Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Friday, August 7, 2015

இரவின் மடியில்..

" I Have Loved The Stars, Too Fondly, To Be Fearful Of the Night" .. Sarah Williams..

என் ஒரு இரவு கூட வானத்தைப் பார்க்காமல், stars பார்க்காமல் சென்றதில்லை, உள்ளூரில், வீட்டில் இருந்தால், வானத்தை நட்சத்திரங்களைப் பார்த்து விட்டுத்தான் படுக்கப்போவேன், பலவருங்களாய் தொடரும் நிகழ்வு இது...அந்த நட்சத்திரங்கள், ”எதுவுமே பெரிய விஷயமில்லை” என்று என்னிடம் சொல்லத்தவறுவதில்லை...

Night  நாம return ஆயிருவோமில்லே, நான் நந்தினி கிட்ட கேக்க, கண்டிப்பான்னு அவங்க சொல்ல உடனே அந்த பயணத்துக்கு ஓ.கே சொன்னேன். சொன்ன மாதிரியே அந்த அர்த்த ராத்திரியில்,12.45 மணி சுமாருக்கு நானும் , நந்தினியும்   ஆனைகட்டியில் இருந்து return ஆனோம். சரியா 1. 15am to 1.30am யில், தூமனூருக்குள் யானைகள் நுழையும் வாயிலுக்கு அருகில் அந்த சந்திப்பில் car நிறுத்திவிட்டு இறங்கினோம். ஒரு அனுமான்ஷ்யமான அமைதியில் ஆழ்ந்து கிடந்தது இரவு. எனக்கு இரவு பிடிக்கும்.. இரவு மட்டுமே மிகவும் பிடிக்கும், பகல் பொழுதுகள் போலியானவை, இரவு அப்படி அல்ல. கண்முன்னே கடந்து போகும் முன் இரவு, பின் இரவு நடுஜாமப்பொழுதுகள் வசிகரமானவை. மறைந்து, பின் வெளியில் வந்து, ஒதுங்கி நிலவு தன் அனைத்து ஜாலங்களையும் காட்டும்..பகலில் ஒரு செயல் படமுடியா அலுப்பு என்னைத்துரத்தும், இரவுக்கான என் உலகம் அப்படியல்ல, எல்லா உற்ச்சாகத்தையும் தரும்

இருவரும் சற்று நேரம் சுற்றிலும் பார்த்துவிட்டு  நடுவில் வந்து நின்றோம். மலைகள் சூழ்ந்த , மரங்கள் அடந்த வனத்தின் வாசம் போலில்லாமல் ஒரு வித்தியாசமான மர்மமான மிருகங்களுக்குண்டான வாசம் அது. அந்த பக்கத்தில் இருந்து யானை இறங்கும் போது, எங்களைக்கடந்து (மிதித்து) தான் கடக்க முடியும். எதுவும் பேசாமல் அந்த இருளை, அதன் மொளனத்தை, அந்த அனுமான்ஷ்யத்தை உள்வாங்கிக்கொண்டிருந்தோம்..சற்று திகிலாய் இருந்தது இப்போ யானை வந்தால் எங்கு ஒடமுடியும் என்று எனக்குள் கிலிபடர்ந்து கொண்டிருந்தது..

நந்தினிக்கு அப்படிப்பட்ட எந்த கிலியும் இருந்ததாய் தெரியவில்லை, evening நாங்க travel பண்றப்போ share பண்ணியிருந்த விஷயங்கள், பெரிதாய் எனக்கும் ஆச்சர்யம் இல்லை, “ வீட்ல ரொம்ப conservative shri, அதுனாலேயே எல்லாம் கத்துக்கனும்னு தோனும், எல்லாம் செஞ்சிடனும்னு, பயம்னா என்னனே தெரியாது, அத experience பண்றதுக்குன்னே ஒருதடவ நடுக்காட்டிலே போய் உக்காந்திருக்கேன், கொஞ்சமே கொஞ்சமா ஒரு உணர்வு வந்திச்சு, maybe அது தான் பயமோ” இப்பிடி சொல்லிட்டு வந்தாங்க...

ஒவ்வொரு தடவை ஊர் சுத்த போறப்போவும் நானும், சுகியும், சுமாவை படுத்தி எடுப்போம், second show படம் பார்க்கனும்னு, இல்லே  night ஊர் சுத்தனும்னு நாங்க பண்ற அலப்பரையால சுமா ரொம்ப feel பண்ணுவாங்க, அப்படியும் சோழேச்வரம் போனப்போ, night சாப்பிடறதுக்குன்னு சொல்லி  கிட்டத்தட்ட ஊரே அடங்கினதுக்கப்புறம் தான் room போனோம், வினோதமா நெறையா பேர் பார்த்திட்டே போனாங்க. ஒரு medical shop போய் tiger balm எதுவோ கேட்டு வாங்க, அந்த ஆள் response பண்ணவே 10min எடுத்திட்டாரு, சுகி சொன்னா பாருடி, இன்னேரத்துக்கு வெளியில் வந்தா இவங்க தர்ற மரியாதைய அப்பிடின்னு...இது காஞ்சி to காரைக்குடி போனப்போ நடந்தது, அப்புறமாவும் விடாம காரைக்குடியில் , seconshow க்கு விசாரிக்க அன்னிக்கு new year வேற, ஒரு கடையிலே கேட்டோம் , பக்கத்திலே theatre இருக்கான்னு, கிட்டத்தட்ட அரைமணி நேரமா பேசினார்,  வேறென்ன போவேண்டாம்னு தான். நானும் sugi மட்டும் icecream வாங்கறோம்னு கொஞ்ச நேரம் மட்டும் சுத்திட்டு போனோம்...

ஒரு முறை ம்துராந்தகம் கூட்டு ரோட்டில் இருந்து வேடந்தாங்கல் போறப்ப ஆள் அரவமே இல்லாத அந்த busstop , அங்கிருந்து full இருட்டிலே நடந்து போன  forest guest house எல்லாமே   திகில் அனுபவங்கள்..பின் ஒருமுறை north karnaatakaa, "humpi to coorg" போனப்போ badami (வாதாபி) யில் இருந்து முருடேஷ்வர் night தான் travel பண்ணோம், முருடேஷ்வரில் இறங்கும் போது 3.30 நாங்க மட்டுமே நடந்து போய்கொண்டிருந்தோம்..ஆக வெளியூரில் second show பாக்கனுங்கிறது இன்னும் நிறைவேறவே இல்லை..

நிலா மேகத்துக்குள் மறைவதுமாய், வெளி வருவதுமாய் இருந்தது, காற்றின் மெல்லிய சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது,நாலாப்பக்கமும் யானைகள் சூழ்வது போல் ஒரு பிரம்மை தோன்றி மறைந்தது,  ”shri போலாமா”... நந்தினி கேட்க்க, மெதுவாய் car நோக்கி நடந்தோம்...

2 comments:

  1. குரங்குகள் போலே மரங்களின் மேலே
    தாவித் திரிந்தோமே

    குயில்களைப் போலே இரவும் பகலும்
    கூவித் திரிந்தோமே

    வரவில்லாமல் செலவுகள் செய்து
    மகிழ்திருந்தோமே

    வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல்
    வாழ்ந்து வந்தோமே நாமே
    வாழ்ந்து வந்தோமே

    எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
    எந்த அழகை எந்த விழியில் கொண்டு
    செல்வோமோ

    இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ

    ReplyDelete