Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Tuesday, March 8, 2011

ஆண்கள் அறிக by தாமரை

கவிஞர் தாமரையோட இந்த கவிதை நல்ல இருந்தது..

"ஆண்கள் அறிக"

காதல் சொல்லும் கணத்தில் கூட
முதல் காதலிக்கான கவிதை 
வாசிக்கப்படுகிறது ...

கல்யாணத்துக்கு நெருக்கும் 
பழுத்த காதலிகளிடம் 
இன்னும் வயதுக்கு வராத
உங்கள் தங்கையின் 
திருமணத்தைப்பற்றிப்  பதறுகிறீர்கள்..

உங்களை நம்பி ஓடிவந்து 
மாலை மாற்றிகொண்டவளிடம்  
"என் அம்மாவை விட்டு 
வந்து விட்டேனே " என்று 
புலம்புகிறீர்கள் 

அடுப்படியில் வெந்து விறுவிறுக்க
மனைவி தயாரித்த மணத்தக்காளிக் குழம்பை 
உறிஞ்சிக்கொண்டே 
"என் அம்மா வைத்தால்
 ஊரேமணக்கும் " என்கிறீர்கள் 

"என் மனைவிக்கு மிகவும் பிடித்தது 
மல்லிகை பூ" என்று 
கைம்பெண்ணிடம் பூ வாங்கும்போது 
முணு முணுகிறீர்கள் .

வாழ்வின் விளிம்பில் 
உசலாடிக்கொண்டு இருப்பவளிடம் 
எப்படி உங்கள் பெண் குழந்தைகள் 
தேவதைகளாக இருந்து 
உங்களை காக்கிறார்கள் 
என்று வியக்கிறீர்கள் 

மரணப்படுக்கையில் இருப்பவளிடம் 
உங்கள் மனைவி பிரசவத்தில்
பிழைத்த கதையையும் 
விபத்தில் சிக்கியவளிடம் உங்கள் 
குருதி கொடையால் கண் விழித்த
கல்லூரிப் பெண்கள் பற்றியும் 
விவரிக்கிறீர்கள் 

பிள்ளையற்றவளிடம் உங்கள் 
பாட்டி பெற்ற பதினாறைப்
பட்டியலிடுகிறீர்கள்..

நட்டியகாரியின் வீட்டை
நாடி வந்து விட்டு 
அவள் காலை நக்கிக்கொண்டே 
உங்கள் வீட்டுக் "குத்து விளக்கை " எண்ணிக் 
கண்ணீர்  உகுக்கிறீர்கள்..

காதலோடு நீங்கள் பேச ஆரம்பிக்கும் 
ஒரு பொழுதேனும் இடை மறித்து
"அந்த மகிழம்பூ மரத்தடியில் வைத்து
மகேந்திரன் கொடுத்த முத்தத்துக்கு 
ஈடாகாது  எதுவும் " என்று 
சொல்ல வேண்டும் ...

கண்ணகிகளை மாதவியாக்கும்  போது
நீங்கள் நகுலன் அல்லது 
சகதேவனாகிறீர்கள்..

இடம் பொருள் எவலற்றுப்
பிற பெண்களைப்பற்றிப் பேசும் 
ஆண்கள் அறிக,
உங்களுக்கான முத்தம் 
வேறொரு உதட்டில் 
இடப்பட்டு விட்டது!


.



No comments:

Post a Comment