Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Thursday, August 15, 2013

ம ன ச்சாரல்




மழைவர்றதுக்கு முன்ன முகத்துல விழற  ஒரு துளி, உடம்பு  முழுசும் ஒரு சிலிர்ப்ப ஏ ற்படுத்துற மாதிரி இருந்துச்சு, முதல்ல அவன  நா பாத்தப்ப...அடுத்தடுத்த  நிகழ்வுகள்ல,  இலைகள  முழுசாமறச்சிட்டு பூத்திருக்கிற மரம், நெருக்கத்தில பறந்து போற பட்டாம்பூச்சி மாதிரி ஒருவித பரவசத்த  ஏற்படுத்துசசு, அவனோட அருகாமை ..

கறிவேப்பிலை  மரத்துக்கு  வர்ற குயில் கள்ளத்தனமா, ஒரு பார்வை பார்த்திட்டே பழத்த சாப்பிடும், நாம அத பாக்கறோம்னு தெரிஞ்சா, நானில்லையேங்கற மாதிரி பறந்து போயிடும்..மனசு மாறிமாறி நெனச்சுக்குது ஆமான்னும், இல்லேன்னும்....

எப்படியாச்சு(ம்)  கடந்து, போகட்டும் இந்த  வாழ்கைன்னு   வாழறதவிட இந்தநிமிஷத்துக்கான பொழுதுகதான் முக்கியமாபடுது...சொல்ல முடியாத எத்தனையோ வார்த்தைங்க காத்துல, அலஞ்சிட்டிருக்கு...எனக்கு எதையும் சொல்லனும்னு தோனல..சொல்லவும் போறதில்ல...

இயல்பா அழகா கூடிவர்ற  பொழுதுக  எல்லாத்தையும் கடந்து எங்கேயாவது, கூட்டிட்டு போகட்டும்..அப்ப எம்மேலபட்ட, ஒருதுளி மழை, பெரு வெள்ளமா மாறி வரும், அப்ப  எல்லாநியதிகளும், கட்டுப்பாடுகளும் , அதுல காணாம போயிடும்....

அவனுக்கான சுவாசம் இப்பெருவெளியில இருந்து அவனச்சேர்ற   மாதிரி, என்னுடைய வார்த்தைகளும் அவன்கிட்ட போகும்....அதுவரை கேள்விகளால் ஆக்கப்பட்ட என் உலகத்துக்கு மௌனத்தால்  நிரப்பப்பட்ட அவனோட  பதில் போதுமானது..








2 comments: