எப்பொழுதும் வரும் ஒரே கனவு
அதே கனவு
சுகமான அணைப்பில்
அதன் கதகதப்பில்
உள்மனதின் உண்மை உரைக்க
ஞாபகத்தின் விளிம்பில்
புரண்டு படுக்கையில்
சட்டென வரும்
பாழாய்ப்போன விழிப்பு
தூரத்து நாயின் ஓசை
புள்ள பூச்சி சத்தம்
கடந்த கால காயங்களை
கீறி விட்டு
விழியோரம் ஈரம் பார்க்கும் மனம் ..
ஏதேதோ நினைவுகளுக்கு பின்
பிடிவாதமாய் இறுக்கி மூடும்
விழிகளில் விடியற்காலையில்
நினைவின் களைப்பில்
உறக்கம் கொள்ளும்
ஆயுள்தண்டனை கைதிக்கும்
கைம்பெண்ணுக்கும்
இன்பமில்லாத இரவுக்காய்
சபிக்கப்பட்டவர்களும்
மறுபடியும் கண்விழித்தால்
மட்டுமே காணமுடியும்
விடிந்த பொழுதையும் ..
விடியாத இரவையும் ..
அன்புத் தோழி...
ReplyDeleteகுறுக்கும் நெடுக்குமாய் விரிந்திருக்கும் வாதுகளின் நடுவே உறக்கமும், கனவும், விழிப்புமாய் வீற்றிருக்கும் ஒரு ஒற்றைக் குருவியை, அதன் ஏக்கத்தை தெளிவாகவே பார்க்க முடிகிறது உங்கள் கவிதையில்...
நன்றி சுகிர்தா.."கனவு என்பது உண்மையில் என்ன நினைவுகள் தாங்கும் பை தானே "எனும் வரிகளும் ஞாபகத்துக்கு வருது சுகிர்தா .Thank u
ReplyDelete