அதில் தான் வாடகை வருகிறது தான் வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்கலாம் என்றும் மேலும் ஒரு முறை போட்ட துணியை அந்த வருடத்தில் திரும்பவும் அணியக்கூடாது என்று தான் விரும்புவதாகவும் சொன்னார்..
உடன் camera இந்த பெண்களை பெற்ற அம்மாக்களை focus செய்கிறது.. அவர்கள் பெருமிதத்தோடு தங்கள் பெண்களை பார்க்கிறார்கள்..

தன் உரிமைகளை ஒரு பெண் கேட்பதை பற்றி இதில் கேள்வி எதுவும் எழவில்லை எனக்கு...ஒருவர் தன்னை உணர்தலும் தன்னை உணர்த்தலும் இவ்வாறா என்று கேள்வி எழுகிறது..

பரஸ்பரம் இருவர் விரும்புகின்றனர்.. பெண் தன் வீட்டில் கூற அவர்களும் பெண்ணின் விருப்பத்தை  மதித்து பிள்ளை வீட்டில் பேச அவர்கள் சாதி எல்லாம் தங்களுக்கு இணையானது தான் என்று விசாரித்துக்கொண்டு பின் எவ்வளவு பவுன் நகை போடுவீங்க என்றும் மாப்பிள்ளைக்கு இரண்டு பவுனில் செயின் மற்றும் திருமண செலவு முழுதும் பெண்வீட்டார் ஏற்று நடத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.. நன்றாக படித்து மிகவும் அழகாக இருக்கும் அந்த பெண்  நல்ல வேலையில் உள்ள அந்த பெண்ணின் வீட்டாருக்கு சற்று அதிர்ச்சியாக இருந்திருக்கிறது  பையனிடம்  பேசி பார்த்தபோது பெண் வேலைக்கு போக வேண்டுமா போகக் கூடாதா என்று அவரே முடிவு எடுப்பார் என்றும் தான் திருமணம் செய்து கொள்வதே தன் தாயை பார்த்துக் கொள்வதற்குத்தான் என்றும் கூறியுள்ளார்...

கொஞ்சம் சுதாரித்துக்கொண்ட பெண்ணின் பெற்றோர் இது செய்வது பெரிய விஷயம் இல்லை ஆனால் காதல் எனும் வார்த்தைக்கு நீங்கள் புரிந்து கொண்டது என்ன,  பரஸ்பர புரிதல் விட்டுக்கொடுப்பதும் இயல்பாக வரனும் அவர்கள் அம்மாவிற்க்கு மட்டுமே என்றால் உன் சுயம் எங்கு மதிக்கப்படும் என்றும் கேட்டுள்ளார்கள்..

Pre KG LKG UKG  மூன்று வருடங்கள் பள்ளி 12 வருடம் கல்லூரி 4 வருடம் கிட்டத்தட்ட 19 வருடங்கள் படிப்பு வாழ்வை பற்றிய எவ்வித பிம்பத்தை மனிதர்களிடம் உருவாக்குகிறது...

எல்லாமே வியாபாரம் பொருளாதாரம் தானா.. இப்படியான சிந்தனையில் ஒன்றாய் வாழ ஆரம்பித்தால் 50 வருட தாம்பத்தியத் தை வாழ்வது தான் எங்கனம்...

வாழ்வை, நிதர்சனத்தை தொலைத்து விட்டு வாழ்வின் சாயலில் ஏதோ ஒன்றில் வாழும்போது , நினைவில் கொள்ள வேண்டியது செயற்கை மலர்கள் மனம் தருவதில்லை  என்பதுதான்...

Thursday, July 23, 2020

                          Dancing of birds ---2


I want you to want me...
I need you to need me...
I'd love you to love me...
I"m begging you to beg me...
I want you to want me..

தினமும்  அணில்களுக்கென்று balcony யில் ஏதாவது வைப்பது வழக்கம். இங்கு எல்லா வீடுகளிலும் தென்னை மரங்கள் வீட்டுக்கு இரண்டாவது இருக்கிறது.. அணில் பயந்து பயந்து தான் வந்து அதற்கென வைத்த உணவை எடுக்கிறது.. யாரும்அங்கு இருப்பது தெரிந்தால் வருவதில்லை ஏன் மனிதர்களிடம் சக உயிர்கள் பெரும்பாலும் நெருங்குவதில்லை , எதனால் அவை விலகுகின்றது, பயந்து ஓடிப்போகின்றது...

