Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Wednesday, April 23, 2014

Let it Goooooooo....



நானும் நிகழும் மேல terrace ல படுத்திருந்தோம், வெயில் கால இரவுங்கிறது தவிர, இங்க என்ன வேனா பேசிட்டிருக்கலாம், stars பாக்கலாம்... வழக்கமா நான் கேக்கிற கேள்விய கேட்டேன், ஏய் உனக்கு பஞ்ச பூதத்தில எது பிடிக்கும், நீர்...ன்னு சொன்னா...

நீர்ன்னா மழை, கார்திக்கும் மழை பிடிக்கும், சு வுக்கு காற்று பிடிக்கும்,  எனக்கு வானம் பிடிக்கும், இத்தாம் பெரிய வானத்த பார்க்கிறதுக்காகவே, இந்த பிறவி எடுத்தது வீண்போகலைன்னு தோனும்...ரகுவுக்கு என்ன பிடிக்கும்னு தெரியல, நெருப்பா இருக்கும்ன்னு தோனுது.. 

நிகழ், மழை மாதிரி, அடிச்சு பெய்யிற மழை, ரொம்ப நாளா ரகுவுக்கும் எனக்குமான நட்பில் (?) ஏதாவது ஒரு முடிவை எட்டச்சொல்லி எனக்கு சொல்லிக்கொண்டிருந்தாள்...நீ good morning அனுப்புறதும், அவன் goodnight அனுப்புறதும் போதும் open ஆ” are you interested in  romantic relationship with me" ன்னு கேளு...

அர்த்த ராத்திரி 12.10க்கு கேக்கிற கேள்வியான்னு தெரியல, இருந்தாலும் ஒருமுடிவுக்கு வந்தவளாய் அவனுக்கு phone செய்து கொண்டிருந்தாள், பின் நானும் try செய்ய அவன் attend செய்யவே இல்ல...

Morning நான், கீழ வர்றப்போ, நிகழ் அவன்கிட்ட தான் பேசிட்டிருந்தா, “ ஆமா, நாங்க சொல்லிட்டோம், அவ கேக்க மாட்டிங்கிறா, நீ வேனா ஒருவாரம் time எடுத்துக்கோ, oh இப்ப சொன்னதுதானா, ok ok, இல்ல அப்டி எல்லாம் பண்ண மாட்டா ரொம்ப courageous, சரி நான் சொல்லிறேன்”...

இது அவ்ளோ பெரிய ப்ரச்சனை இல்லேங்கிற மாதிரியும், கொஞ்சம் கஷ்டமாயிருக்கிற மாதிரியும் மாறி மாறி தோனிச்சு...நிகழ் என்கிட்ட சொல்லிட்டிருந்தா, அவன message  அனுப்ப வேண்டாம்னு சொல்லிருக்கேன், கொறஞ்சது மூணுமாசத்துக்கு(?)...ஆமா நான் அனுப்பின எதுக்குமே reply இல்ல..

ஹேய், உன்னோட dream என்னடா?? எனக்கு ஒரு agriculture farm குட்டியா அதுக்குள்ள ஒரு சின்ன வீடு நெறையா மரம் சுத்திலும் எல்லாமரமும், அது மாதிரி உனக்கு என்ன dream...””

ம்ம்... ஒரு wine yard வைக்கனும்,

wine yard ன்னா???

பெரிய திராட்சை தோட்டம், அதுகூடவே wine factory யும் இருக்கும்..

ஹே... super da எனக்கு அங்க  ஒரு job குடு”””

கண்டிப்பா நீ தான் எல்லாம் பாத்துக்குவே... நீ தான் manager...

வார்தைகள் சீக்கிரமா காணாம போயிடனும்.. மனசில சுத்தி சுத்தி வர்றது தான் ப்ரச்சனையே...

“LET IT GO... let it go ..

lEt iT gOooooooooo....





2 comments: