நீயும் நானும் அன்பே....
நீ weeping tree பார்திருக்கிறாயா? அழகான சிவப்பு மலர்களுடன் ஒரு வித்தியாசமான மரம் அது கொடிகள் சேர்ந்து மரமானது போல் பச்சையாக அருவி கொட்டுவது போல இருக்கும் அதன் பெயர் அருவி மரம் என்று நான் வைத்துக்கொண்டேன், பெயரே இல்லாவிட்டாலும் நல்லதுதான் தோரணம்போல சுருள் சுருளாக தொங்கிக்கொண்டு இருக்கும் அதன் ஒவ்வொரு சின்ன சின்ன கொடிகளும் , கொடிகள் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் பிணைந்து கொள்ளாமல் கிளைகளில் இருந்து கொடி உருவாகி உடனே அது பூமியை நோக்கி கீழே வழிகிறது, வானம் அதற்கு பொருட்டில்லை போலும், தினமும் இந்த அழகு அருவி மரத்தை சன்னல்களின் வழி பார்க்கிறேன், ஒரு குயில் அமர்ந்து கூவி விட்டு போகும் புல் புல் பின்னே தேன் சிட்டும் ஜோடியாக வருகிறது ஒருநாள் காகத்தை விட சற்று பெரிய ஒரு பறவை சாம்பல் நிறம் வந்து அமர்ந்து விட்டு போனது...அணில் பிள்ளைகள் எப்போழ்தும் அருவி மரத்துடன் உறவாடிக்கொண்டிருக்கிறது....சிறியதான ஒரு பச்சைக்கிளியும் அங்கமர்கிறது...இதோ இவ்வருவி மரத்தைப்போல என் இதயம் வழிந்துகொண்டே இருக்கிறது இன்னும் பகிர்ந்து கொள்ளப்படாத பல்லாயிரம் வருடங்களுக்கான முத்தங்களுடன்....
No comments:
Post a Comment