திரு.சுந்தரராமசாமி அவர்களோட "ஒரு புளியமரத்தின் கதை" படிச்சேன்..ஒரு புளியமரதுக்குள்ளேயே
இவ்ளோ கதையும் நிகழ்வுகளும்னா கோயமுத்தூர் மேட்டுபாளையம் ரோட்டில் ஓராயிரம் புளிய
மரங்களை வெட்டினாங்க எவ்ளோ கதையிருக்கும் ஒவ்வொரு மரத்துக்குள்ளேயும்..
அவினாசி ரோட்ல வெட்டின மரங்கள் தனிக்கணக்கு ..எல்லாவற்றிற்கும் மௌன சாட்சியாய்
யாருக்கும் தொந்தரவு தராமல் நின்றிருக்கும் மரங்களைமனிதன் மட்டுமே எதிரியாய் பார்கிறான்
மேட்டுபாளையம் ரோட்டில் ஒவ்வொரு மரமும் வெட்டப்பட்ட போது அதுகொடுத்த நிழலையும் சுத்தமான காற்றையும் சுவாசித்த அத்தனைபேருக்கும் இதயம்
வலித்திருக்கும்..
அங்கு வரிசையாய் வைத்திருந்த மரங்களின் பின்னால் இருந்த காரணம் ஒன்று தான்..மேட்டுபாளையம் ரோட்டில்இருந்த தொழிற்சாலைகளில் இருந்து வழி வந்த நச்சுக்காற்றை தூய்மையாக்கவே
நடப்பட்டது அம்மரங்கள் ..கோடையின் அத்துணை வெயிலிலும் கவுண்டம்பாளையம்
தாண்டியவுடனே குளிர் காற்று இதமாய் தாலாட்டும் ..இனி அதை கண்டிப்பாய் அனுபவிக்க
முடியாது
வேகத்தோடு ஆக்ரோஷமாய் களமிறங்கும் நவீன கருவிகள் போட்டிபோட்டுக்கொண்டு
மரத்தை கூறுபோடுகிறது..இப்படியாக வெட்டப்படும் மரங்கள் வேறு எங்காவதுநடப்படுகிறதா? மேட்டுபாளையம் ரோட்டில் வெட்டி விட்டு மேற்கு தொடர்சிமலையில் நடுவார்களோ ?காடுகளையும் அழித்து வருவதாக (35%)கோவையில் மட்டுமே காணோமாம் ..
அரசாங்கத்தை குறை சொல்வது இருக்கட்டும் எத்தனை பேர் வீடு கட்டும்போது மரம் செடி கொடின்னு வைக்கறதுக்கு இடம் விட்டு கட்டுகிறோம்..எல்லாத்தையும் வளச்சு பக்கத்து வீட்டுக்கறாங்க இடத்திலேயும் சேர்த்து கட்டி வாடகைக்கு விட்டா தானே ஒரு திருப்தியே???
ஒருநாள் இரவு கவுண்டம்பாளையம் தாண்டி சேரன் நகர் போய்கொண்டிருந்தபோது ஒரு புளியமரத்தை சுற்றி குழி வெட்டி வச்சிருந்தாங்க..சரி எடுக்கிறதுக்கு ரெடி ஆயிட்டங்கன்னு மனசு நொந்து நினைச்சிட்டு போயிட்டேன்...
ரெண்டு நாள் கழிச்சு காலையில் வரும்போது மரம் வெட்டப்பட்டு துண்டாக்கப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டு கொண்டிருந்தது ..அதன் வாசம் காற்றெங்கும் பரவி இருந்தது அதன் கடைசி மூச்சு சொன்னது இந்த தவறுக்கான தண்டனையை மனித இனம் அனுபவித்தே தீருமென்று ..
வெட்டப்படும் மரங்களுக்கான குழி நாளைய மனித இனத்துக்கும் சேர்த்திதான் ..நடமாட முடியாத வாய் பேசமுடியாத உயிருள்ள ஜீவனே மரங்கள் எனும் மகாத்மாக்கள் .
வெட்டுவது என்பது அவசியமாகும்பொழுது நடுவது அத்யாவசியமாகிறது. இப்படி அவசியம் கருதி வெட்டப்படும் ஒரு மரங்களுக்கு பதிலாக 10 மரங்களை வளர்க்க முயல வேண்டும். நிறப்பிரிகை அருமை... எதாவது ஒரு வரியோடு நிருத்தியிருந்தாலும் கூட அர்த்தம் விளக்கும் படம், அருமை.
ReplyDeleteஎங்கே வைப்பது ..ரோடு போட்டு முடிந்தவுடன் எல்லா கடைக்காரர்களும் முன்னால் வந்து விடுவர்..அவினாசி ரோடு பார்த்தீர்கள் தானே..ஆனாலும் எதாவது செய்யவேண்டும் ...என்னுடைய பதிவுகளுக்கான படங்கள் அனைத்தும் ஏன் உயிர் தோழி செந்தில் பாவை அவங்க எடுத்தது ..நான் இப்படி கிறுக்குவேன்னு தெரியாம எடுதிட்டாங்கன்னு நினைக்கிறன் முரளி..தேங்க்ஸ் ப்பா..
ReplyDeleteஅவசியமான பதிவு ஸ்ரீ. ஏதோ நம்ம பங்குக்கு, இன்னிக்குதான் வீட்டுக்கு முன்னாடி ஒரு மரம் நட்டோம்...
ReplyDelete@Sugirtha
ReplyDeleteஎன் அன்பு சுகி
நிறய மரம் வேண்டும் .நிறய பறவைகள் வேண்டும் ..ரொம்ப நல்லாஇருக்கும்..Thanks pa
படித்ததும் வருத்தமாக இருக்கிறது. முன்னேற்றம் வசதி என்ற பெயரில் கண்மூடும் முரணைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
ReplyDelete@அப்பாதுரை..
ReplyDeleteநன்றி சார்..உங்கள் வருகைகும் கருத்துக்கும்..நம்மால் முடிந்த்தது ஒரு மரமாவது வளர்க்க வேண்டும்.....