ஓடிஷா ஒரு அமைதியான கலாச்சார மையம், ஒரு பயணத்தின் வழி மனம் மலர்வதைத் தவிர வேறென்னாவாயிருக்க முடியும், ஓடிஷாவின் கோவில்கள் கட்டிட கலையின் ஆகச் சிறந்த படைப்புகள்..ஜெகன்னாத் பூரி முதல் கொனார்க் வரை ஒரு முகம் காட்டும் ஓடிஷா ரகுராஜ்புர் முதல் பிப்லி வரை வேறு நிறம் காட்டும் ....கோவில்கள், கிராமங்கள் கடற்காற்று , கலை நிலம் என்று மணலும் மரபு பேசும் மனதில் நின்ற பயணமாக அமைந்தது.....நானும் எதிர்பாராதது...
ஏனோ சிரித்த முகம் மலர்ந்த ஆண்களை நான் பார்க்கவில்லை,பெண்கள் அப்படித்தெரியவில்லை...புபனேஷ்லிருந்து பூரிக்கு 65 கிமீ...50 ரூ ட்ரவல்ஸ் மினி பஸ் மாதிரி அதிகாலை ஆறுமணிக்கு ஏறி 8 மணிக்குள் பூரி வந்து சேர்ந்தேன்,
ஜெகன்னாத் லாட்ஜ் இது பேருந்து நிறுத்ததின் அருகில் இருந்தது, இப்போதெல்லாம் போய் பாத்துதான் BOOK செய்வதுRED BUS APP ல் ஒருமுறை, BOOK செய்து விட்டு போய் பார்த்தால் WINE SHOP இருக்கிறது, பணமும் RETURN வரவில்லை.· FAMILY க்குத்தான் கொடுப்போம் ஆனால் பரவாயில்லை கொடுக்கிறோம் என்றார்..செம COMPACT NEAT ROOM, 800₹ கேட்டேன் இல்லை என்றார், வெளியில் போய் பார்த்துவிட்டு திரும்பவும் அங்கேயே வந்தேன்..எல்லோரும் FAMILY கேட்டார்கள், 1500ரூ ROOM RENT கேட்டார்கள்..
மறந்தும் சிரிக்கமாட்டேன் என்று இருப்பார்கள்,, தொந்தரவு என்று எதுவும் இல்லை காலை சரியாக 7 மணிக்கு பணம் கேட்டு கதவு தட்டப்படும் EXTEND செய்வதானால்,... பணம் தர தாமதமானால் HEATER CUT செய்யப்படும் அவ்வளவு தான்...
கொனார்க் , பிப்லி, மங்கள் காட் , பூரி BEACH, என்று எங்கேயாவது தினமும் சுற்றிவிட்டு வருவதற்கு மிக வசதியாக இருந்தது..
BEACH மற்றும் BEACH ROAD நல்ல JOLLY VIBE ல் இருக்கும்...பூரியிலிருந்து கொனார்க் செல்லும் MARINE DRIVE ல் பயணிக்கும் போது குஷபத்ரா (KSHAPHADRA RIVER) கண்ணுறமுடியும்..
கொனார்க், (KONARK) சிற்பங்கள் காண காண பிரமிப்பாக குதூகலமாக இருந்தது, இது மனிதர்களால் சாத்யப்படக்கூடியதா என்ற வியப்பும் மேலோங்கி இருந்தது
நிதானமாக சுற்றி சுற்றி வந்தேன், தனிமை பயணம் எனக்கு மிகப் பெரும் சுதந்திரத்தை கொடுத்திருந்தது...ஆழ்ந்து பார்க்கும் தன்மை சிரிதெனினும் வயப்பட்டது.. நானும் நானும் ,மட்டுமே அவ்வுலகம் அது..செல்ஃபி மட்டுமே எடுத்துக்கொண்டிருந்தேன், வழியில் சென்ற இருவரிடம் கேட்க போஸ் கொடுக்கச் சொல்லி இஷ்டத்துக்கும் எடுத்துக்கொடுத்தனர்..
