Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Wednesday, June 13, 2018

உங்களைநீங்களே...உள்நோக்குங்கள்......🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁எவ்விதமான வாழ்வில் நீங்கள் இருக்கிறீர்கள், கட்டுக்கோப்பான கட்டுப்பாடான இல்லை இன்பமான சுதந்திரமான வாழ்வி னுடா என்று பாருங்கள்...அதிகாரம் அன்பு அக்கறை,,, எதுனுடே  கலந்து கடந்து செல்கிறது வாழ்வு....மூன்று நேர உணவு இரண்டு வேளை காபி சிறு பலகாரம் பிளட் டெஸ்ட்  யூரின் டெஸ்ட் காது குத்து வளை காப்பு கல்யாணம் கருமாதி இவற்றில் கரைந்து போகிறதா நாட்கள்...???? எப்பொழுது கடைசியாய் பரோலில் வந்தோம் இரண்டு நாட்களா  நான்கு நாட்களா.... நண்பர்களுடன் இல்லை மனைவியுடன் எப்பொழுதாவது beer அடித்து இல்லை coffee யாவது குடித்து ஒரு பின் மாலை நேரத்தை புகை வாகன  நெரிச்சலி ல்லாத காற்றை சுவாசித்தீர்கள்....((( I'm not mentioning about the stay in resorts 😏))).....பறவைகள் உங்கள் அருகில் எப்பொழுது வந்துவிட்டு சென்றது....பட்டாம் பூச்சிக்கென நேரம் ஒதுக்கி எப்பொழுது ரசித்தீர்கள்....மழையைபெய்யும் பொழுது சன்னல் வழி பார்த்தீர்களா அதன் சாரல் உணர்ந்தீர்களா ...மலை யை அதன் திண்மை யை மாலையில் கண்டீர்களா....மனதார அதை அணைத்தீர்களா....உங்களுக்கே உங்களுக்கான நேரத்தில் உங்கள் துணையுடன் ஆத்மார்த்தமாய் இருந்தீர்களா....வேறெதுவும் சிந்திக்காமல்...உண்மையாய், நேர்மையாய்....உள் நோக்குங்கள்.................ஸ்ரீ Prajna....

No comments:

Post a Comment