Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Sunday, January 28, 2018



வாழ்வின் மகத்துவமும் வேகாத சேமியாவும்😉-ஸ்ரீ Prajna..



ஒரு வாழ்வு எத்தகைய தன்மைக்குள் நம்மை அழைத்துச் செல்ல நாம் விரும்புகிறோம்....எல்லார் வாழ்வையும் நாம் வாழ்ந்துவிட முடியாது, நமக்கான வாழ்வை நாம் தான் வரைய  வேண்டும்...ஒரு ஓவியம் போல, அந்த ஓவியம் உயிரோட்டமானதாய் இருக்க வேண்டும், மனதுக்கு நிறைவாய் இருக்க வேண்டும், இந்த கேடுகெட்ட சமுகத்திற்காகவோ, பொருளாதாரத்திற்காகவோ,  பணத்தேவைகளுக்காக அன்றி மனம் விரும்படியான வாழ்வாய் அதை உணர்ந்து வாழவேண்டும்...

இங்கு கொடிகட்டிப் பறக்கும் சாதீய உணர்வும், மத உணர்வும் மனிதனின் வாழ்வின் துளி நன்மையும் ஏற்படுத்தப்போவதில்லை, அஃது ஒரு மாயக்கண்ணாடி, உணர்ந்தோர் நிறைவான வாழ்வு வாழ்கின்றார்....

 பழக்கத்தில் உள்ள வாழ்வுமுறைகலெல் லாம் புளித்த மாவைப்போல் இருக்கிறது, ஒரு கல்லறை வாழ்வை போதிக்கிறது, பொருளாதார தேவைகளுக்காக அடிமை வாழ்வை ஒரு கட்டதுக்குள் வாழ வைக்கிறது, இவர்கள் வாழ்வை நோக்கி அழைத்துச் செல்லவில்லை, மாறாக  முடிவை நோக்கியதே இவர்களின் பயணம், இவர்களில் யாருக்காவது அவர்களின் மரணமும் அடுத்த நிமிடமும் தெரியாது, ஆனால் 50 வருஷம் கழித்துத்துபெற LIC போடுவார்கள்...வாழும்போது வாழ்வதை விட்டு விட்டு..பாடுபட்டு சேர்க்கும் பணத்தை பள்ளிக்குக்கொண்டு சேர்கிறார்கள், அந்த குழந்தையின் நல்லதுக்கு என்று சொல்லி அதனிடம் இவர்களின் எதிர்பார்ப்பை வைத்து சிறு வயதிலேயே அவர்களை கடனாளியாக்குகிறார்கள்...

இந்த சமூகம் வரையறுத்துள்ள வாழ்க்கை முறை பழமையிலிருந்து வந்ததும் வகுத்ததும் அல்ல, இவர்களின் சுயநலத்துக்காகவும் வீண்பெருமைக்காகவும்    இவர்களால் உருவாக்கப்பட்டு அதையே அனைவரும் சுய சிந்தனை அன்றி மனப்பூர்வமாய் ஏற்று வாழ கட்டாயப்படுத்துகிறார்கள், பழமையில் ஆடியும் பென்ஸ் ம்  மனம் ஒப்பந்தத்தில் இல்லை, ஆதி குடி சிந்தனை யிலும் செயலிலும் நல் எண்ணத்தைக கொண்டிருந்தது,  நீ கல்வித்தந்தை உனக்கு ஒரு கல்வித்தாய் வேண்டும் என்று எந்த  தொழில் ஒப்பந்தமோ  போடப்படவேயில்லை....ஏன் ஒரு புத்தனைப்  போல மிகப்பெரிய சமுதாய மாற்றத்தை கொண்டு வர நல்ல மனிதர்கள் அதிகம் வரவில்லை,130 கோடியில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலர் வெகு சிலரே தன்னலமற்ற சேவையில் இருக்கின்றார்.... .அதுவும் இல்லாமல் போயிருந்தால் என்று இந்த பூமி பிளந்து உள்ளே போயிருக்கும்...எது இவர்களை ஒருசுயநல வட்டத்துக்குள் சிந்திக்க வைக்கிறது...

கருவாய் இருக்கும் நாம் இவுடழும் உருவும் பெறுகிறோம், இவுடல் பல மாற்றங்களை கடக்க நேரிடுகிறது, ஒரு மாதக் குழந்தையையும் மாதங்களைக் கடந்து வருடங்கள் ஆக ஆக  ஒவ்வொரு மாற்றங்களை நம் உடல் கடக்கிறது,... இறுதியில் வயோதிகமும் அடைகிறது இதை நாம் நினைவில் சிந்தனையில் கொள்கிறோமா, இல்லை நான் என்றுமே 16 வயதுடன் இளமை குன்றா அழகுடன் இருப்பேன் என்று நம்பிக்கை கொண்டுள்ளோமா?... இதே விஷயம் பணத்திற்கும் பொருந்தும்....

கஜுராஹோ வில் பேரழகு படைத்த சிற்பங்களாகட்டும் , ஓர்ச்சா வின் பன் அடுக்கு மாளிகையாகட்டும், ஜான்சியின் கோட்டைகளாகட்டும் எங்குமே கட்டச் சொன்னவனும் கட்டியவனும் யாருமே இல்லாமல் சித்திலங்கள் மட்டுமே காட்சிப்பொருளாக இருக்கிறது.....
இதற்குள்ளாகத்தான் நாம் பணப்போட்டிகளை சாதிப்போட்டிகளை உருவாக்கி சிக்கல்களை நடைமுறைகளாக்கி  கல்லறையைக் கட்டிக்கொண்டு வாழ முற்படுகிறோம்,...பரந்த சிந்தனை அற்ற குறுகிய தத்துவார்த்தங்களைக் கொண்ட வாழ்வை அவ்வாறே வருணிக்க இயலும்....

சுய சிந்தனை அற்ற கல்வி , சுய சிந்தனை அற்ற வளர்ப்பு , சுய சிந்தனை அற்ற வாழ்க்கை முறை மொத்தத்தில் ஒரு ஆட்டுமந்தை கூட்டத்தில் நாமும் ஒருவராய் இருக்கும் வரை உங்களுக்கு நிமிரா மு்துகுடன் கூன் வந்து செத்துப்போவதைப்பற்றிய சுய சிந்தனை இல்லையென்றால் அது சாலச்சிறந்தது, எல்லாவற்றிக்கும் ஆன அட்டவணை தயாராக உள்ளது, உண்ண உடுக்க படுக்க எல்லாவற்றிர்க்கும்....
சுயசிந்தனை இல்லாமல் செத்துப்போவதற்கும்.....

----ஸ்ரீ Prajna

No comments:

Post a Comment