கொனார்க் சூரிய கோவிலுக்கு அருகில் சந்த்ர பாகா என்ற ஆறு ஓடியதாகவும் இப்பொழுது சிறிய குளம் மட்டும் கொனார்க் கடற்கரையின் அருகில் காணப்படுகிறது
பெரும்பாலும் தினமும் நான் பூரி கோவிலுக்கு செல்வேன் எனது இருப்பிடத்திலிருந்து 10 ரூ SHARED RIKSHAWS ல் போய்விடுவேன், பெரும்பாலும் நள்ளிரவு வரை அங்கு தான் இருப்பது.மிகுந்த கலை நயத்துடன்
கட்டபட்ட தாமரை மொட்டு வடிவிலான அக்கோபுரங்கள் இரவு நேரத்தில் கண்ணுரும்போது அலாதியானதொரு இன்பம் பொங்கும். வார்த்தைகளில் பதிவிடமுடியா உணர்வு அது. அலைமோதும் கூட்டதினிடையில் அமைதியில் கிடக்கும் மனம்..யாரோ அரவணைப்பது போல்..அந்நிம்மிடம் தோன்றியதெல்லாம் இறையென்பது உணர்வு , உள்ளில் எழுவது காண்பது அறிவது.. அது மதத்திற்கு அப்பாற்ப்பட்டது என்பதே..
பூரி கோவிலின் உள்ளே சந்தை போன்று ஒன்றில் மஹா ப்ரசாதம் என்று விற்கிறார்கள்,, கோவிலின் சமூகத்தை சார்ந்தவர்கள் உய்ர உயர மண் பானை களில் நல்ல சுவையுடன் அதை வாங்கி சாப்பிடுவதும் ஒரு அனுபவமே..
கோவிலுக்கு செல்லும் பாதை எங்கும் நடைபாதை கடைகள் நிறைந்திருக்கும் ,
ஒரு சிறிய மண் குவளையில் பழுப்பு பால் வாங்கி குடித்து பார்தேன் அமிர்தமாய் இனித்தது, ஆடையும் பாலுமாக..( வேறு மாதிரிசெய்கிறார்கள். நன்றாய் இருந்தது..இது இரவில் , மதியம் அரிசி உணவு , மீன் , காய் கறி பருப்பு நன்றாக இருந்தது ....விதவிதமான பண்டங்கள் நான் மொமோஸ் , ச்சோலாபூரி, நூடுல்ஸ் என்று சாப்பிடுவேன், மதியம் கண்டிப்பாக மீன் சாப்பிட்டேன்...பெங்காலி மக்கள் அதிகம் புலங்குவதால் மீன் குழம்பு சாப்பாடு கிடைக்கிறது, ஆனாலும் ஒன்றை கவனித்தேன், NON VEG என்பது நல்ல உணவு பழக்கம் அல்ல என்பது போல். நானும் VEG தான் என்றால் ஒகே என்பது போல், புலி பசித்தாலும் பிரியாணி தானே கேட்கும்...
ஓடிஷா ( ODISHA) மாநிலத்தின் மொழி ஓடியா(ODIA) சுமார் 1500 -2000 ஆண்டுகள் பழமையானது என்று கணக்கிடப்பட்டு செம்மொழி அந்தஸ்தும் 2014 ல் வழங்கப்பட்டிருக்கிறது..ஓடியா எழுத்தும்(ODIA SCRIPT) உள்ளது ..
பூரியிலிருந்து சுமார் 15 கிமீ தூரத்தில் ரகுராஜ்புர்( RAGHURAJPUR) என்ற ஊரில் பட்டசித்ரா என்ற பனைஓலையில் ஓவியங்கள் செதுக்கல்கள் மற்றும் பாரம்பரிய கலைகள் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது
பிப்லி , பூரியிலிருந்து 40 கிமீ ,அப்ளிக் கைவேலைப்பாடுகள், அலங்கார குடைகள் , தொங்கும் (HANGINGS) அலங்காரங்கள் துணி கைவினைப் பொருட்கள் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது.
பூரி ஜெகன்னாதர் ஆலயத்தின் தேர் அலங்கார வேலைப்பாடுகள் இங்கு பல ஆண்டுகளாக வாழும் முஸ்லிம் மக்களால் செய்யப்படுவதாக கூறினர்..
மொழி, கலாசாரம் , உணவு , பண்பாடு இவற்றில் சிறிது வேறுபாடுகள் காணப்பட்டாலும் மனிதர்கள் மிகவும் யதார்த்தமானவர்கள் அன்பானவர்கள்
பயணிப்பதும் அதற்காய் உயிர் வாழ்வதுமே எனதின்பம்.....





























No comments:
Post a Comment