Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Friday, May 29, 2015

மணாலி..சில நாட்கள் (பனிமலையில் ஒரு பயணம்)

” மீட்டெடுக்க முடியா பொழுதுகளின்
இரவுகள் நரகமானவை..அர்த்த ராத்திரி
 விழிப்புகளில் அலைகழிக்கப்படும் மனது
 பறவையின் உதிர்ந்த இறகுபோல..


சும்மா வெறுமனே வானம் பாக்கிறது, அதுவும் night timeரொம்ப அமைதியா இருக்கும் போது,stars எதுவும் காணல இன்னைக்கு, நேத்து நெறையா இருந்துச்சு.. ஒரு துளி மேல விழுந்ததும் , மழை வரப்போகு துன்னு கீழே வந்திட்டேன்,,ஆமா கொஞ்ச நேரத்திலே கொட்ட ஆரம்பிச்சுது...ஒரே ரிதத்தோட...

ஜன்னல தெறந்துவைக்க சில்லுனு காத்து, நானிருக்கேங்கிற மாதிரி,, எதுத்தால இருந்த மாதுளையும், கொய்யாவையும் தாண்டி எங்கயோ  போக ஆராம்பிச்சிது மனசு..இந்த கணத்தில நிக்கிறது இல்லேனா அந்தந்த கணத்தில விட்டுற்றதுங்கிறது, நல்லாயிருக்கும்...






பார்வை போயி மணாலில நின்னிச்சு,, பனிபடர்ந்த அந்த ஹிமாலயத்த சுத்த ஆரம்பிச்சது.. அங்கே போனப்போ  அப்பதான் பிறந்த மாதிரி இருந்துச்சு வெள்ளையா வெள்ளிய வார்த்த மாதிரி எவ்ளோ நேரமோ பார்த்திட்டே இருக்கலாம்..ஊரயே  அரவணைக்கிற மாதிரி சுத்திலும் இருக்கும், ஹிமாலயம்..கரு கரு பாறைகளை மொத்தமா மறச்சிடும்  பனி.. அந்த பனிசூழ்ந்த மலை வானத்த தொட்டிட்ருக்கும்..அந்த பனிலே இருந்து  கெளம்பி வர்ற மெல்லிசான ஈரமான காத்து எப்பவும் கூடவே சுத்திட்டு இருக்கும்..அந்த ஈரம் மனச நிறைச்சிருந்துச்சு...எப்பவும்...

Tent ல தங்கினது அதான் life ல யே மொததடவ..சின்ன அழகான கூடாரம், night time -3 degree போயிடும், அர்த்த ராத்திரிலே வெளிலே வந்து சுத்திலும் இருக்கிற பனிபோர்த்திய பாறைகளுக்கு மத்திலே நின்னு  stars பாக்கிறதுக்கு இணையா இந்த உலகித்திலே என்னால எதயுமே சொல்ல முடியலே..no words can justify that feel .. அந்த நிமிஷ சாவுகூட ஒரு வரம்தான்..வார்த்தைகளுக்குள்ள கொண்டுவரமுடியாத அந்த நொடிகள, அந்த இரவுகள கடந்து போக மறந்து போக இந்தப்பிறவிலே முடியவே முடியாது...




பி(B)யாஸ்.. சில இடங்கள்ல ஆக்ரோஷமா ஓட்ற அந்த ஆறு , ஒரு மலைப்பாம்பு போல சில இடங்கள்ல இதமா அமைதியா போகுது.. எங்கே எங்கே மணாலியை சுத்தினாலும் பியாஸ்,எல்லா தெருவின் ஒரமாவும்,  பாலங்களுக்கு கீழேயும்  ஒடிட்டிருக்கும், அதோட கரைல எங்கே போயிம் நின்னுக்கலாம் ..தெறிச்சு ஓட்ற சத்தத்துக்கு முன்னால மனசு சத்தமே போடமுடியாது.. அது தானே வேணும்... 













Hidimba devi temple, மனு temple , வஷிஷ்ட் temple எல்லாமே ஒரு எளிமையான அழகோட இருந்திச்சு..அந்த கோவில்களிலெல்லாமெ ஒரு தெய்வீகத்த உணர முடிஞ்சிது.. போலியா இல்லாம, அந்த வழிபாடுக கூட ஆத்மார்த்தமா இருந்துச்சு...

நினைவுகளோடயே பயணிக்க முடியறதில்லே, நெஜம் வேறமாதிரி .. மறுபடியும் இங்கே இழுத்திட்டு வந்திச்சு, மனசு ஒரு வெறுமைய சூழ்ந்துகிச்சு,  படுத்து ஜன்னல் வழி வானம் பாக்க , மழைச் சாரல் முகத்தில அடிச்சது..   கண்ண இறுக்க மூட,பனி மலையும் , பியாஸ் நதியும் எங்கேயோ இழுத்திட்டு போகுது..  

5 comments:

  1. அடடே இன்னும் வெளிய வரல போல? இருக்கட்டும் எங்கே போனாலும் அதை கொஞ்சமாய் சேமித்து வைத்துக்கொண்டு நினைக்கும் போதெல்லாம் அதை உணரச்செய்கிற மனமும் ஒரு வரம்தான். ப்யாஸ்

    ReplyDelete
  2. Beautifully written… write more… niraya...

    ReplyDelete
  3. Yethayum Kadanthu Pogalaam..Maranthu Poga Mudiyaathu..

    ReplyDelete