Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Friday, October 7, 2011

எஸ்.ரா என்கிற எஸ்.ராமகிருஷ்ணன்


எஸ்.ரா.வை எனக்கு அவரோட கட்டுரைகள் மூலமா தெரியும்.தேசாந்திரி, துணையெழுத்துன்னு ஆனந்த விகடன்ல வந்தப்போ தொடர்ந்து படிச்சிருக்கேன்.சிறுகதைகள் புது நடையில் யாரையும் குற்றம் சொல்லாமல் அவங்க அவங்க சூழ்நிலைங்கிறமாதிரி இருக்கும்.

எஸ்.ராமகிருஷ்ணன் என்கிற எஸ்.ராவை சந்திக்கும் வாய்ப்பு திருப்பூர் சேர்தளம் நண்பர்கள் மூலமா அமைஞ்சிச்சு.இப்படி யாரையாவது போய் பாக்கனும்னு தோனியது கிடையாது.அது ஒருவித சங்கடமா இருக்கும்.நேர்ல அந்த முகம்  எப்படி ரியாக்ட் பண்ணும்னு சொல்லமுடியாதே அதனால் ட்ரை செய்வதே கிடையாது.முரளி சொன்ன எஸ்.ரா. வேறு மாதிரி தெரிஞ்சதால போனேன்.அவரை பார்த்து பேசிவிட்டு வரும்போது தான் நினச்சுகிட்டேன். நல்ல வேளை வந்தோம் இல்லேனா ஒரு அற்புதமான மனிதரை பார்க்கும் வாய்ப்பை இழந்திருப்போமின்னு.ஏதோ ஒன்னு பண்ணனும்னு நினைக்கிறப்போ செய்திடனும்.இல்லேனா சில நல்ல சந்தர்பங்களைத் தவறவிடுகிறோம்.

எட்டுத்திக்கும்ங்கிற தலைப்புல எஸ்.ரா பேசினார்.உள் நுழையும் போதே நம்ம தயக்கத்த அவரோட சிம்பிளான நடவடிக்கைக மூலமா இயல்பாக்கினார். பார்வையாளர்கள் பக்கமா வந்து அவங்க கூடவே உட்கார்ந்து பேச ஆரம்பிச்சார்.

ஒரு பிரயாணம் எவ்ளோ விஷயங்களை கத்துக்கொடுக்குது..ஊர் சுத்தும் போதும் திரும்பி வரும் போதும் தான் வீடுங்கிறதோட அவசியம்புரியுதுன்னும், உலகமே அவங்கவங்க வீட்டு வாசல்ல இருந்துதான் ஆரம்பிக்குதுன்னு சொன்னதும்,
சக மனிசங்ககிட்ட காண்பிக்க வேண்டிய நேசம்,ஒவ்வொருத்தரோட சூழ்நிலைகள் தான் நல்லவனாவோ கெட்டவனாகவோ நடக்க வைக்குது அப்படிங்கிறதயும் அழகா சொன்னாரு.
கடவுள் பற்றிய பதில்ல நம்பிக்கைங்கிறதைவிட தேவையாயிருக்கு, அவர் பார்த்துக்குவார்ங்கிறது ஒரு செளகர்யம்தானே அப்படின்னு சொன்னார்.ஆமான்னு தோனிச்சு.
நிறைய கேள்விகள், ஒவ்வொரு கேள்விக்கும் நிதானமான ஆழமான பதில் கிட்டத்தட்ட 3மணி நேரமும் போனதே தெரியலை.நிறைவுக்கு வந்த போது இவ்வளவு சீக்கிரமாகவான்னு தோனிச்சு.

எஸ்.ரா.வுக்கு தாகூர் விருது கொடுத்திருக்காங்க. சரியான மனிதர்களுக்கான அங்கீகாரம் எப்படியாவது  வந்தடைவது ரொம்ப  சந்தோஷம்.அவரோட பயணம் இந்தியா முழுமைக்கும் நடந்திருக்கு எல்லைகள் தாண்டி மனுஷங்க ஒன்னுதான்னு அவர் சொல்ற கருத்து உண்மைதான்.அது இந்தியா மட்டுமல்ல உலகத்திலேயே எந்த எல்லை கோடும் இருக்கக்கூடாது தான்.அடிக்கடி மனச சுத்தம் பண்ணி வச்சிக்கனும்.எல்லோரயும் ஒரே மாதிரி நேசிக்கனும்..அவரோட போன் நம்பர் கொடுத்திட்டு இருந்தார் யாரோ கேட்டதற்காக எல்லாருக்கும்.வெளியில் வரும் போது எழுத்து தாண்டி ஒரு நல்ல மனிதரை சந்திச்ச திருப்தி இருந்துச்சு மனசுல...

2 comments:

  1. ஆம். எஸ்.ரா வின் புத்தகங்கள் வாழ்வின் மீதான வேறொரு கோணத்தை எனக்கு அறிமுகப்படுத்தின.

    ReplyDelete
  2. @Nagasubramanian,

    ம்ம்..நீங்க சொல்றது சரிதான்..அவர் ஒரு தாயோட கைகள் பத்தி ஒரு கட்டுரையில் எழுதியிருப்பார்..அவருடய கட்டுரை தான் ரொம்ப பிடித்தமானது எனக்கு...

    ReplyDelete