காகமோ அணில்களோ நெருங்கி வராதா என்று ஏக்கமாக இருக்கும்...இயல்பில் கருணையை எங்கோ மனிதனிடம் இருந்து காவு வாங்கி விட்டது..சில விலங்குகளை பறவைகளை பழக்கப்படுத்தி வைக்கமுடியும் ஆனால் இயல்பில் இருக்கும் ஒரு harmony எங்கு போயிற்று...

இந்த பழக்கப்படுத்திய நடைமுறைகளுக்கு நாமும் பழக்கப்படுத்தப்பட்டு விட்டோம் ..வலைகளுக்குள் இருப்பதே பாதுகாப்பானது என்று உணர பழக்கப்படுத்தப் பட்டோம்..நடைமுறைகள் நம்மை சிந்திப்பதில் இருந்து விலக்கு அளித்து  ஒரு comfort zone  க்குள்  வைத்து விடுகிறது..

Little Forest "  ன்னு south korean  படம் பார்த்தேன்.. you tube ல இருக்கு sub title இருக்கு...ஒரு கவிதையான படம்..சொல்ல ஆரம்பிச்சா முழு கதையையும் சொல்லணும் ஒவ்வொரு காட்சியும் ஒரு மெல்லிசை தான்.அதுல ஒரு பொண்ணு வரும் , ஒரு சூழல் அவளை அவ கிராமத்தை நோக்கி நகர்த்தும்... அவோளோட பால்ய நண்பன் city ல  யாருக்காக தன் சுயத்தை இழந்து வேலை செய்யனுங்கிற  சிந்தனையில்  அவனோட நிலத்திலேயே அவன் வேலை செய்வான்...அந்த பெண் அவ அம்மா பத்தி கொஞ்சம் கொஞ்சமா  புரிஞ்சிக்கிறது ன்னு நிறைய உள் பயணங்களை கொடுத்த படம்....

 Shobin நடிச்ச அம்பிலி  அதே மாதிரி வேற ஒரு perception  கொடுத்த படம்....வானம் இறைச்சிட்டு போற மழைத்துளி மாதிரி ...வாழ்வை அதன் இயல்பியலோடு எந்த வட்டத்துக்குள்ளும் வலைகளுக்குள்ளும்  இல்லாமல் , நேர்மையாய் நம் விருப்பத்தை நோக்கி செயல்படும் வித்தையை நாமே தான் கண்டுபிடிக்க வேண்டும்.. அதை மட்டும் செய்து விட்டோமானால் நமக்கே நமக்கான வாழ்வில் நிமிடத்துக்கு ஒரு பூ மலர்வதை யார் தடுத்திட முடியும்....









Wednesday, July 22, 2020

                       Dancing of birds.. --------1




அடர்ந்து பெய்து கொண்டிருந்தது மழை..ஓசூர் அப்படித்தான்,மழை வரம் பெற்ற ஊர்...ரொம்பவும் மனசுக்கு பிடிச்ச ஊர்..எட்டி பிடிச்ச மாதிரி விவசாய நிலங்களும் கிராமங்களும் இருக்கிற ஊர்..மத்திகிரி தேன்கனிக்கோட்டை கும்ளாபுரம், தளி ன்னு சிறிய கிராமங்கள் இருக்கிற அழகான சூழல் அமைந்த ஊர்..ஜன்னல்  வழி மழை சுகம்..சற்றே முன்பு இரண்டு அணில்கள் கொஞ்சி விளையாடிட்டு இருந்தது, ஒன்ன ஒன்னு பிடிச்சு தள்றதும் என்னமோ பேசிக்கிறதும்,,, ஆ ரொம்ப நேரம் பார்த்திட்டு இருந்தேன்.. அப்பதான் மழை வந்தது...

