Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Friday, February 24, 2012

சின்ன சின்னதாய்.. சுவாரஸ்யமாய்..-2

திடீர்ன்னு எங்கியாவது என்னை தொலைச்சிடனும்னு தோனும்.யாருமே தெரியாத ஊருக்கு போயிடனும்னு தோனும் அப்படி நானும் சுகிர்தாவும் தொலைந்த போன ஒரு நாளில்..

ஒவ்வொரு ஊரும் விடிகாலை பொழுதில் ஒரு ரம்யமான அழகோட இருக்கும் தெருவெல்லாம் சுத்தமா தெரியும் அந்த நேரத்தில ஏதோ ஒரு முக்கியமான விஷயத்துக்காஅவசரமாக போறமாதிரி பறவைங்க இங்கேயும் அங்கேயுமா பறக்கறது பாக்கறதுக்குஅழகா இருக்கும்.அப்படித்தான் திருநெல்வேலியும் இருந்தது.காலை 5மணிக்கு இறக்கிவிட்டு நகர்ந்தது நெல்லை express. ஒரு coffee வாங்கி குடிச்சிட்டு வழி கேட்டேன் புது பஸ்டேண்ட்க்கு அவ்வளவு மரியாதையா வழி சொன்னாங்க. இங்க கிளம்பும் போது திருநெல்வேலியா? பார்த்து உஷார்ன்னு பயப்படுத்தியிருந்தாங்க.புது busstand வந்து wait பண்ணிட்டிருந்தேன் சுகிக்காக.






அம்பை (அம்பாசமுத்திரம்) போறவழியெல்லாம் ஒரே வயலும் வரப்புமா அழகாயிருந்துச்சு. அங்க ஒரு friend வீட்ல breakfast முடிச்சிட்டு கிளம்பி பாபநாசம் வந்தோம் எவ்வள்வு முடியுமோ அவ்வளவு நாசம் பண்ணிட்டு இருந்தாங்க நம்ப மக்கள்அந்த ஆற்றை.கோவில் உள்ளே நம்ப முன்னோர் (monkey) கைல இருந்த water bottle ல உரிமையா?? பிடிங்கிட்டாங்க.பயந்திட்டே ஒரு round அடிச்சிட்டு வெளியில் வந்து குச்சி ice  வாங்கி சாப்பிட்டு காரையார் bus ல ஏறினோம்.


KMTR என்று சொல்லப்படும் KALAKKAADU MUNDANTHURAI TIGER RESERVE FOREST தாண்டி இருந்த காரையார் டேம் அவ்வளவு அழகு. சுற்றிலும் அடர்த்தியான காட்டுப்பிரதேசமா இருக்கு.பாணதீர்த்தம் அருவிக்கு படகில் போனோம். life jacket கொடுக்கலை வச்சிருந்தாங்க நான் எடுத்ததுக்கு பிடிங்கி வச்சிட்டாங்க.ஏதாவது நடந்ததும் செய்வாங்க..








பொதிகை மலையின் அழகு, தாமிரபரணி, சேர்வலாறு, காரையாறு,பாம்பாறு போன்ற ஆறுகளின் வாசம் அடுத்தடுத்து என ஒரே பச்சைபசேல் தான். கண் பத்தலை அவ்வளவு இயற்கையையும் காண.







KMTR ல night தங்கனும்னு ஆசையா இருந்தது அங்கே checkpost ல விசாரிக்க  permission வாங்கிட்டு வந்திருக்கனும்னு சொன்னாங்க. சரி வந்ததுக்கு சூடா மீன் குளம்பும் சாப்பாடும் சாப்பிட்டு மனச ஆத்திக்கலாம்னு நல்லா வயிறு முட்டசாப்பிட்டு பின் பாபநாசம் வந்து அங்கே கையில் இருந்த காசுக்கெல்லாம் கண்டதையும் வாங்கி தீர்த்தோம்


சரி ஒரு try பண்ணுவோம்ன்னு பாபநாசம் ரேஞ்ச் office போய் coimbatore ல் ஒரு petrol bunk ல் பாத்து வாங்கியிருந்த கூந்தகுளம் பறவைகள் சரணாலயதின் officer பேர் சொன்னோம்.


