Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Tuesday, March 13, 2018

                      பேரன்பின் முத்தம்


உனக்கும்  எனக்குமான பேரன்பு
இக்கணத்தில் இப்பிறப்பில் என்றல்ல
என்றுணர்வாயா

யுகம் தோறும் நானுனைப் பின்தொடர்வதறிவாயா?.....

முன்னொரு பிறப்பில் நாம் விசும்பள க்கும் பறவைகள்...

வேறொன்றில் காடளந்த மான்களாயும், பிரிதொன்றில் கடலளந்த மீன்களாயும்,

இதன் மத்தியில் ஒருமுறை மலர்களாயும் பிறந்திருந்தோம்....

அனைத்திற்கும் தலைஅசைக்கும் ஆட்டுமந்தையிலும். ரெத்தவெறி பிடித்தலையும்...

செந்நாய் கூட்டத்திலும் நாமிருந்ததில்லை..

பறவைகளுக்கேது மொழி இசைதலைத் தவிர....

மான்களும் மீன்களும் சத்தத்தில் நேரத்தை விரையாமக்குவதில்லை....

மலர்கள் மணப்பதைத் தவிர பிரிதறியா....

ஒரு பேரன்பின் முத்தத்தில் , சின்னத்தீண்டலில் நம் பிறப்பறிந்துகொள்....

எனக்கானவன் நீயென்பதையும் ,உனக்கானவள் நானென்பதையும்...

No comments:

Post a Comment