Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Sunday, April 17, 2011

இலக்கணப்பிழையும் இன்னும் சில பிறழ்வுகளும

அது என்ன விழிப்பு வந்தும்கூட சும்மா படுத்துக் கிடப்பது,ஆபீசுக்கு லீவ்  அப்படின்னா உடம்பு  அப்படித்தான்   இன்னும்  கொஞ்ச  நேரம்  இப்படியேகிடவேன்  என்று  செல்லம்  கொஞ்சும்  எதாவது  யோசிச்சிட்டே  சும்மா படுத்துக்கும்  .சன்னல்  வழியா பார்த்தப்ப  பின்  வீட்டு  கிழபுரம் தெரிந்தது  போனவாரம்  பெஞ்ச  மழையிலே  புல் எல்லாம் முளைச்சு  காடு மாதிரி இருந்தது ..கறிவேப்பிலை  மரத்த  வெட்டி  விட்டுருந்தாங்க  துளிர்க்க  ஆரம்பிச்சிடுச்சு ..இந்தவாரமாவது  ஒரு  கறிவேப்பிலை  நாற்று  வாங்கி வைக்கணும்  ஆத்திரம் அவசரம்னா  கடைக்கு  ஓடவேண்டி  இருக்கு ..

இன்னுமொரு  முக்கியகாரணம்  குயிலுக்கு  அந்த  பழம்  இஷ்டம்னு  நினைக்கிறேன்  குயில்   தினந்தோறும்  அந்த மரத்திலே  உக்காந்து  சாப்பிடும் ..குயில்னா கருப்புநிறம்  அல்ல வெள்ளையில்  சாம்பல் புள்ளி  போட்ட  மாதிரி பொட்டு பொட்டா உடம்பு பூரா இருக்கும் .. இப்போ எங்கே  போயிருக்குமோ?

முன்ன  குடியிருந்த  வீட்ல  இப்படி  எல்லாம் பாக்க முடியாது ..அது  வாடகை வீடு ..வீடுங்கறது ஒவ்வொருத்தருக்கும் நிம்மதிதர்ர இடமா  இருக்கணும் எதுவேனாலும் பொறுத்துக்கலாம்  வீடு சுகமா  இல்லேனா  எங்கே  போவது ..அந்த  வீடு உண்மையிலே  ரொம்ப  கொடுமையா இருக்கும் .. லைன்னா மூணு  ரூம்  நடு ரூமுக்கு  காத்தே வராது ..சன்னல் இருக்காது ..வீடுன்னா நல்லா வெளிச்சமும்  காத்தோட்டமும் கண்டிப்பா  நாலு  பச்சையும்  கண்ணுக்கு  படணும் ..

அதென்ன  பெட்டி  பெட்டியா அடுக்கின  மாதிரி அப்பெல்லாம்  ரொம்ப கஷ்டமா இருக்கும் .கடவுள்கிட்ட  எப்பவும்  இதுதான்  பிராத்தனை ஓயாத  முயற்சியோ  உண்மையில்  கடவுள்  கண்  திறந்தாரோ  இந்த  வீடு அமைஞ்சது ..இப்போ  நெனச்சாலும்  சந்தோசமா இருக்கு ..நமகேநமக்குன்னு ஒரு வீடு ..நானே  ராணி ..ராஜா ? அது தனிகதை ...நான்  தனியான  கதை .
பதினெட்டு  வயது  திருமணமும்   இருவத்திநாளில் கணவன்   இறந்ததும்  தான் அந்த  கதை ..

எப்பவும்   துக்கத்த  போக்கிக்க ஈசியான  வழி அதை  அனுபவிக்கரதுதான்னு     கொஞ்சகொஞ்சமாபுரிஞ்சது ..உடல்நைஞ்சு உள்ளம்னைஞ்சும் போகும் . ..இழந்த  பாரத்த சுமந்துகொண்டு  வாழ்கைய   நகர்த்த  வேண்டிஇருக்கு ..

