Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Thursday, April 28, 2011

இது கொஞ்சம் அவசரமானதும் மிக அவசியமானதும் கூட




.நந்தாவின் பெரியம்மா  என்னை  இந்த  வாரத்தில்  மூன்று  முறை  தொடர்பு  கொண்டார் ..எல்லோருக்கும்  இருபது  போலவே  எனக்கும்  வேலை  வேலை அப்புறமும்  வேலை தான் ..பின்னே  டைம்  கெடச்சும்  நான்  IPL பார்த்துட்டு ப்ளாக்ல சுத்திட்டு  புக்ஸ்  படிச்சுட்டு  நானா  நோ  சான்ஸ் ... இல்லவே  இல்லை ..அப்புறம்  ஒரு  வழியா போன்  நம்பர்  புடிச்சு  எல்லாம்  கேட்டாச்சு ..10th முடிச்சு    டிப்ளோமோ விற்கு  மார்க்  பேசிஸ்ல எடுத்துக்குவாங்க வருஷத்துக்கு  கிட்டத்தட்ட  50,000  செலவாகும்  அவ்ளோதான்  ஆனா  மூணு  வருஷத்தில  அவன்  யார்  ஹெல்பும்  இல்லாம  தன் சொந்தகால்லையே  நிக்கமுடியும் 

நந்தாஅவன் பெற்றோரின்  ஒரே  செல்ல  பையன் ..அவ்ளோ  அருமையா சீராட்டி பாராட்டி  வளர்க்கப்பட்டவன்  ..திடிரெனஒருநாள்  அவன் அப்பாவுக்கு  முடியாமல்  போய் தொடர்ந்த மருத்துவ  பரிசோதனையில்  அவருக்கு  எய்ட்ஸ் வந்திருப்பது     உறுதியாகி  பின்  சிறுது நாட்களில்  மரணமடைந்தார் ..அவன்தாயும்  மறுபடி  சில  வருஷங்களில்...  அவன்  ஆறாம் வகுப்பு  படிக்கையில்  போய்சேர்ந்தார் ..

உறவினர்கள்  கூடி  அவனுக்கு  டெஸ்ட் எடுத்து பார்த்ததில் நெகடிவ்  என்று  வந்து  நிம்மதி  பெருமூச்சுடன்  70 வயதான  அவனின்  தாய் வழி  பாட்டியிடம்  ஒப்படைத்து  அவன் தாயாருடைய  அக்காவின்  மேற்பார்வையில்  10 வகுப்பு  எழுதிவிட்டான் .. மேற்கொண்டு  படிக்க  வைக்க  அவன் பெரியம்மாவால்  முடியவில்லை ..பணம்  ஒரு  காரணம் பின் அவர்  அவருடைய  பையன் படிப்பிற்காக  வேறு  இடம்  செல்வதாக  உள்ளார் ..


இப்படியாக  இது  ஒரு கதை  என்றால் ..இன்னொமொரு தோழி  முலமாக  தெரிந்த  விஷயமும்  கொடுமையானது  அப்பெண்ணிற்கு  திருமணமாகி  சிலமாதங்களே  ஆன சமயத்தில்  தான்  அவள்  கணவருக்கு  இந்நோய்  இருப்பது  தெரிந்து  இவரையும் பரிசோதிக்க  ...சில

வருடங்களிலேயே  அடுத்தடுத்து  இறந்து  போயினர் ..


இந்த  பாதிப்பு  மட்டுமல்லாமல் ..வேறு பல  நோய்களுக்கு  ஆட்பட்டவர்களுக்கு  கூட  தெரியாமல்  திருமணத்தை  நடத்திவிட்டு  பின் அப்பாவியாய் கூட வருபவர்களும்  தங்கள்  வாழ்வை தொலைகின்றனர்..உயிரோடிருந்தாலும்  குழந்தை ஆன பின் கணவரோ  மனைவியு இறக்க  நேரிட்டால்  அடுத்து  உயிருடன்  இருப்பவர்கள்  படும்  வேதனையும்  சந்திக்கும்  பிரச்சனைகளும்  தான் எத்தணை எத்தணை ..

ஏன் நம்மில்  யாரும்  ஜாதகம்  கேட்பது ,நகை ,வீடு  சொத்து  பாத்து கேட்பவர்கள்  ஆரோகியமானவர்களா   என்று ஆராய  ஒரு முயற்சியுமே  எடுப்பதில்லை ..

சரி  நாம்  தான் எல்லாவற்றிற்குமே  சட்டம்  போட்டால்  தான் அதற்கு செவிசாய்ப்போம்  கேட்போம் அரசாங்கம்  தான் அப்படி   ஒரு சட்டத்தை  போட்டால் தான் என்ன  .(மகாராஷ்ட்ராவில்  இருபதாக  கேள்விப்பட்டேன்

இது கொஞ்சம்  அவசரமானதும்  மிக  அவசியமானதும்  கூட 




No comments:

Post a Comment