Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Saturday, September 15, 2018

         இறந்து போகும் முன் வாழ்ந்து                                 போவோம்...(Part 2)

சரியோ தப்போ அவர்களை முடிவெடுக்க விடுங்கள்...எப்பொழுதும் நீங்கள் ஆதுரமாய் இருப்பதை உணர்த்துங்கள்...சொத்து காண்பித்து மிரட்டாதீர்கள்...ஐந்து ஓர் ஐம்பது வயதிலும்...பணம் வேண்டும் ஆனால் பணம் மட்டுமே வாழ்வாகா்து...படிப்பு வேண்டும் அது மட்டுமே வாழ்வு ஆகாது, அவர்களை தனியாக இயங்க ஊக்கப்படுத்துங்கள்...எந்த பாலினத்தையும் நேசிக்க கற்றுக்கொடுங்கள்...அன்பு தான் ஆதுரம்..வேறுபாடுகள் அகற்றுங்கள்...எதற்கும் நிர்பந்திக்காதீர்கள்...ஆனால் கண்டிப்பு காட்ட வேண்டியத்திற்கு காட்டுங்கள்...உங்களுக்கு பிடிக்காததால் அல்ல, அது  பொது நன்மை கருதியதாக இருக்கட்டும்...

பாலினம் என்று வரும்போது அது எந்த பாலினமும்  நேசிப்பு காட்ட வேண்டியது தான் ஆம் சிறு வயதில் ஆண் பிள்ளைகள் பெண் பிள்ளைகள் கலந்தும் அல்லது அவரவர் தனித் தனியாக விளையாடி வந்தனர், பெண்ணும் ஆணும் பழகுவதையே தப்பாய் புரிந்து தடை செய்யும் சமுகத்தில்... ஆணும் ஆணும் இல்லை பெண்ணும் பெண்ணும் என்பதை எப்படி ஏற்கும்....ஆனால் இயற்கையில் எல்லாம் இயல்பே...சாதாரணமாக ஒரு ஆண் இன்னொரு ஆணையோ ஒரு பெண் இன்னுமொரு பெண்ணையோ ஈர்த்து விட முடியாது, எல்லாம் கடந்த ஒரு ஈர்ப்பு இருக்கவும் தான் அவ்வாறு அவர்கள் இருக்கிறார்கள்....எதையும் மதிப்பது அன்பு செலுத்துவது அடிப்படை பண்பு....இதில் உயர்வோ தாழ்வோ...வெறுப்போ ஏன் வரவேண்டும்....உங்களுக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி இருங்கள்...உண்மையாக மனப்பூர்வமாக ,அதில  மதிப்பிடலுக்கு இடமில்லை....

கட்டாயமாக ஒரு வாசக கூடம் , ( Libraury) இன்றே உங்கள் வீடுகளில் தொடங்கட்டும், படிப்பவர்களும் எழுதுப்பவர்களும் இந்த நாட்டில் தான் மிக கீழாக மதிக்கப் படுகிறார்கள்...அவன் பான்பராக் விற்று கோடி சம்பாதிக்கலாம் ஆனால் ஒரு புத்தகம் படிப்பவனோ எழுதுபவனோ அந்த மரியாதையை பெற்று விட முடியாது...எந்த சமூகம் புத்தகங்களை எழுத்தாளர்களை நல்ல எழுத்துக்களை ஆதரிக்கிறதோ அது உயர்வான சிந்திக்க தெரிந்த தவறி விழுந்தாலும் எழுந்து நடக்கும் சமூகமாகிறது....சிறிய புதகங்களுடன் ஆரம்பியுங்கள்...நம்முடைய, அடுத்தவரின் கலாச்சாரம் பண்பாடு வாழ்க்கை முறை மனித நேயம் எல்லாம் அறிந்து கொள்ளுங்கள்...விவாதியுங்கள்...எதுவும் உயர்வோ எதுவும் தாழ்வோ இல்லவே இல்லை...மனித நேயம் மட்டுமே மானுட அன்பு மட்டுமே உண்மை நிரந்தரம் எல்லாமும்....

மனதை திறந்தே வையுங்கள்...அன்புக்காக ஒரு குழந்தையாவது தத்து எடுப்பதை, மனப்பூர்வமாக்கி கொள்ளுங்கள்...சுயநலம்  வேண்டாம் தான் எனது என் குழந்தை என் குடும்பம் என் சொத்து .....மாட மாளிகையும் கூட கோபுரங்களும் அழிந்து மண்ணாய் போயின...எதுவும் நிரந்தரம் அல்ல...புவிதம் மீனாட்சி அம்மாளுக்கு 3 குழந்தைகள்...ஒருவர் மட்டுமே அவர் பெற்ற குழந்தை மற்ற இருவரையும் அவர் தத்து எடுத்துக்கொண்டார்..ஏதோ பேச்சு வரும்போது தது எடுத்த குழந்தை கேட்கிறது அம்மா நான் எங்கிருந்து வந்தேன் என்று அதற்கு அந்தம்மா நீங்கள் இருவரும் என் இதயத்திலிருந்து வந்தீர்கள் , அவள் என் வயிற்றில் இருந்து வந்தவள் என்று...ஏனோ அது கேட்டு அந்த ஆழ்ந்த அன்பு கேட்டு எனக்கு அழுகை வந்தது...ஆம் நண்பர்களே....ஒரு குழந்தையாவது இரண்டு குழந்தையாவது தத்து எடுங்கள்...அன்பை இதயத்தில் ஏந்துவோம்..

 இறந்து போகும் முன் வாழ்ந்து போவோம்.. அன்பைத்தூவி........ஸ்ரீ Prajna....

No comments:

Post a Comment