நிறைய பறவைகளை இங்க பார்க்கமுடியும்  கொஞ்சநாள் முன்னாடி dancing of Birds அப்டின்னு ஒரு BBC documentary பார்த்தேன், அப்படி ஒரு அழகு ஓவ்வொரு பறவையும் வேற வேற வண்ணங்கள்ல , தீட்டப்பட்ட ஓவியங்கள் மாதிரி ...ஒவ்வொரு பறவையும் தனக்கான இணைக்காக அவ்வளவு மெனக்கெடுது, ஒரு பறவை தன்னோட இடத்தை  பூ வச்சு அழகா ஆக்குது..இன்னொரு பறவை தன் இடத்தில விழுந்த அத்தனை மரத்தின் இலைகளை சுத்தமா கூட்டி எடுத்த மாதிரி clean பண்ணிட்டு பத்து டான்ஸ் move ments  பண்ணி காமிக்குது தன் இணையை கவர்வதற்கு ,ஒன்னு விதம் விதமா பாட்டு பாடுது... ஒன்னு மிக நேர்த்தியா வீடு அதற்கான இருப்பிடத்தை கட்டுது ,  அதுங்க அத்தனையும் இயற்கை விதியை உணர்ந்து  வாழப்பழகிய உயிர்கள்..இன்னமும் நமக்கான இணையை யார் யாரிடமோ கேட்பவர்களாக அம்மாவும் ஆட்டுக்குட்டிகளும் நிர்ணயம் செய்யும் மனிதர்களாக இருக்கிறோம்.. இன்னமும் பணத்தை மதிப்பீடுகளை பார்த்து மனங்களை தொலைப்பவர்களாகிறோம்..

ஏன் நம்மிடம் மனம் என்பது கண்டுகொள்ளப்படா ஒன்றாகி விடுகிறது.. தாகூரின் ஒரு சிறுகதை சுபா என்ற ஊமை பெண்பற்றிய கதை அது..அவளின் எண்ணங்களையும் விருப்பங்களையும்  எவரும் கேட்கவும் மாட்டார்கள்.. அவளால் எதையும் கூறவும் முடியாது.. அவளது ஆசைகள் கண்ணீருடன் முடங்கிப்போகும்...ஆணாகட்டும் பெண்ணாகட்டும் கணக்கீடுகளின் அளவீடுகளுக்குள் எவ்விதம் வாழ்வை பொருத்தி பார்க்க முடிகிறது..

இப்படியான பார்வைகள் தான் இப்போதிருக்கும் இந்த நிலைதான் வாழ்வை சிதைத்துள்ளது...லச்சக்கணக்கில் LKG யில் கட்டிய  பணம்  addmission போட்ட பாவத்திற் க்கு bus fees குழந்தை இன்னும் பள்ளி செல்லவே இல்லை.. ஆனாலும் பெருமைகள் இன்னமும் விரிந்து கொண்டுதான் உள்ளது... உறவுகளில் மனிதன்  போடும் கணக்குகள் அதி நஷ்டமாய் அவனிடமே சேர்கின்றன என்பதை மனம் உணர்தலன்றி ஒருவர் அதை அறிய வாய்ப்பில்லை...

இப்பிறப்பில் வாழ்வை கடப்பதெனின் ஏதாவது ஒன்றை கட்டிக்கொள்ளுங்கள், வாழ்வை வாழ்ந்து பார்க்கவேண்டுமெனில் மனதினை உற்று நோக்குங்கள் அதனின் குரல் கேளுங்கள் வாழ்வு மலர்வதற்கு ...








Sunday, July 12, 2020


                        நீயும் நானும் அன்பே....




