Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Friday, April 1, 2011

களவு போன கனவு

சின்னுவுக்கு அன்று பள்ளி விட்டு   வீடு  வந்து  சேரும்  வரை  ஒரே  அப்பா  வின்  நினைப்புதான் ..இன்னிக்கி எப்படியும்  வந்துடுவார்னு தனக்குதானே சொல்லிக்கொண்டான் ...அவன் அப்பா வெளியூர்  வியாபாரத்துக்கு  போய் நாலு  நாள் ஆகுது .. அவர் இருந்தா காலைல  5.30 மணிக்கு  டான்னு 'வேணி "  பேக்கரிக்கு  டீ  குடிக்க  கூப்பிட்டுவருவார் சின்னுவை  பெஞ்சில உக்காத்தி  வச்சு  பால் டீ  யும்  பன்னும் வாங்கித்தருவார் ..அதுவும்  பல்லு  கூட வெளக்காம   சாப்டறபோ டேஸ்ட் நல்லா இருக்கிற மாதிரி  இருக்கும் ..பல்லு வெளக்கிட்டா டேஸ்ட் போய்டும்னு  சின்னுவுக்கு  நெனப்பு ...


அப்புறம் ரெண்டுபேரும் நடந்து பூமார்கட் வந்தாங்கன்னா சாமிக்கு பூவாங்கிட்டு, அங்கேயே காய் மார்க்கெட்டும் பக்கந்தான்.. மணத்தக்காளி கீரை   கண்டிப்பா வாங்குவார்..உடம்புக்கு நல்லதுன்னு  சொல்லுவார்..ஆனா  அந்த  கசப்பு  சின்னு வுக்கு  கொஞ்சம் கூட பிடிக்காது ..ஆனாஅவனோட  அம்மா சுடு சோற்றில் போட்டு ஊட்டிவிட்றப்போ நல்லா ருசியதானிருக்குனு நெனச்சுகிட்டான்..


ரெண்டு பெறுமா திரும்பி வீட்டுக்கு வரப்போ கொழா புட்டு வாங்கிகொடுப் பாரு  ..சின்னுவுக்கு  கொழா புட்டுன்னா ரொம்ப உசிரூ  ..விளையாட்டு     சாமான்  எல்லாம்  வாங்கிகொடுபாரரூ ..பூமார்கட் எதிர்புறமா   இருக்குமே  சட்டி  பானை கடைங்க  அத ஒட்டி இருக்கிற கடைகள்ல தான் வாங்கு  வாங்க ...சின்னு  வச்சிருக்கிற  கணேசா உண்டியல்  கூட அப்படி  தான் வாங்கினது .. டெய்லி  காலைல  ஒரு ரூவா , மதியான ஒரு ரூவா ..சாயிங்காலம் ஒரு ரூவானு ..அப்பா  குடுக்கிற  காச  சின்னு அதுலதான்  போட்டு வைப்பான் ..இப்போ நாலுநாள் சேத்து வாங்கணும் அப்பா அதெல்லாம்  கரெக்டா  கொடுத்திடுவார்னு கணக்கு போட்டுட்டே வந்தான்...


சின்னு வுக்கு  அப்பா  ரொம்ப  இஷ்டம் ..அம்மாகூட அப்புறம்  தான்.. ஏன்னா   அவரு சின்னுவ  திட்டவே  மாட்டார் ..அவனுக்கு அவர் கூப்பிடறதே ரொம்ப நல்லா இருக்கும் ..சின்னைய்யானு தான் அவன கூப்பிடுவார் ..அவங்க  குலதெய்வமான சின்னமலயமான் பேர தான் சின்னுனு வச்சாங்க ..அவரு   சின்னுவ  ஒரே  ஒரு  தடவை  தான் அடிச்சிருக்கார்  அதுவும்  சின்னு  மேலதான்  தப்பு ..கடைக்கு  அனுபினா போனமா வந்தமானு  இல்லாம பராக்கு பார்த்திட்டு  ஒருமணி  நேரம்  கழிச்சு  வந்தா  யாருக்கு  தான் கோவம்  வராது...ஒரே அறை கண்ணுல பொறி பறந்துச்சு அவனுக்கு...


அப்புறம் டானிக் வாங்கி வச்சு . கொடுப்பாரு ..சின்னு ரொம்ப ஒல்லியா இருக்கானாம .அதுக்கு ..பின்ன வாரங்கண்டா ஆட்டுகரி  எடுத்து  அவர்  கையாலேயே  ஊட்டி விடுவாரு ..

சின்னு வுக்கு அப்பாவ பார்த்தா ஒரு விசயதிலததான் கோவம்  வரும் ..அப்பா எதுக்காகவோ  திடீர்னு  குடிக்க  ஆரம்பிச்சிடுவார்..அப்புறம் ஒருமாசம்  வேலைய்கும்  போகமாட்டார் ஒன்னுத்துக்கும் போக  மாட்டார் குடிச்சிட்டே  இருப்பார் அப்பதான்  அப்பாவை  பார்த்தாலே அவனுக்கு கோவம் வரும் ..அவனோட பாட்டி கூட  சொல்லுவா  எப்படித்தான் இப்புடி  ஆயிப்போனனோனு..எதுக்குத்தான் இந்த சாராயக்கடைல்லாம் இருக்கோன்னு அடிக்கடி யோசிப்பான்..