Forest ல work பண்ண friend அப்பா, தெரிஞ்ச தெரியாத நண்பர்கள்னு எல்லாரையும் தெரியும்னு நான் விட்ட வண்டிய பார்த்திட்டு சுகி திருதிருன்னு முழிச்சிட்டு உட்க்கார்ந்து இருந்தாங்க.அந்த officerம்
அதேதான் சொன்னார், முதல்லயே book பண்ணனும்னு. சரி கிளம்புவோம்னு ready ஆக திடீர்ன்னு அவர் mobile க்கு call வந்தது.எங்களை ஜாடையிலேயே எழுந்திருக்கச்சொல்லி வெளியில் நின்றிருந்த van னில் ஏறச்சொன்னார்.வண்டி நகர, இவருடய senior officer வந்திருப்பதாகவும் அவரிடம் சொல்லிப்பார்க்கலாம் if u have luck u get the chance ன்னார். மீண்டும் காரையார் checkpost பார்த்து சென்றது van. 


முக்கிய விஷயம் போல், அவர் மொபைலில் பேசிக்கொண்டிருந்தார் சிறிது நேர காத்திருதலுக்குப்பின் அவரிடம் இந்த officer எங்களை அறிமுகப்படுத்தி permission கேட்டவுடன் அவர் இவங்களை inspection bungalow விலேயே தங்கிக்க சொல்லுங்க என்றதும் ..yes finally we got permission to stay at forest...சந்தோசமா feel பண்ணினாலும் இருந்த காசெல்லாம் வாங்கித்தீத்தது ஞாபகம் வந்தது.


ஏதோ ஒரு தைரியத்தில் range office போய் சேர்ந்தோம். உள்ளே நுழையவும் current cut ஆயிடுச்சு, நிலா வெளிச்சத்தில் ஒரு வயதான ஒருத்தரும் ஒரு பெண்ணும் நிற்பது தெரிந்தது.இங்கே current போகவே போகாதும்மா திடீர்ன்னு போயிருக்குன்னார்.அதுக்கென்ன இப்படியெல்லாம் நடக்கும் நாங்கவந்திருக்கமேன்னு மனசுல தோனிச்சு.மெதுவா பேச்சுகொடுத்ததில் நம்ம ஊர் பொண்ணுன்னு தெரிய ஆஹான்னு கொஞ்சம் நிம்மதியாகி அவங்க மூலமாவே night dinner முடிச்சிட்டு jeep ல forest க்குள்ள போக ஒரே thrilling ஆவும் காட்டை அந்த நேரத்தில் பார்ப்பது ஒரு அலாதியான ஆனந்தமாவும் இருந்தது.நல்லா ஒரு round அடிச்சும் மானைத்தவிர வேறெதுவும் பார்க்கலை.


Room க்கு வந்ததும் அந்த பொண்ணுகிட்ட ஊருக்குப்போய் தருவதாக  சொல்லி பணம் வாங்கிகிட்டோம்.அவங்க early morning கிளம்பிட்றதா சொன்னாங்க  எனக்கும் சேர்த்து சுகி தூங்க, முழிச்சிட்டேயிருந்த நானும்,எப்பவோ தெரியல தூங்கிப்போனேன்...


நல்ல tea யோட அழகான ஒரு காலைப்பொழுது மனசு குதுகலிக்க ஆரம்பிச்சது.ஒரு walk போலாம்னு brush பண்ணிட்டு கிளம்பினோம்.சேர்வலாறு பக்கமா நடக்க ஆரம்பிக்க கண்ணு முன்னால மரம் செடி கொடிங்க விதவிதமா ரம்மியமான அந்த அதிகாலை நேரத்தில நிறைய பறவைங்களோட சத்தம்னு ரசிச்சிட்டே  போய்ட்டிருந்தோம்.கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆளரவமே இல்ல திரும்பவும் மனசு வரல ஆனா கொஞ்சம் திகிலா இருந்தது.