நீ weeping tree பார்திருக்கிறாயா? அழகான சிவப்பு மலர்களுடன் ஒரு வித்தியாசமான மரம் அது கொடிகள் சேர்ந்து மரமானது போல் பச்சையாக அருவி கொட்டுவது போல இருக்கும் அதன் பெயர் அருவி மரம் என்று நான் வைத்துக்கொண்டேன், பெயரே இல்லாவிட்டாலும் நல்லதுதான் தோரணம்போல சுருள் சுருளாக தொங்கிக்கொண்டு இருக்கும் அதன் ஒவ்வொரு சின்ன சின்ன கொடிகளும் ,  கொடிகள் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் பிணைந்து கொள்ளாமல் கிளைகளில் இருந்து கொடி உருவாகி உடனே அது பூமியை நோக்கி கீழே வழிகிறது, வானம் அதற்கு பொருட்டில்லை போலும், தினமும் இந்த அழகு அருவி மரத்தை சன்னல்களின் வழி பார்க்கிறேன், ஒரு குயில் அமர்ந்து கூவி விட்டு போகும் புல் புல் பின்னே தேன் சிட்டும் ஜோடியாக வருகிறது ஒருநாள் காகத்தை விட சற்று பெரிய ஒரு பறவை சாம்பல் நிறம்  வந்து அமர்ந்து விட்டு போனது...அணில் பிள்ளைகள் எப்போழ்தும் அருவி மரத்துடன் உறவாடிக்கொண்டிருக்கிறது....சிறியதான ஒரு பச்சைக்கிளியும் அங்கமர்கிறது...இதோ இவ்வருவி மரத்தைப்போல என் இதயம் வழிந்துகொண்டே இருக்கிறது இன்னும் பகிர்ந்து கொள்ளப்படாத பல்லாயிரம் வருடங்களுக்கான முத்தங்களுடன்....

Thursday, July 9, 2020


It's so enchanting
I'm trapped and drawing
Here for everyone want to see
They don't notice How far away i am
From everyone and everything
Silly to have gambled
With my heart out on the line
I guess that's just the way it goes
But I'm holding on
I know a day will come
WHEN I CAN BE MYSELF AGAIN
And hope someone will love me
When this story ends
Round in circles
Pointless wandering
And the crowds lines up again
Give a smile girl
You make them Happy
Bring your parents, bring your friend
Silly that a main attraction
Would long ao much for love
I guess that's just the way it goes
But I'm holding on
I KNOW A DAY WILL COME
When I can be myself againAnd i hope someone will love me
When this story ends
If some one could Someone right for me
Finds a way
To take me home again
I believe it
One day i will be home.....
Still I'm searching Round in circles
While the crowd lines up
Again....

A song from The little mermaid....


Sunday, May 31, 2020

என் இனிய தனிமையே....

ரொம்ப நாளும் கொஞ்சம் மாதங்களும் சிலவருடங்களுமாக android இம்சையில்லாமல் என் இனிய தனிமையேனு இருந்தது நல்லா தான் இருக்கு..இப்போ அந்த குட்டி phone லயும் batery bulge ஆயிடுச்சு... இன்னும் ஜாலி ..கொஞ்சமே கொஞ்சம் புத்தகங்கள், நிறைய படங்கள் நிறைய travel ன்னு life இனிமைதான்...leonaardo வ deep ஆஹ் love பண்றேன்...அவரோட பெரும்பாலான படங்கள் எனக்கு பிடிச்சிருக்கு.. body of lies.... Inception...Blood diamond..Once upon a time in hollywood, shutter island, ganges of new York...Baby வேற level... இந்த காற்றும் மலையும் ஆகாயமும் நீரும் நெருப்பும் இப்பெருங்காதலை வாழச்செய்யட்டும்...இறைச்சலில்லாத road கள் மனதுக்கு அமைதிய கொடுத்துச்சு...பால் சேர்க்காத tea பழகிடுச்சு..இறுக்கமா குரல் வளைய பிடிச்சிட்டிருந்த சூழல் மாறினது நல்லா இருந்தது... ம்ம்...மாற்றம் மட்டுமே மாறாமல் இருந்து இப்பெரும் புவியை வாழவைக்கிறது... hindi லயும் கலந்து கட்டி நெறைய படங்களை ரசிக்க முடிந்தது... ஆஹ் Badla, Thappad, Qurib quarib single, Thumbad,pan singh tomar, raazi... Irfan னோட தத்ரூபமானநடிப்பு இயல்பா character குள்ள அவர் travel பண்றது he is a legend... மலையாளம் ல Tohino thomas செம smart handsome lovely, அழகன்..shein நிஹம் நிஜமான கலக்கல் தம்பி நீ நல்லா வருவப்பா...trending ல இருக்கிற most மலையாளம் movies நல்லா இருக்கு..Ishq , android குஞ்சப்பன், Joseph, அய்யப்பனும் koshiyum, தொண்டி முற்றலும் திருஷாஷ்யமும்...உயரே, helan, கும்balangi nights, angamali diaries, driving license, trance, ...ஏராளமான ரசிக்க கூடிய படங்கள்..அது எப்படி Fagadh எந்த வட்டத்துக்குள்ளும்  இல்லாம...superb தலைவா...தமிழ் ல கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்...Oh my கடவுளே.. பார்த்தேன்.... ரெண்டுமே நல்லா இருந்துச்சு..

