Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Friday, July 31, 2015

பருப்புக் குழம்(ப்)பு.....


எனக்கு சமையல்னா அவ்வளவு அலர்ஜி...அம்மா, எல்லா அம்மாக்களையும் போல நல்லா சமைப்பாங்க, என் sis ரொம்ப இண்ட்ரெஸ்ட்டா plus நல்லாவும் குக் பண்ணுவா, ஆனா என்ன எல்லாம் perfect ட்டா வேணும், நான் அது இல்லேனா என்ன, இது இல்லேனா என்னானு adjust பண்ணுவேன்... ம்ஹீம் இந்த brand பொடி தான் வேணும் இந்த brand மசாலா தான் வேணும்னு அவ பண்ற அலப்பரைக்கு அளவே இல்லை... 

இந்த வாரம் புரட்டாசி பிறக்குது இன்னும் ஒரு மாசத்துக்கு non veg கிடையாதுன்னு கெடச்சது எல்லாம் last sunday செஞ்சா...அப்பவும் கொஞ்சம் மீன் மீதியாக நான் செய்திட்றேன்னு fridge ல வச்சு, இன்னிக்கு  morning செஞ்சேன்....காலைல அஞ்சு மணிக்கே முழிச்சிட்டேன்.. 

சரி ஏதாவது செஞ்சு நல்ல பேர் எடுக்கலாம், (ஏகத்துக்கும் ஊர் சுத்தறோமே) ன்னு,  பருப்பு கடைஞ்சு, மீன் குழம்பு வைக்கிறதா plan பண்ணி start பண்ணேன், ஏனோ kitchen light எரியல, பருப்புக்கு வதக்கியதை மீன் குழம்புக்கு போட்டு, அதுல புளி வேறே ஊத்தி... oh my god எனக்கு மட்டும் ஏன் இப்பிடி எல்லாம் நடக்குது...கொஞ்ச நேரத்தில என் sis வந்தா என்ன பண்றே, “ இல்ல பருப்பு குழம்பு வைச்சிருக்கேன்”

”எங்கே காமி”

நல்லா விடிஞ்சு வெளிச்சத்திலே, அது அது பருப்பு குழம்பே இல்லே...அவ பார்த்த பார்வையிலே சத்தியமா சகோதரி பாசமெல்லாம் இல்லாம சுத்த கொலவெறில பார்த்தா...

சிலருக்கு சமையல் ஒரு கலை சிலருக்கு( என்னை போல) அது ஒரு கொலை....

No comments:

Post a Comment