கள்ளம் - தஞ்சை பிரகாஷ்..
ஓர் மீள் பார்வை
தூக்கம் தொலைத்த இரவுகளில் புத்தகம் தவிர துணையேது.. தஞ்சை பிரகாஷின், கள்ளம் அக்காலத்தில் தஞ்சையில் குடியேற்ற ப்பட்ட மராட்டிய, கொங்கணி பெண்களின் நிலையை கோடிட்டு, தஞ்சை கலைஞர்களின் cut glass painting ல் மையம் கொண்டு சேரியில் அதைச் சேர்த்து அப்பெண்களையும் தன்னுடன் இணையாமல் இணைத்துக் கொண்ட ஓர் கலைஞனின் வாழ்வைச் சித்தரிக்கிறது..
எழுத்தாளத்தந்தை தவிர மற்ற அனைவருமே தம் தொழிலை வாரிசுகள் திறம்பட செய்ய விரும்புகிறார்கள்,.. ஆனால் கலைத்தொழிலாக மாறி ப்ரதி எடுக்கப்படும் போது சுயத்தை இழந்து விடுகிறது, சுயத்தை இழந்த கலை அதன் உயிரோட்டத்தை இழந்து விடுகிறது, எந்த கலையையும் காதலையும் எல்லை வகுத்து செய்யச் சொல்ல முடியாது...இன்னின்னாருக்கு.... இன்னின்னாருக்குள் என்று வகைப்படுத்தப்பட்டது வரையறுக்கப்பட்டது எவ்வளவு அபத்தம்,.. மனிதனின் ஒட்டு மொத்த சுயநலத்தின் வெளிப்பாடல்லவா..
இந்தந்த சாதிக்குள், மதத்துக்குள் எனும் போது காதலாய் கசிந்து கனிவு தரும் வாழ்வேது அவ்விடம், கடமை மட்டுமே ஆற்றிக்கொண்டு ( ஆட்டிக்கொண்டு) மீதமுள்ள ஒரு நிமிடத்தை கடத்தலே அரிதெனில், வாழ்நாள் முழுமைக்குமான பல நாட்களை வருடங்களை கழித்தல் எங்கணம்.. பகிர்தலில்லா வாழ்வை எவ்வளவு வருடங்கள் கடத்த இயலும், மாறிமாறி காதுகுத்தும் கல்யாணமும் பகட்டுக்காய் நடத்திக்கொள்ளப்படும் விஷயங்களும் நாடகங்களின்றி வேறென்ன...
இசையை, ஓவியத்தை, விளையாட்டை, இப்பிரபஞ்சம் தன்னிடம் கொண்டுள்ள பேரழகை, பறவையை, மரங்களை, கடலை, வானத்தை, மழையை, ஆற்றை, அருவியை, காட்டை எதையும் காதலில் பகிராமல் பணமெண்ணிக்கொண்டிருப்பதையும், சொத்து சேர்ப்பதுவுமான சக துணையுடன் பகிர்தலில்லா வாழ்வு எவ்வாறான அபத்தம்,, இதற்காக போலியாய் உருவாக்கப்பட்ட சடங்குகளூம் சம்பிரதாயமும் எத்தனை...தடவித் தடவியே வாழ்வு நடத்த முடியாது, தடவுதல் மறத்துப்போகுமோர் நாள், அதில்லாமலும் ஒவ்வோர் நாளும் வாழ ஒவ்வோர் நிமிடமும் வாழ இயற்கையை பிரபஞ்சத்தை அதிலடங்கிய எண்ணற்ற அதிசயங்களை காதலில் பகிர்தலே உண்மைவாழ்வு...
புத்தன் அனைத்துமிருந்தும், அனைத்தும் துறந்து ஓடியது எதனால்,... ஏதோவொன்றாய் கடந்து செல்லும் வாழ்வதனை, கானுருவதும், ரசிப்பதும் பகிர்தலுமாய் கொண்டாடுங்கள், பஞ்ச பூதங்கள் இப் பிரபஞ்சத்தை வழிநடத்துகிறது, அவை யாருடைய எதனுடைய கட்டுப்பாட்டிலும் இல்லை...

No comments:
Post a Comment