daily cards, chess, shuttle ன்னு time packed தான்...

வேறென்ன "Live Every Moment,
                          Laugh Every day
                          Love beyond words"...



Saturday, September 15, 2018

         இறந்து போகும் முன் வாழ்ந்து                                 போவோம்...(Part 2)

சரியோ தப்போ அவர்களை முடிவெடுக்க விடுங்கள்...எப்பொழுதும் நீங்கள் ஆதுரமாய் இருப்பதை உணர்த்துங்கள்...சொத்து காண்பித்து மிரட்டாதீர்கள்...ஐந்து ஓர் ஐம்பது வயதிலும்...பணம் வேண்டும் ஆனால் பணம் மட்டுமே வாழ்வாகா்து...படிப்பு வேண்டும் அது மட்டுமே வாழ்வு ஆகாது, அவர்களை தனியாக இயங்க ஊக்கப்படுத்துங்கள்...எந்த பாலினத்தையும் நேசிக்க கற்றுக்கொடுங்கள்...அன்பு தான் ஆதுரம்..வேறுபாடுகள் அகற்றுங்கள்...எதற்கும் நிர்பந்திக்காதீர்கள்...ஆனால் கண்டிப்பு காட்ட வேண்டியத்திற்கு காட்டுங்கள்...உங்களுக்கு பிடிக்காததால் அல்ல, அது  பொது நன்மை கருதியதாக இருக்கட்டும்...

பாலினம் என்று வரும்போது அது எந்த பாலினமும்  நேசிப்பு காட்ட வேண்டியது தான் ஆம் சிறு வயதில் ஆண் பிள்ளைகள் பெண் பிள்ளைகள் கலந்தும் அல்லது அவரவர் தனித் தனியாக விளையாடி வந்தனர், பெண்ணும் ஆணும் பழகுவதையே தப்பாய் புரிந்து தடை செய்யும் சமுகத்தில்... ஆணும் ஆணும் இல்லை பெண்ணும் பெண்ணும் என்பதை எப்படி ஏற்கும்....ஆனால் இயற்கையில் எல்லாம் இயல்பே...சாதாரணமாக ஒரு ஆண் இன்னொரு ஆணையோ ஒரு பெண் இன்னுமொரு பெண்ணையோ ஈர்த்து விட முடியாது, எல்லாம் கடந்த ஒரு ஈர்ப்பு இருக்கவும் தான் அவ்வாறு அவர்கள் இருக்கிறார்கள்....எதையும் மதிப்பது அன்பு செலுத்துவது அடிப்படை பண்பு....இதில் உயர்வோ தாழ்வோ...வெறுப்போ ஏன் வரவேண்டும்....உங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி இருங்கள்...உண்மையாக மனப்பூர்வமாக ,அதில  மதிப்பிடலுக்கு இடமில்லை....

கட்டாயமாக ஒரு வாசக கூடம் , ( Libraury) இன்றே உங்கள் வீடுகளில் தொடங்கட்டும், படிப்பவர்களும் எழுதுப்பவர்களும் இந்த நாட்டில் தான் மிக கீழாக மதிக்கப் படுகிறார்கள்...அவன் பான்பராக் விற்று கோடி சம்பாதிக்கலாம் ஆனால் ஒரு புத்தகம் படிப்பவனோ எழுதுபவனோ அந்த மரியாதையை பெற்று விட முடியாது...எந்த சமூகம் புத்தகங்களை எழுத்தாளர்களை நல்ல எழுத்துக்களை ஆதரிக்கிறதோ அது உயர்வான சிந்திக்க தெரிந்த தவறி விழுந்தாலும் எழுந்து நடக்கும் சமூகமாகிறது....சிறிய புதகங்களுடன் ஆரம்பியுங்கள்...நம்முடைய, அடுத்தவரின் கலாச்சாரம் பண்பாடு வாழ்க்கை முறை மனித நேயம் எல்லாம் அறிந்து கொள்ளுங்கள்...விவாதியுங்கள்...எதுவும் உயர்வோ எதுவும் தாழ்வோ இல்லவே இல்லை...மனித நேயம் மட்டுமே மானுட அன்பு மட்டுமே உண்மை நிரந்தரம் எல்லாமும்....

மனதை திறந்தே வையுங்கள்...அன்புக்காக ஒரு குழந்தையாவது தத்து எடுப்பதை, மனப்பூர்வமாக்கி கொள்ளுங்கள்...சுயநலம்  வேண்டாம் தான் எனது என் குழந்தை என் குடும்பம் என் சொத்து .....மாட மாளிகையும் கூட கோபுரங்களும் அழிந்து மண்ணாய் போயின...எதுவும் நிரந்தரம் அல்ல...புவிதம் மீனாட்சி அம்மாளுக்கு 3 குழந்தைகள்...ஒருவர் மட்டுமே அவர் பெற்ற குழந்தை மற்ற இருவரையும் அவர் தத்து எடுத்துக்கொண்டார்..ஏதோ பேச்சு வரும்போது தது எடுத்த குழந்தை கேட்கிறது அம்மா நான் எங்கிருந்து வந்தேன் என்று அதற்கு அந்தம்மா நீங்கள் இருவரும் என் இதயத்திலிருந்து வந்தீர்கள் , அவள் என் வயிற்றில் இருந்து வந்தவள் என்று...ஏனோ அது கேட்டு அந்த ஆழ்ந்த அன்பு கேட்டு எனக்கு அழுகை வந்தது...ஆம் நண்பர்களே....ஒரு குழந்தையாவது இரண்டு குழந்தையாவது தத்து எடுங்கள்...அன்பை இதயத்தில் ஏந்துவோம்..

 இறந்து போகும் முன் வாழ்ந்து போவோம்.. அன்பைத்தூவி........ஸ்ரீ Prajna....
          இறந்து போகும் முன் வாழ்ந்து                                  போவோம்....(Part 1...)

1. I Love Nature, 2. I Love Music , 3. I love Reading Books, i write stories   4. I love Travelling.,Trekking..5. I Independent, Confident 6. I love paintings ,Sculptures , photography...7. I love Gud movies i use to watch it, 8. I love Meditation , knowing myself, philosophical interactions..Knowing Ramanar Jk Osho Gurdjieff Periyaar.,9. I love Farming I love trees plants flowers 10., I love Poems , i write poems, that cherishes my inner soul....These are my interest ..When ur time allows write urself nd ur family members too..Its fun nd one can find their interests...Simple yet useful ....

🍁🍁🍁🍁🍁🍁இவ்வளவு நாட்களாக நீங்கள் இதில் ஏதாவது ஒன்று கூட பண்ணாவிட்டாலும் பண்ணியிருந்தாலும் தொடர்ந்து அதை மேம்படுத்துங்கள்..உங்களை நீங்கள் மலர்வாக வைக்க...🍁🍁🍁

🍁🍁🍁நம் மனதுடன் ஒன்றிய நாம் விட்டுவிட்டு வந்த சில விளையாட்டுகளை குழந்தைகளுடன் விளையாடலாம்....1. கபடி,  2. பம்பரம் விடுவது, 3. நொண்டி விளையாட்டு, 4. கோபி மிஸ் கை சேர்த்து சுத்துதல்..5.. கல் வைத்து விளையாடுவது...6.ஒளிந்து விளையாடுதல்...இன்னும் பல நல்ல விளை யாட்டுகள் நம்மை குழந்தைகளையும் TV, Computer games, mobile games கிட்டே இருந்து காப்பாத்தும்..

