Dancing of Birds ---- 4
செம்பூத்து எப்பவும் அருவி மரத்துக்கு வருகிறது..(greater coucal) அடர் செம்பு நிறத்தில் கருப்பு முழுவண்ணத்தில் கண் அடர் சிவப்பு நிறத்திலும் இருக்கும், ஏதோ மந்திரத்தை ஜெபிப்பது மாதிரி ஒரு சப்தம் கொடுக்கும்..எனக்கு செம்பூத்து பிடிக்கும்.. அது தேவேலோகப் பறவையாம்...அது மட்டுமில்லை எல்லாப் பறவைகளுமே தேவேலோகப் பறவைகள் தாம்...
இரண்டு தினங்களுக்கு முன் ஒரு மாலை நேரத்தில் வானம் கருமை படர்ந்து குளிர் காற்றுடன் மழைக்கு முன்னோட்டம் பார்த்துக்கொண்டிருந்தது நானும் ஜன்னல் வழி வானம் பார்த்துக்கொண்டிருந்தேன், மேகம் கூடிக்கொண்டிருந்தது ஒரே ஒரு கழுகு மட்டும் வானத்தில் மிக உயரத்தில் வட்டமிட்டுக்கொண்டிருந்தது..கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் அந்த உயரத்திலேயே பறந்து கொண்டிருந்தது..நான் தான் சோர்வுற்று வந்தமர்ந்து கொண்டேன்..
கழுகு அது பறக்கும் உயரம் எதையும் லட்சியம் செய்யா பயமறியா பார்வை ஏனோ கழுகை பிடிக்கும் , zoo வில் அடைத்து வைத்திருப்பதை கண்ணுறும் போது மனசுள்
சொல்ல முடியா அழுத்தம் தோணும்.. மடப்பசங்களா அதன் உயரம் வேறு அதன் பார்வை வேறு ஏன் இப்படி அடைத்திருகி றீர்கள் என்று தோன்றும்....கார்த்தி கிட்டே ஒரு தடவை சொன்னேன் ஏன் boss VOC park ல அந்த hindu office பக்கம் வளைவு எடுத்து LIC சிக்னல் வர்றப்போ வெளிய இருந்து பார்த்தாலே zoo ல கழுகு அடைக்கப்பட்டது தெரியுமே பார்திருக்கீங்களா...
ஆமா boss பார்த்திருக்கேன்.. ஒரு case போட்டு அதை திறந்து விட சொல்லணும் பாஸ்..இல்லே night போயி பூட்ட ஓடைச்சிடுவோமா..இப்படியாக நாங்கள் பேசிக்கொண்டதுண்டு....கழுகிற்கு அது பறக்கும் உயரம் தெரியுமா....மழையும் காற்றும் கண்டும் தன் இடம் தேடி ஓடாமல் நிலை நின்று எப்படி பறக்கிறது...
நம் உயரம் என்ன இயல்பில் நாம் யார் சுற்றமும் சூழலும் புறந்தள்ளி இயல்பில் யோசிப்போமாயின் மூச்சு திணற அழுந்திக்கொண்டிருக்கும் மனசோட சின்ன கதறல் கேட்கும்....
நேற்று திவ்யா phone ல ஸ்ரீ எங்கே... Hosur ல திவ்யா ..கோயம்புத்தூர் போகலியா?...இல்லே போல... ஏனோ coimbatore ரோட நெருக்கம் கொஞ்சம் வருசமாவே பயமுறுத்துது.. ஓடிக்கொண்டே இருக்கும் மக்கள் பெருக்கிக்கொண்டிருக்கும் வாகனங்கள் வளர்ச்சி வளர்ச்சி என்று வந்துகொண்டிருக்கும் பாலங்கள் விரிவு படுத்தப்படும் சாலைகள்... எதற்கோ தோண்டி மூடப்படும் குழிகள்...இதோ மற்ற அழிவின் பாதையில் செல்லும் பெருநகரங்களின் வரிசையில் கோவையும்...
கார்மேக குடையின் கீழ் பறக்கும் கழுகும்..மிக மெதுவாக தாழ பறக்கும் செம்பூத்தும் கொஞ்சமாய் வீட்டுக்குள் எட்டிப் பார்த்துவிட்டு செல்லும் சிட்டுக்குருவியும்... இன்னும் மனிதர்களை தவிர்த்து தன் இயல்பில் வாழும் வேறு உயிரினங்களும் கூடி வாழும் இடத்தில் தான் ,, மனமே பூவாய் மலரும் வாழ்வை வாழ முடியும் இல்லையா….

No comments:
Post a Comment