Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Wednesday, September 7, 2011

வானம்...பாடி..

எனக்கு வானம் ரொம்ப பிடிக்கும்..எல்லாவற்றயும் ஒரு குடையின் கிழ் தாங்கும், சகலமாயும் சர்வமாயும் பரந்து விரிந்து கிடக்கும் அதன் பிரம்மாண்டம் என்னை பிரம்மிப்புக்குள்ளாக்குகிறது..வானம் பார்க்க எல்லா நேரமும் பிடிக்கும் என்றாலும் அதிகாலை, மதியதுக்கு மேல், இரவு ரொம்ப நல்லாயிருக்கும்..இதோ என் வானம்..




அடர்ந்த மரத்தின் நிழலின்
கிளையினூடே
கீழிருந்து தெரியும்
திட்டுத் திட்டாய் வானம்...

அடர் நீலம்,இள சிவப்பு
வெள்ளையும், சாம்பலும்
என வண்ணம் காட்டும்
அழகு வானம்

கர்ப்ப ஸ்திரீ போல்
கார்கால முகிலை
சுமந்து திரியும்
தாய்மை வானம்..

நானே அனைத்தும்
எனக்குள் எல்லாம் என்று
எட்டுத்திக்கும் திரியும்
சுதந்திர வானம்

மாறிக்கொண்டேயிருக்கும்
பாவனையும் கலைத்து
கலைத்து போடும் கோலமுமாய்
சிதறிக்கிடக்கும் சிங்கார வானம்

இரவில் விண்மீனயும்
வெள்ளியயும் உடுத்தி
வேறோர் உலகம் காட்டும்
விந்தை வானம்

கதிரவனுக்கு உதயம்
கொடுத்து நிலவுக்கு இடம்
கொடுத்து பூமியை உயிர்பிக்கும்
நித்ய வானம்

மண்ணை அளக்கலாம்
மழை நீரை அளவிடலாம்
காற்றை கட்டுப்படுத்தலாம்
எல்லைகளில்லாமல் ஏகாந்தமாய்
விரிந்து கிடக்கும் வானத்தை...



6 comments:

  1. நல்லா இருக்கு கவிதை/வானம்...

    //இரவில் விண்மீனயும்
    வெள்ளியயும் உடுத்தி
    வேறோர் உலகம் காட்டும்
    விந்தை வானம்//
    எனக்கும் ரொம்ப பிடிக்கும்...

    ஆனா அந்த காத்தையும் தான் சுதந்திரமா விடுங்கோளேன்.. ஏன் கட்டுபடுத்தனும்? ;)

    ReplyDelete
  2. @sugi..

    என் அன்பு சுகி உனக்கு காற்று மிகவும் பிடிக்கும்..உனக்கு பிடித்ததை கட்டுப்படுத்த வேண்டாம்..விட்டு விடலாம்பா...

    ReplyDelete
  3. கர்ப்ப ஸ்திரீ போல்
    கார்கால முகிலை
    சுமந்து திரியும்
    தாய்மை வானம்..

    Superrrb pa!!!!

    Keep writing!!

    ReplyDelete
  4. @RagavSri..

    ஹே நீ தானே..நான் கண்டுபிடிச்சிட்டேன்...thank u RagavSri..

    ReplyDelete
  5. அன்புள்ள shriprajna,

    உங்களுடைய கவிதை எனக்கு ரொம்பவும் பிடித்தது.
    இந்த வார வலைச்சரத்தில் உங்கள் பதிவையும் கவிதையையும் பகிர்ந்திருக்கிறேன். நன்றாக எழுதுகிறீர்கள். நிறைய எழுதுங்கள். மிக்க நன்றி.

    கீழிருக்கும் link வலைச்சரத்தில் உங்கள் கவிதையை
    நான் பகிர்ந்த பதிவைப் பற்றியது.

    http://blogintamil.blogspot.com/2011/12/gigo-theory.html

    ReplyDelete