🍁🍁🍁நாமும் சில விசயங்கள் அவர்களுடன் செய்தும்   குழந்தைகளை ஒருங்கிணைத்தும் கொடுத்தல் அவசியம்...வீட்டின் கதவுகளை தாளிடாதீர்கள் அனைத்து குழந்தைகளுக்காகவும் திறந்து வையுங்கள்..சிறிய Libraury அமையுங்கள் குழந்தைகளுக்கான உங்களுக்கான சில புத்தகங்கள் வாங்கி படியுங்கள்.... அவர்களுக்கும் சொல்லுங்கள்...வனிதாமணி எனும் ஈரோடு பெண்மணி அதை சிறப்பாக செய்து வருகிறார்...கண்டிப்பாக தாய் மொழியில் படிக்க வையுங்கள்..நல்ல புரிதல் வரும், அப்ப தான் நம்மையே வேற்று கிரக வாசிகள் மாதிரி பார்க்க மாட்டார்கள்....எல்லா மொழியையும் நேசிக்க கற்றுக்கொடுங்கள்.ஆங்கிலத்தையும் இன்னும் அவர்களுக்கு பிடித்த மொழிகளெல்லாம் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யுங்கள்....நீங்க govt அல்லது medium Aided பள்ளியில் படிக்க வைக்கும் போது உங்களிடம் காசு இருக்கும்....மிருதங்கம் , வாய்ப்பாட்டு, நீச்சல் ,கராத்தே சிலம்பம் இன்னும் எதில் அவர்களுக்கு ஆர்வமோ அதை எளிமையாக யார் கற்று கொடுகிறார்களோ அவர்களிடம் கற்றுக்கொள்ளட்டும்....அவர்களை கதை படிக்கவும் சொல்லவும் ஊக்குவியுங்க்ள்....
🍁🍁🍁கொஞ்ச நேரம் என்று relax என்று கருமம் பிடித்த Tv பார்ப்பதை தவிருங்கள்...குழந்தைகள் நாம் உருப்பட்டு விடலாம்.. குறைந்த பட்சம் கண்ணாடி போட வேண்டாம்....

🍁🍁🍁🍁🍁🍁 தாய் மொழி கல்வி,,,வெறி அல்ல...புரிந்து கொள்வதும் புரிந்து கொள்வதை கிரஹிப்பதும் சுலபம்..அக்குழந்தை அதன் சுயத்தை அடைய தானாக நிற்க பழகும்...எல்லா மொழிக்கும் சிறப்புண்டு அதை ம்திக்கவும் விரும்பினால் கற்றும் கொள்ளலாம்...ஆனால் தாய் மொழி நாம் நம் சுயத்தை கண்டடைய உதவும்...தாய்ப்பால் மாதிரி...


🍁🍁🍁🍁🍁🍁 Interest வேறு Qualities வேறு, Qualities ல Giving , ( ஈகை, இரக்கம்), Sharing, ( பகிர்தல், பகிர்ந்து உண்ணுதல்) , Kindness, ( நல்ல பண்புகள்).... Qualities has to come by birth nd u could improve it in  nd brought up...When the parents start doing it children will follow them Easily... பாரதியாரின் பாடல்களில் ,' ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது, பாப்பா கூடி விளையாடு பாப்பா சிறு குழந்தையை வையாதே பாப்பா.......ஒள்வையின் 'அறம் செய விரும்பு,, எல்லா குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்...It has all whole content of humanity...Nd self improvement...

கூடி விளையாடும் குழந்தை வேறுபாடு காணாது, நீங்கள் அதற்கான முன்னெடுப்பை செய்யுங்கள்,  பெரியம்மா வின் சித்தப்பாவின் ஐந்தாவது பேரனின் ஆறாவது காது குத்து ஏழாவது மொட்டை , நான்காவது சித்தியின் 2வது பேரனின் Birthday க்கு சென்று அவர்கள் வாங்கிய வீடு...car, நகை இல்லை இனி வாங்கப்போகும் car வீடு நகை இல்லை வந்த சுகர் வரப்போகும் BP piles இத்தியாதிகள் பற்றி பேசி  பெருமை பட்டுக் கொள்ளும் கூட்டத்தில் இருந்து நீங்களும் குழந்தைகளும் சாக்கிறதையாக விலகுங்கள், நம்மை புரிந்து கொள்ளதாவர்களிடம் விலகி இருப்பது கூட நமக்கு நாம் செய்து கொள்ளும் நன்மை தான்....நேற்று ஒரு வனத்தில் சிறிய பறவை பார்த்தேன் அவ்வளவு உயரம் பறக்கும் பறவை...ஆனால் மனிதனால் முடியாது அதை பார்க்கத்தான் முடியும்...ரமணாஷரமத்தில்  நாய்கள் கூட அமைதியாக வந்து சில விஷயங்கள் கேட்டு விட்டு போகும்...நல்லவற்றை உணர்வது, படிப்பது, சிந்திப்பது, செய்வது எல்லாம் காலம் நேரம் பார்க்காமல் செய்யவேண்டும்...அதற்கு காலம் வரும் என்று பார்த்தால் நம் கால் களும் நடப்பது அற்று தொய்வாய் அடுத்தவர் உதவி எதிர் பார்க்கும் மாதிரி ஆகிவிடும்...உங்களுக்கு ஆன நல்லதை இன்றே செய்யுங்கள்....அவர்களை பார்த்து விட்டு car updation போய் கடனில் மாட்டிக்கொள்ளாதீர்கள்...பொது நிகழ்வுகளுக்கு வாருங்கள்....
                Conditions. Apply..🍁🍁

அம்மா அப்பா ஆசை பட்டார்கள்.....பிறந்தோம்🍁..அவர்களே ஆசைப்பட்டார்கள் உடை உடுத்தினோம்🍁..அவர்களே பிரியபட்டார்கள் பள்ளியில் சேர்ந்தோம்..அவர்களுக்கே பிடித்த பிரிவில் பட்டமும் வாங்கினோம்🍁 கவுரவதுக்கு சில வேலை, கவுரவம் போகும் என்று சில வேலையிலும்  இருந்தோம்.. 🍁திருமணம் கட்டாயம் பண்ணிக்கொண்டோம்... இனி கணவருக்காக// மனைவிக்காக வாழ்வோம் வாழ்வோம்...🍁அவர்களின் விருப்பத்தில்  பிள்ளைகள் பெற்றுக்கொண்டோம்...இனி பிள்ளைகளுக்காக வாழ்வோம் வாழ்வோம்..🍁ஒட்டுமொத்த குடும்பம் ஒட்டு மொத்த சமுதாயத்துக்காக வாழ்வோம் வாழ்வோம்...🍁எதை வேண்டுமானாலும் செய்...நியதிகளுக்குட்பட்டு...🍁இறந்த பின் படையலில் விருப்ப பொருட்கள் இருக்கும் இருக்கும்..🍁 அனுபவித்துக்கொள்ளலாம் .....ஆமென்...ஸ்ரீ Prajna

Wednesday, September 5, 2018



                    நானும் கடவுளும்...

 🍁🍁🍁 சிரித்துக்கொண்டே இருக்க ஆசைப்படுகிறேன்...நியாயம் தான் , பைத்தியம் என்பார்கள்...என்று கடவுள் பதிலளிக்கிறார்...🍁🍁🍁நீ இல்லை என்று கூறுகிறார்கள் என்கிறேன்.... ஆமாம் என்று சிரித்துக்கொண்டே இருக்கிறார் கடவுள்....🍁🍁🍁இந்த உலகத்தில் ஒரே ஒரு அன்பு தான் உள்ளது...என்கிறேன்....அப்பாத்திரம் காலியாக உள்ளது என்கிறார் கடவுள்... 🍁🍁🍁மனதை சிறைபடுத்த நான் முயலுவதில்லை
எப்பொழுதும் எப்பொழுதும்.... 🍁🍁🍁மலை உச்சி எனக்கு மிகவும் பிடிக்கும்,
திரும்பவும் பேசப்படும் அன்பு....மலை உச்சியிலிருந்து தற்கொலை செய்துகொள்கிறது.... கடவுளும் காணாமல் போய்விட்டார்.....ஸ்ரீ Prajna