Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Wednesday, June 24, 2015

பனிக்கனவுகள்....

...U r My Sun Shine, My Only Sunshine..
   U Make Me Happy, When Skies are Grey,,
   U Never Know Dear How Much I Love U..
   Please Don't Take My Sunshine Away..
   The Other Night Dear...When I Lay Sleeping..
  I Dreamt  I held U, In My arms, 
  When I woke Dear, I was Mistaken 
  so I hung My Head and Cried..
  U r My Sunshine, My Only Sunshine...

    
அது ஒரு புதிய நாள், போல தோன்றியது அவளுக்கு.ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நாள் தான். இன்னமும் மறையாத பொளர்ணமி நிலா வானத்தில் இருந்தது.ரொம்ப அழகா, ரொம்ப பெரிசா...பனிக்காற்று எதிரில் இருக்கும் மலையில் மோதி முகத்தில் அடித்தது.எந்தப் பறவையும் வெளியில் வந்திருக்கவில்லை.வெயில் வந்தவுடன் வரும்.விடிய விடிய சத்தம் போட்டுக்கொண்டிருந்த பறவை எது என அவளுக்குத்தெரிந்திருக்கவில்லை.

பகல் போலவே இரவும் வருகிறது. சில சமயம் நல்ல தூக்கமும், சில சமயம் பயமும் அழுகையாகவும் கழியும். எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாது.

அவள் இருந்தது சுத்தமான சிறிய அறை,ஒரு   கட்டிலும், டீ பாயும், மேஜை நாற்காலி, ஜன்னல் ஓரத்திலும் இருந்தது.ஜன்னல் வழி தெரியும் back yard ரொம்ப அழகாக இருக்கும், பைன் மரமும், silver oak ம், சின்ன சின்ன Lilly pond ம், செம்பருத்தி, டேலியா, புல் வெளி என அமைதியான இடம் அது.

சில சமயங்களில் இழுக்க முடியா நினைவுகளுடன், மல்லுக்கட்டித் தோற்றுப்போகிறது மனம். மொளனம் பெரும் அச்சுறுத்தலாகிறது. இடுக்குக்குள் சிக்கிக் கொண்ட எலி போல் கீச்கீச் என்று கத்தி ஓய்கிறது..

கடனுக்காய் சாப்பிட்டு ஒரு poster colour எடுத்து try செய்ய முதலில் வானம் நீல நிறமாய், அதில் சில பறவைகள், அதைச்சுற்றிலும் வலை.. இதுவல்ல தான் என்று தோன்ற , வெளியில் வந்து laneல் நடக்க,இதமாய் இருந்தது, சில்லென்ற காற்றும் மலை களும், குளுமையுமாய், அப்படியே புல்லில் படுக்க, வானம் வெளிர் நீல நிறத்தில் இருந்தது. 

புல்லை கையில் அளக்க, அவன்கூட  இருக்கிற மாதிரி இருந்தது, புல்லைத்தாங்கும் நிலம் ஞாபகத்துக்கு வந்தது, அவனுக்கு நிலம் பிடிக்கும், ஏண்டா உனக்கு நிலம் பிடிக்கும்,” எல்லாத்தையும் தாங்கிற, சகல உயிர்களும் வாழ்ற இடமா இருக்கு,  இங்க பாரு இந்த மலை, அழகான காடுங்க, நீர்வீழ்ச்சிங்க, பாலைவனம், சமவெளின்னு, இந்த நிலப்பரப்பு ஒரு அற்புதமான கலவை, அழகான கட்டிங்க, வெயிலா,மழையா, குளிரா, இதமான்னு சகலத்தையும் உணரவைக்கிறதா நிலம் இருக்கு” ...ஆமான்னு தோன்றியது...மெதுவா சொன்னான் நிலத்துக்கப்புறமா எனக்கு ஆகாயம் பிடிக்கும்..

Bull Bull சத்தம் கேட்டது. white breasted Redvented Bull Bull "உக்கிக்கிக்கூ” ன்னு சத்தம் போட்டது.ஒரு சாம்பல் (நீலம் கலந்த) நிறக்குருவி beak இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது, அதுவும் அங்கேயும் இங்கேயும் பறந்து கொண்டிருந்தது..

அவளுக்கு சின்ன வயது ஞாபகம் வந்தது. அப்பாவின் கை பிடித்து நடக்கும் அந்த அதிகாலை நேரத்தில், காக்கா குருவி சத்தம் கேட்க்கும். அப்பாவோட கை எப்பவும் ஒரு இதமான சூட்டோட இருக்கும். என்ன தான், shaft ம், bush ம், bearings ம் தொட்ற கைனாலும், அப்பா கைங்கறதால அப்படி இருக்குமோ. அவளும் நிறைய தடவை bearings எடுத்து சுத்திப் பார்திருக்கிறாள். shaft ,bush எதுவுமே மறக்கல அப்பிடியே கண்ணு முன்னால வருது அப்பா மாதிரியே..காலைல அப்பா கூட போற அந்த walk ல, தேங்காய் பன்னும், பால் teaயும்  எப்பவும் சப்பிட்றது. அப்பா அப்பிடிதான் சாப்பிடு சாப்பிடுன்னு ஊட்டி ஊட்டி விடுவார். ரெண்டு பேறுமா market போயி வர்றதுக்கும் பொழுது விடியறதுக்கும் சரியா இருக்கும்...அதிகாலை பொழுது மாதிரியே அப்பாவின் நினைப்பும் சுகமானது..அவளுக்கு...

வாழ்க்கைய தனியா எதிர் கொள்ற சந்தர்பங்கள்ல அந்த மாதிரி எந்தக்கையும், கூட இல்லேன்னு நினைச்சு கிட்டா... ரொம்ப வருஷத்துக்கப்புறமா, அவனோட கைய எடுத்து வச்சிக்கிறப்போ அந்த கதகதப்ப  feel பண்ண முடிஞ்சது அவளால.bus ஒரு மலைப் பாதைல , வனத்துக்கு நடுவிலே போயிட்டிருந்தது,  நிறைய மரங்க, அப்ப அவனோட தோள்ல சாஞ்ச படிக்கு அந்தக் கை கூட தன்னோட கைய போட்டுட்டு, பிடிச்ச பாட்டெல்லாம் கேட்டிட்டு  வந்தா..பனில சுற்றிலும் இருக்கிற எல்லாமே மறைஞ்சு போக ஞபகத்தோட உறைஞ்சு போக ஆரம்பிச்சுது அவளோட மனது...he is her complete man,, ஒரு whole friend..

கொஞ்சநேரத்தில சூரிய கதிர் முகத்திலே அடிக்க, இயலாமையும், தனிமையுமா எழுந்து அறைக்குள் நுழைந்து,ஜன்னல் திரையை விலக்கி கதவைத்திறந்து வைக்க, பனியாயிருந்த போது இருட்டியிருந்த அறைக்குள் வெளிச்சம் பரவ ஆரம்பித்தது, இன்றும் இரவு வரும், கனவும் வரும், யாரால சொல்லமுடியும் என்ன கனவுன்னு....

No comments:

Post a Comment