விஷம்...
பசி உள்ள ஒருத்தனுக்கு அரை குறையா உணவு கொடுத்தல் எப்பிடி கொடூரமானதோ அது போல தான் அன்பு செலுத்துவதிலும் அப்படின்னு போகன் சங்கரின் போக புத்தகம் வாசித்தலின் போது தெரிந்தது.... அந்த புத்தகத்தில் "கொடூர அன்பு" அப்டிங்கிற தலைப்புல ஒரு கட்டுரை இருக்கும் ஒரு அனாதை விடுதிக்கு போகும் போகனிடம் தாய் தந்தை இருவரையும் இழந்த சிறுவன் நாளைக்கும் வருவீங்களான்னு கேட்க இவரும் ஆமா ன்னு சொல்லிட்டு போகாமல் இருந்திடுவார்... கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து போகும் போது அந்த சிஸ்டர் போகன் கிட்டே நீங்க ஏன் வரலே அவன் உங்களை ரொம்ப எதிர் பார்த்திட்டு இருந்தான் gift எல்லாம் செஞ்சி வச்சிருந்தான்...ஒவ்வொரு நாளும் வாசல்ல நின்னு காய்ச்சல் வந்திடுச்சு...உங்க address இல்லாம கண்டு பிடிக்க முடியலே ....என்று கூறுவார்....பின் .....""அன்பே இல்லாட்டி கூடப் பரவாயில்லே, கொஞ்சமாகக் கொடுக்கற அன்பு ரொம்பக் கொடூரமானது அது விஷம்" என்பார்...உண்மை தான்....கொஞ்சம் அன்பில் நாம் முழுமையான வாழ்வை அடையமுடியாது....இப்போ எல்லாமே கொஞ்சம் கொஞ்சம் என்று ஆகிவிட்டிருக்கிறது... ஒரு ஆசுவாசத்தன்மை அற்ற அசுரத்தனமான வேகம் ஓட்டம் நம்மை அவ்வாறு செய்கிறது...நிறைமை முழுமை அற்று காரியங்கள் செய்தல்....இல்லை ஏதோ காரணங்களுக்காக காரியங்கள் செய்தல்...அது மிகவும் அபத்தமானது.... எவ்வாறாயினும் சிறிதே விலகிய தண்டவாளங்களில் ரயில் ஓடமுடியாது இல்லையா....??? ஸ்ரீ prajna
No comments:
Post a Comment