தொலைப்பதும் தொலைந்து போவதுவும்......................
உனை தெரியும் எனும் குரலை நான் அலச்சியப்படுத்துகிறேன்....என் பெயரும் படிப்பும் வேலையும் நானெனும் கற்பிதம் அலுப்பூட்டுகிறது...எவரேனும் உ்னைத் தெரியும் என்றால் அது நானில்லை என்கிறேன்....சுமைதாங்கும் கூட்டத்தின் கொக்கரிப்பில், கரைந்து காணாமல் போகின்றது என் குரல்....புலிகள் தன்னை எவரிடத்திலும் நிரூபிப்பது இல்லை, புலிகளின் வரிகள் வெவ்வேறானவை, அளந்து அறிதல் சாத்தியமற்றது..... மீண்டும் எனை கண்டெடுத்து சிலுவை தர ஆவலாகிறது கூட்டம்,, உன் பெயர் உன் வேலை உன் வீடு என்கிறது.....நான் கூட்டத்தை தொலைத்தும் தொலைந்தும் போய்க் கொண்டே இருக்கிறேன்...புலிகள் தன் பாதையில் போய்கொண்டிருப்பவை....ஸ்ரீ Prajna....
No comments:
Post a Comment