ஒருத்தர் cycle ஒட்டிடு வந்திட்டிருந்தார் அவர்கிட்ட கேட்டோம் எப்படி வழி பயமில்லையா போலாமானு அவர் தனியாவா வேண்டாம்னாரு,மிருகங்க தொந்தரவு இருக்குமானு கேக்க இல்ல மனுஷங்கதான் தொந்தரவு செய்வாங்க மிருகங்க ஒன்னும் செய்யாது ஒதுங்கிடும் ஆளரவம் கேட்டான்னாரு.எங்களுக்கு மனஷங்க மேலபயம் இல்ல அவங்க நல்லவங்கதான்னு சொல்லி நடக்க ஆரம்பிச்சோம்.அவரும் போயிட்டார் எங்களுக்கு முன்னாடி.


கொஞ்ச தூரம் போனதும் அவர் ஏதோ பறித்துக்கொண்டிருக்க நாங்க பக்கத்தில போய் பார்த்தோம்.வெள்ள வெள்ளேரென தும்பப்பூவாய் காளான் கொடகொடயா வெடிச்சிருந்தது.அவருக்கு help செய்ய களத்தில் இறங்கி சுகியும் பறிச்சாங்க.முடிச்சவுடனே அந்த அண்ணா பேரு என்ன செய்றாங்க எல்லாம் கேட்டு friend ஆயிட்டோம்.அவங்க வீட்டுக்கு வருவீங்களானு கேக்க ஜோரா தலயாட்டிட்டு கிளம்பி நடக்க ஆரம்பிச்சோம் இன்னும் ஆறு கிமீ தூரம் இருந்தது சேர்வலாறு.







 திடீர்ன்னு ஒரு புதர்ல இருந்து சத்தம் ஏதோ ஒன்னு எதையோ அடிச்சு சாப்பிட்டு இருந்துச்சு கொஞ்சம் பெரிய உருவம் சிறுத்தை மாதிரி தெரியறதுக்குள்ள ரொம்ப பயமாப்போய் கைகாலெல்லாம் ஒதர ஆரம்பிக்க போலாம் போலாம்னு ஜாட காட்ட அந்த அண்ணா நிக்கலாம்னு பார்த்தவரும் நான் நடுங்கிறதப்பார்த்து சத்தம் போடாம நகர, பயத்தில பேச்சே வரல.கொஞ்ச தூரம் போய் என்ன அதுன்னு கேக்க சிறுத்தப்புலி தான் அடிக்கடி cross பண்ணும்னு அசால்ட்டா சொன்னாரு.







அவங்க வீட்டுக்குள் நுழைந்ததுமே கைகழுவுங்க சாப்பிடலாம் என்ற வரவேற்பு அந்தண்ணாவோட wife தான், சந்தோசமாய் இருந்தது.கடலைகுழம்பும் சோறும் சாப்பிட்டு பின் ”இம்புட்டு காளானையும் என்ன செய்ய, போய் சேர்வலாறு டேம் சுத்திட்டு வாங்க மறுபடியும் சாப்பிட்டு போகலாம்”என கண்டிப்பாய் சொல்ல(காளான் வேறு வாவான்னுது வேற விஷயம்) அங்கேயும் போய் ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு திரும்பி வர காளான் குழம்பு சூடாய் விறகடுப்பில் செய்த மணத்துடன்,ஒரு பிடி பிடிச்சிட்டு அங்கேயே ஒரிரு நாட்கள் இருக்கச்சொன்னவர்களிடம் இன்னொருதடவை வருவதா சொல்லிட்டு கிளம்பினோம்


வீட்டு வாசலத்தாண்டி வெளியே வர உலகம் ஆரம்பிக்குது.அந்த உலகத்த சுத்தறப்போ பார்க்கிறவங்கள்ளாம் நம்ம மக்களாவும், எல்லாமே நம்ம வீடுங்கிறமாதிரியும் தான் தோனுது

1 comment:

  1. S da thank you... அது உண்மைதானே நாமதான் பாத்தோமே..mangalore ல..எவ்வளவு அன்பான மக்கள்..அன்பான உபசரிப்பு எல்லாம்..

    ReplyDelete