பேருந்துக்காக காத்து
நான் நின்ற போது
அதே பாதையில் கண்டும்
காணாதது போல் நீ சென்றபோது..
பூவிற்பவர் கூவிகூவி
அழைப்பது
காதில் விழுந்தும், அலச்சியமாய்
நீ நின்ற அந்த நிமிடம்...
என் பிறந்த நாளை
கட்டாயமாய் மறந்து விட்டு
அப்பாவியாய்
"அப்படியா" என்ற போது
உனக்கும் எனுக்குமான
நம் நண்பன் திருமணத்தில்
"புகைப்படம் " எடுக்கும்போது
எனக்கு மறுபுறமாய் நீ
மறைந்த போது
உடம்பு நோயுற்ற போதும்
உறவை இழந்து தவித்த போதும்
ஆறுதலாய் ஒரு வார்த்தை
எதிர் பார்த்து ஏமாந்த நேரம்
அத்துணை ஏக்கங்களுக்கும்
சொந்தக்காரன் நீ
அந்நியமாய் நிற்கும்
அத்துணை தருணங்களிலும்
காயமுற்று கலங்கும் மனது
மறுபடியும் ஒருசமாதானத்தை
நிறுத்தி உன்னையே சுற்றி
வரும் ஒவ்வொரு வினாடியும்
காயமுறும் தருணங்களே..
No comments:
Post a Comment