“Finding someone you love and who loves you back is a wonderful, wonderful feeling. But finding a true soul mate is an even better feeling. A soul mate is someone who understands you like no other, loves you like no other, will be there for you forever, no matter what. They say that nothing lasts forever, but I am a firm believer in the fact that for some, love lives on even after we're gone.”
― Cecelia Ahern,
அந்த பொழுது அப்பிடி விடிந்திருக்கவேண்டாம் , அந்த இரவு அப்பிடி கடந்திருக்க வேண்டாம் ...கதவை அடைத்துக்கொண்டு நாலு சுவத்துக்குள் அழுதிருக்க வேண்டாம், எதுவும் நடந்திருக்கவில்லை என்றால்.அது ஒரு சிறிய அறைதான், எனக்கென்னவோ ஒரு சிறிய சுத்தமான அறை வாழ்வின் எல்லா சுவாரஸ்யங்களையும் தந்து விடுவதாகத்தோன்றியது.
இறுக்கி மூடிய அறையின் நிசப்தமான தனிமை பிடித்திருந்தது, எப்போதாவதுதான் இந்தமாதிரி வாய்க்கும்.ஒரு பதை பதைப் புடன் காணப்படும் மனதை என்ன செய்து சமாதனப்படுத்த முடியும், காரியங்கள் தனக்கானதாய் இல்லாமல் போகும் போது..யோசிக்க யோசிக்க மண்டைக்குள் சுற்றிக்கொண்டிருந்த ஞயாபகங்கள் சிலந்தி வலைக்குள் சுற்று வதைப்போல் சுற் றிவந்தது,.
உமா மஹேஸ்வரி யோட “அஞ்சாங்கல் காலம்” புத்தகம் கூட இருந்தது.மெதுவா புரட்டி அங்கே இங்கே நுனிப்புல் மேஞ்சு கதைய ஓரளவுக்கு முடிகிறப்போ சத்தியமா நடுக்கமா இருந்துச்சு, அது ஏன்னு தெரியல “ ரெண்டாவது ஜாமம்” எழுதின சல்மா வாகட்டும், அஞ்சாங்கல் காலம்” எழுதின உமாவாகட்டும் ஒரு பொண்ணு இஷ்டப்படியான வாழ்வை அமைக்கவிரும்பறப்போ சாகடிச்சிட்றாங்க..
ரெண்டாவது ஜாமங்களின் கதைல “ ஃப்ரிதவ்ஸ்” .. அஞ்சாங்கல் காலம்” ல ரேணுகா. “ ஃப்ரிதவ்ஸ்” கல்யாணம் ஆன ஒருத்தனோட உறவு வச்சிக்குவா, ரேணுகா கணவனோட தம்பிகூட , கணவன் ஒரு குடிகாரன் ஆகவும் விருப்பம் இல்லாதவனாவும் இருப்பான்...ஏன் இவங்கெல்லாம் சாகடிக்கப்படனும், தி.ஜாவோட “அம்மணி மாதிரி ஏன் தைரியமா தனக்குப்பிடிச்ச வாழ்க்கைய வாழ்ற பொண்ணா ஏன் காமிக்கல..
மறுபடியும் சிலந்தி வலைக்குள் போயிற்று. கைகோர்த்து நடந்தது, உதடுகடித்தது, உறவு கொண்டதென சுற்றி சுற்றி வந்தது, வலையை அறுத்தெரிவது சாத்தியமில்லை, வலையில்லாமல் சிலந்தியில்லை...

No comments:
Post a Comment