Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Tuesday, August 7, 2012

”ஹசே கோடே சித்தாரா”-ஒரு ஷிமோகா பயணம்..


நான் சின்ன வயசா இருக்கிறப்போ எங்க வீட்டுக்கு எதிர்ல ராணி அக்காவோட வீடு இருந்துச்சு. அவங்க வீட்ல ரெண்டே பேர்தான் அவங்கம்மாவும் அந்தக்காவும். எப்பவாவது அந்த பாட்டி வெளியூர் போறப்போ நான் தான் அந்தக்காகூட படுத்துக்குவேன். ஒரு நாள் அந்தக்காவுக்கு கல்யாணமாயி  போயிட்டாங்க.எந்த ஊர்ன்னு கேட்டப்போ ஷிமோகா எங்கயோ Bangalore ல இருக்குன்னாங்க.அதுக்கப்புறம் அந்த ஊரும் ராணிஅக்காவும் மறந்தேபோச்சு. 

என்னோட friend சுகி ஒரு painting exhibition ல  கொளரிம்மா அவங்களையும் அவங்க பண்ற “ஹசே கோடே சித்தாரா” ன்னு சொல்லப்பட்ற அந்த சித்திரங்களையும் பார்த்து, ரொம்ப பிடிச்சு போய் அவங்க கிட்ட கத்துக்க வரலாமானு கேக்க, சந்தோசமா வரச்சொல்லிட்டாங்க.அதுனாலதான் இந்த ஷிமோகா  பயணம்.

கோவையிலிருந்து 7.00pm க்கு பஸ் எடுத்தாங்க சத்யமங்கலம் தாண்டி மலைபாதைல வண்டி (திம்பம்) போறப்போ ஒரே திகில் தான். சாப்பிட்றதுக்காக 9.30 நிறுத்திட்டு மறுபடியும் பஸ் நகந்துச்சு..அப்போதான் யானை ஒன்னு  ஹாயா ரோட்ல மூங்கில் சாப்பிட்டு நின்னிட்டிருந்தது. பஸ் கொஞ்சம் wait பண்ணி அப்புறமா எடுத்தாங்க.அந்த நேரத்தில அது பார்க்க அவ்வளவு அழகா இருந்துச்சு.

ஷிமோகா போய் அங்கேஇருந்து “SIRIVANTHE" அப்படின்னு ஒரு ஊருக்கு போனோம். போறவழியெல்லாம் அழகோ அழகு தான். சின்ன சின்ன புல் சரிவுகளும், குளம் மாதிரியான நீர்நிலைகளும் அதை சுற்றி சில பறவைகளும்ன்னு அவ்வளவு அழகு.

சந்திரசேகர்  அண்ணாவும், கொளரிம்மாவும் எங்கள அவ்வளவு அன்பா உபசரிச்சாங்க. அவங்க ”ஹசே கோடே சித்தாரா”  பெயிண்டிங் அப்புறம் நெற்கதிர்வச்சு அழகான டோர் கட்ஸ்,கிளிகூண்டுன்னு சுவாரஸ்யமாவும் அழகாவும் நிறைய  விஷயங்கள் பண்ணியிருந்தாங்க..




அவங்க வீடு ஒரு குருகுலம் மாதிரி இருந்தது..அழகா.. முன்னால துளசி மாடம்,கிணறு சுத்திலும் விதவிதமான செடிகளும் மரங்களும்னு..இந்த நெருக்கடியான city மாதிரியான place ல இருந்து போறப்போ இப்படியான வீடுகள் மனசுக்கு ரொம்ப அமைதியை தருது..

Break fast முடிஞ்சதும்நெற்கதிர் வச்சு பண்ற door cuts work கத்து கிட்டோம்.Evening சந்திரசேகர் அண்ணா “ ஹசேன்னா ”பாய்” (mat), ”கோடே”ன்னா சுவர், சித்தாரா- சித்திரம்ன்னும் அந்த ஒவியத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெயரும் அதற்கு ஒரு அர்த்தமும் இருப்பதை சொல்லிக்கொடுத்தார். கேக்க கேக்க ரொம்ப பிரமிப்பாவும், மரியாதையாவும் இருந்தது.






அவங்க வீட்டுல திருமணங்க நடக்கறப்போ மணமகனோட ஒன்று விட்ட சகோதரி மணமகனோட வீட்டு சுவத்தில ஹசே வரையராங்க. திருமணம் முடிஞ்சதும் மணமக்கள் அந்த சித்திரத்தின் கீழ் அமர்ந்து பூஜை செய்ய றாங்க.  பேச்சு கன்னட தமிழ்  கவிதைகள் கதைகள் பத்தியும் வந்துச்சு. அவருடைய கவிதைகளை எங்க friend suma படித்து சொல்ல நாங்க புரிஞ்சிகிட்டோம். ரொம்ப நல்ல கவிதைகள் அவை. அருமையா நிறைய விஷயம் சொல்லிருந்தார்.

ஒருவிஷயம் தெளிவாச்சு “ஹசே” கத்துக்க மூணு நாள் பத்தாது..கண்டிப்பா ஒரு வாரம் பத்து நாள் ஆவது ஆகும்னு. கொஞ்சம் கொஞ்சம் daily சொல்லிக்கொடுத்தாங்க. basic முடிக்கவே  time பத்தல..

அங்க நாங்க இருந்த மூணு நாளும் யாரோ வீட்டுக்கு வந்த மாதிரியோ முத தடவ அங்க போற மாதிரியோ இல்ல. எந்தவிதமான தயக்கமும் இல்லாம நாங்க இருக்க முடிஞ்சுது..சந்திரசேகர் அண்ணாவுக்கு ஒரு dream இருக்கு அது இந்த “ஹசே க்காக ஒரு university " ஆரம்பிக்கனும் அவர் ஒரு plan போட்டிருப்பதை காண்பிச்சார்.அவ்வளவு தெளிவா அழகா இருந்துச்சு. அங்கேயே தங்கி  அந்த சித்திரத்தை பழகவும், வெளியில் இருந்து வருபவர்கள் அந்த சித்திரங்களை பார்க்கவும், சுற்றிலும் மரங்களும் செடிகளும் சின்ன சின்ன குளங்களும் அமைத்து அதை பராமரிப்பதுன்னும் சொன்னார்.

அந்த university ல நாங்களும் involve ஆகனும்னு சொன்னப்போ எங்க மேல அவர் வச்சிருந்த நம்பிக்கை, அன்பு. சந்தோசமாயிருந்தது.மறுபடியும் ஒரு one week leave எடுத்திட்டு வருவதாகச் சொல்லி, கிளம்பினோம்..லேசா முனுமுனுத்த மழையும், அந்த மண்வாசனையும் எதையோசொல்லியபடிக்கு ரொம்ப தூரம் வந்திட்டேயிட்டேயிருந்தது..

2 comments:

  1. ரொம்ப நல்லா எழுதிருக்கே. அடிக்கடி சர்ப்பம் உள்ள வரும்ன்னு சொன்னத விட்டுட்டியே.... :-)

    ReplyDelete
  2. Thanks da.. ஆமா. snake babu சர்வ சாதாரணமா வந்துட்டு போகும்ன்னு சொன்னாங்க..

    ReplyDelete