சின்னுவோட அம்மா  இதுக்காக  ஊர்ல  இருக்கிற  இல்லாத  சாமீ  எல்லார்கிட்டயும்  வேண்டிக்குவாங்க ..வெளக்கு ஏத்தி  சாயங்காலம் ஆச்சுன்னா பாட்டெல்லாம்  பாடி சாமீ கும்பிடுவாங்க ..ஆனாலும் அவனோட அப்பா மாறலே ..அதெலாம்  ஒருமாசம் தான் திரும்ப அவரு நல்லவரயிட்டா  அப்புறம் ஜாலி  தான் ரெண்டுபேரும  ஊர்  சுத்த கிளம்பிருவாங்க.. ஆனாலும்  இந்த  இம்சை   பொறுக்க முடியாம அவன் அம்மா ஒருவருசதுக்கு  முந்தி  தன்னோட  ரெட்டை  வடன் சங்கிலிய  வித்து குடுத்து அவருக்கு   ட்ரீட்மென்ட் கரென்ட்  ஷாக்  எல்லா எடுத்தாங்க ..அப்ப அவர பாக்கவே  அவனுக்கு பாவமா  இருந்துச்சு ..அப்புறம் இப்போ  ஒரு வருஷமா  அப்பா நல்லா தானிருக்காரூ .


சின்னு வுக்கு எப்போ  தா அவனோட அப்பா வருவரோன்னு  இருந்துச்சு ..ஏன்னா அவரு ஸ்கூல் இன்டர்வெல்  டைம்  ல  தேங்காய்  பன்னு  வாங்கி தந்துட்டு  போவார் ..சின்னுவுக்கு வெக்கமா  இருந்தாலும்  பெருமையாவும் இருக்கும் ..நைட்  அவர் பக்கத்தில  படுத்தான்  தூக்கமே  வரும் அவனுக்கு ..அம்மா கால் போட்டா திட்டுவாங்க அதுனால  அவங்க  பக்கத்தில  போறதேயில்லே அவன் .அப்பானா  ஜாலி  யா  காலை மேல  போட்டுட்டு  ஊர்கதை  எல்லாம்  பேசிட்டு  கட்டி  பிடிச்சிட்டு  தூங்கலாம் ..அப்பா எப்போ வரிங்கன்னு மனசு  புல்லா கேட்டுட்டே  இருந்துச்சு அவனுக்கு.. 


அவரு எப்பவும் தேச்ச  சட்டையும்  வெள்ளை  வேஷ்டியும்  தான் போடுவார் ..மெறுன் கலர்  ஷர்ட் இல்லாட்டி  பழுப்பு  வெள்ளை சட்டை ..எவ்ளோ சொல்லியும் ..பேண்ட்  தெயகவேயில்லை..  அந்த துணி தேய்கிற வேலை  சின்னு வுக்கு தான் அப்பாவோட  சட்டைய  தேச்சு  வாங்கிட்டு  வரணும் ..அப்புறம் கணேஷ்  ஊது  பத்தி பேக்கெட்டும்..அவ்ளோவே  தான் .அப்பா எப்போவருவிங்கன்னு கேட்டு கிட்டான் தனக்குள்ளேயே..


அவனுக்கு முழுசா  நாலுநாள்  ஆயிருச்சு  அப்பாவ பாத்து...வீட்டுக்கு  வந்தா யார்  யாரோ  நின்னுட்டு இருந்தாங்க ..அவனோட அம்மா வேற  அழுதுட்டே  பதில்  சொல்லிட்டு இருக்காங்க  ..இல்லை "அண்ணி"   அண்ணானா இருக்காது ஒரு டவுட் தான் அதுனாலத்தான்  காலைல  இருந்து  போன்  போட்டுட்டே  இருகாங்க  பஜாருக்கு ...மெறுன் கலர் முழுக்கை ஷிர்டும்  வெள்ளை வேஷ்டியும் தானாம்...
அண்ணி அழுகாதிங்க  அண்ணனாய்  இருககாதுநு சொன்னாங்க அவனோட அம்மா பெருங்குரலெடுத்து  அழுகிறார் ..


சின்னுவுக்கு  நன்றாய் ஞாபகம்  வருகிறது ..இந்ததடவை அவன் அப்பாவுக்கு தேச்சு கொடுத்தது "மெரூன் முழுக்கை சட்டையும் ..எப்பவும்  போடும்  வெள்ளை வேஷ்டியும் தான் ... 

2 comments:

  1. அருமையா எழுதி இருக்கீங்க தோழி.

    ReplyDelete
  2. அன்பு சுகிர்தா
    எப்படி இருகிறீர்கள் ..
    மிகவும் நன்றி ...சுகிர்தா ..என் முதல் கதைக்கு
    முதல் விமர்சனம்
    இதை நான் பொக்கிஷமாய்
    வைத்திருப்பேன் சுகிர்தா ..

    ReplyDelete