ரொம்ப  டைம்  ஆயிடுச்சு, விஜயா அக்கா பையனுக்கு கல்யாணம், போனவாரமே  போன்  பண்ணி  சொல்லிருந்தாங்க "கண்டிப்பா   வந்திடு  மாங்கல்யம்  செய்யகுடுதிட்டு , ஜவுளி  எடுக்க  போகனும்னு "...அவசரமா ரெடியாயி வண்டி எடுத்தா இருவது நிமிஷம் ..கிருஷ்ணா காலனி  போயிடலாம் .. மேட்டுபாளையம்    ரோடு தான்  கொஞ்சம்  கஷ்டம்  ஓட்றது.. எப்போ  ரோடு போட்டு  முடிப்பங்கன்னே தெரியலே..ஜப்பான்ல சுனாமி வந்த ரோடு ஒரு வாரத்தில ரெடி பண்ணாங்கலாம் 

அவங்க    வீட்டுக்குள்ள  நுழைஞ்சப்ப  சித்ரா  தான் முன்னால  இருந்தாள்  விஜயா அக்கா பொண்ணு  "போதுமா நேரம் "? இப்படி  ஒரு வரவேற்பான்னு  யோசிச்சிட்டே உள்ளே போனேன் .  

ஆமா  எப்பிடி  இவங்கனாலமட்டும்  தனியாபாக்கிறப்போ ஒருமாதிரியும் கூட்டத்தோட வேறமாதிரியும்  நடந்துக்க  முடியுது ?. விஜியாக்கா பார்த்தாங்க  "எப்போ வந்திருக்கே " நு  கேட்டாங்க  ஆக  வா   ன்னு வாயில  வரவேஇல்ல ...அவங்க எப்பவும் இப்படி தான் யாரும் இல்லேன்னா   உருகி  உருகி பேசுவாங்க ..பக்கதுல  யாராவது  இருந்தா  கண்டுக்காத  மாதிரி  இருப்பாங்க ..

கீழ   மசால்  தோசையு ம் பொங்கலும்  இட்லி   வடையும்  கலந்து  மனம்  பரப்பியது ..மேல போனேன்  பின்ன  சாப்டுக்கலாம்  ..ஆச்சு  சாமிகும்பிட்டு கற்பூரம் எல்லோரும்  தொட்டு  கும்பிட் டே  வந்தாங்க .. 
அப்புறமா தாலி செய்வதற்கான  ஒரு தங்க காசை   தட்ல     வச்சு    விஜயாக்கா   எல்லோரையும்  அழைத்தபடியே  வந்தார்  "செல்விக்கா வாங்க ,யசோதா வா ,அமுதா அண்ணி  வாங்க என்று ஞாபகமாய்  அழைத்து  கவனமாய்  என்னை  தவிர்த்தார் .. என்னை தவிர அழைத்த பெண்களெல்லாம் அந்த தட்டை சேர்ந்து பிடித்து ஆசாரியிடம் தந்தனர்..இதெல்லாம்  பழக்கம்  தான் என்பது  போல் பாப்பாத்தி பெரியம்மா  மூலையிலே  நின்று    கொண்டிருந்தார்  என்னை பரிதபமாய் பார்த்த படிக்குபெரியப்பா  இறந்து  இரண்டு  வருஷமிருக்கும் ..

துக்கம்  பந்தாய் உருள   கஷ்டப்பட்டு  என்னை விரோதித்து கொண்டு  முட்டி  வரும்   அழுகையை  அடக்கினேன் .. வேகமாய் படியிறங்கி வீடு  வந்து  சேரும்  வரை  நான்  கஷ்டப்பட்டு வாங்கிய  பட்டமும்  என்னால்  நடத்தப்படும்  சிறு  தொழிலும் ,எனக்கு  தந்திருந்த  சுய  மதிப்பீடு  வெகுவாய்  குலைந்து  விட்டது ..எதோ ஒன்றால் அடிபட்ட  துக்கம் தொண்டையை  அடைத்தது ..

வீட்டுக்குள்  வந்து கட்டிலில்   விழுந்தேன் .. தலையணையில்  முகம்   புதைத்த  போது சிறிது நிம்மதியாக இருந்தது ..இயலாமையுடன்  சன்னல்  வழி  ஊடுருவிய பார்வையில் பட்டது அந்த குயில்..  மொட்டை  மரத்தில்   அமர்ந்து  தலை   திருப்பி  எதையோ  தேடிக் கொண்டிருந்தது ..





.

2 comments:

  1. பிறந்தநாள் வாழ்த்துகள், ப்ரஜ்னா....
    முழுவதும் படித்தேன்... கடைசியில் எங்காவது சிறுகதை முயற்சின்னு எழுதியிருக்கனும் நினைத்துக்கொண்டே படித்தேன். இல்லை என்பது பாரம்..
    குயில் திரும்பி வந்துடுச்சு...
    மொட்டை மரத்தில் நாளை இலைகள் கிளை விடும்...
    மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. Thank U Murli..ரொம்ப சந்தோசமா இருக்கு ...

    ReplyDelete