மலைய பார்க்கிறப்போ அதோட பிரமாண்டம் சிலிர்க்க வைக்கும்.அமைதியா உறுதியா நின்னிட்டு இருக்கிற மலை மனசுக்குள்ள, ஒரு அதிர்வை உண்டுபண்னுது.. ஒன்னுமே இல்லாம அந்த மலையோட ஒன்றிப்போகத் தோனுது..
கோயமுத்தூர்ல மேற்க்குத்தொடர்ச்சி மலை, எந்த ஒரு,கொஞ்சம் உயரமான எடத்தில, நின்னு பார்த்தாலும், அட்டகாசமாத் தெரியும்..அதுவும் கணுவாய் ரோடு, அந்த மலை அடிவாரத்த, ஒட்டியே travel பண்ணும்..கொஞ்சம் தூரம் போனாலே அழகு கொஞ்சும் மலையயும், ஆனைகட்டி வழியா போனா, ஒரு அருமையான, climate ம் enjoy பண்ணலாம்
அனு கூப்பிட்டு “பெருமாள் முடி” ன்னு ஒரு peak trekking போறோம்னு சொன்னப்போ கொஞ்சம் பயம் வந்தது நம்மால ஏறமுடியுமானு.. சரி மனச தளரவிடம try பண்ணுவோம்னு விட்ட yoga. மாடிப்படி ஏறி எறங்கறத்து, skipping ஆடறதுன்னு சின்ன சின்ன exercise எல்லாம் செஞ்சு என்னை தயார் பண்ணிகிட்டேன்..
பத்துபேர் மாங்கரைல இருந்து காலைல 9.30 மணிக்கு ஆரம்பிச்சோம். ரெண்டுபேர் forest ஆளுங்க கூட வந்தாங்க.. கொஞ்சம் தூரம் போனவுடன் மலைப்பாதை ஆரம்பிச்சது.. தஸ்புஸ் ன்னு வாங்கின மூச்சுல, hope காணம போக ஆரம்பிச்சது.. ஏறி கால்மணி நேரம் கூட இருக்காது, இன்னும் எவ்வளவு தூரம்னு guide கிட்ட நைக்க ஆரம்பிச்சேன். ஆனாலும் சாமார்த்தியமா இதோ வந்துடுச்சு அதோ வந்திடுச்சுன்னு சொல்லி சொல்லியே கூட்டிட்டு போனாங்க..
ஒத்தையடிப் பாதை யாக, இடை இடையே மரங்களின் கிளைகள் குறுக்கிட நடந்திட்டிருந்தோம். என்ன animals இருக்குன்னு கேட்டதுக்கு, சிறுத்தை,யானை, கரடி இருக்கும்னு சொன்னாங்க. கொஞ்சம் ஏதாவது சலசலப்பு கேட்டாலும் திக்குன்னுது..போயிட்டே இருக்கோம் பெருமாள் முடி மட்டும் வரவேயில்லை..
அப்பதான் சரியான பாதிதுரத்துக்கு வந்திருந்தோம். rest எடுத்திட்டு மறுபடியும் ஏற ஆரம்பிச்சோம்.. இடை இடையே சாப்பிட்றதுக்கு மல நெல்லிக்காய், நவாப்பழம்னு super taste ல fresh ஆ கெடச்சுது. சாப்பிட்டு ஏற அவ்வளவா tired ஆகல..
கொண்டு போன தண்ணி எல்லாம் தீர்ந்து போக சுனை இருக்கிற இடம் பார்த்து கூட்டிப்போனாங்க..அந்த நேரத்தில climate சட்டுனு change ஆகி light ஆ drizzling ஆரம்பிச்சுது அவ்வளவு அருமை.. ரொம்ப கஷ்டப்பட்டு ஏறிட்டு இருகிறப்போ அந்த drizzling ஆனந்தமா இருந்துச்சு..அங்க கெடச்ச தண்ணிக்கு equal ல எந்த tasteம் இருக்கல. இளநீர் விட ஒரு sweetness இருந்துச்சு அந்த தண்ணீரில..
கொஞ்சம் rest எடுத்திட்டு செங்குத்தான மலையில் திரும்பவும் ஏற ஆரம்பிச்சோம்...பிடிக்கவும் புல் தான் கெடச்சுது.. sss at last, we have reached the point.. அவ்வளவு சந்தோசமா இருந்தது..கிட்டத்தட்ட 4 மணி நேரமா ஏறி இருப்போம்.
அது ஒரு செங்குத்தான பாறை. அப்படி பெரிய base எதுவும் இல்லாம நின்னிட்டிருக்கிறது. ஆச்சர்யம் தான். இந்த பாறைய சுத்தி வர கொஞ்சமெ கொஞ்சம் இடம் இருந்தது.சாமி மாதிரி நெறைய வேல் வச்சிருந்தாங்க. அங்கிருந்து இறங்க ஆரம்பிச்சப்போதான் பசி எடுக்க ஆரம்பிச்சது.
ஒருபுறமா ஏறி மறுபுறம் இறங்கி தூமனூர் வரும்போது ஏறக்குறைய இருட்ட ஆரம்பிச்சிடுச்சு.அங்கே night தங்கினோம்.மொத்தமே 15 வீடுகள்தான்...basic needs இல்லாத ஒரு அழகான village..காலைல ரெண்டு பாட்டில் தண்ணீரில் எல்லாத்தையும் முடிச்சிட்டு ஊர் நிறைய சிட்டுக்குருவிங்களும் ..பார்த்திட்டு, மனசில்லாமல் அங்கிருந்து கிளம்பினோம்...
என்னடா ரொம்ப சீக்ரம் முடிச்சுட்டே? இன்னும் நீ எழுதிருக்கலாம். சிட்டுக் குருவிகள் ரொம்ப அழகா இருக்கு. மத்த பதிவுகளையும் உடனே எழுது...
ReplyDeleteS da..it's true.. actually i was start writing this two months ago, net issue i couldn't make it in correct time.. now i got bored and really we had a good timings there..we had a moon light "UPPUMA" and morning we went for a walk we saw different types of birds..we had return, back through "sarcon".That's also a thrilling experience..
ReplyDeleteExcellent.. continue ur writings for Mukurthi also.
ReplyDeleteThank you.. Srinivas.. have to write...
ReplyDelete