Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Tuesday, December 20, 2011

சின்ன சின்னதாய்.. சுவாரஸ்யமாய்..

”எனக்கு பிரயாணிக்க ரொம்ப பிடிக்கும்..பறவைபோல் இறகு இல்லையேன்னு அடிக்கடி தோன்றும்,  அடிக்கடி தொலைந்து போவது நடந்து கொண்டுதானிருக்கிறது, சின்ன சின்னதாய் சுவாரஸ்யமாய்”

தீடீர்னு சுகி கிட்ட இருந்து கால் “யேய் sat-day  bangalore வர்றியா” அப்படின்னு அப்போதான் அவங்க முரளி marriage க்கு வந்துட்டு போயிருந்தாங்க.ஒரு நாள் தான் ஆகியிருந்தது. film festival நடக்குது “வா பார்ப்போமின்னு” சொன்னதால உடனே ticket try பண்ண friday 8 o'clock க்கு கிடைச்சது. train ல கூட இவ்ளோ short period ல கிடைக்குதே பரவாயில்லையேன்னு சந்தோசப்பட்டு , பயங்கற planning போட்டு வச்சிருந்தோம்.மொத நாள் night train miss பண்ணிய மாதிரி வந்த கனவை பகிர்ந்துட்டு. அடுத்த நாள் அரக்க பரக்க station போனேன் 7.45 உள்ளே enter ஆகும் போது platform போய் ticket காண்பிச்சு எப்போ வரும் இந்த platform தானே சீக்கிரம் சொல்லுங்கன்னு urgent பண்ண காலையிலேயே போயிடுச்சேன்னு சொல்ல ticket வாங்கி பார்த்தப்போதான் என் mistake தெரிஞ்சது 8.00 ன்னு time போட்டிருந்ததை சரியாக புரிந்துகொள்ளாத முட்டாள் தனத்தை நொந்துகொண்டு எப்பவும் போகும் “kings travels" தொடர்பு கொள்ள request செய்ய sleeper கிடைத்தது.(என் கனவை என்ன சொல்ல)


சுகி correcta கொஞ்சமே கொஞ்சம் late ஆக pickup செய்ய வீட்டுக்குப்போய் சீக்கிரமாக எங்களை தயார்படுத்திக்கொண்டு கிளம்பினோம் புதிதாய் வாங்கியிருந்த “activa" வில் ஆரம்பித்தது அந்த இனிமையான பயணம்.mood மாறியதில் film festivalai cancel செய்துட்டு வழக்கம் போல ஊர் சுற்றவே கிளம்பினோம்.பெரிசா planing செய்வதில்லை.இடங்களும் அதிகம் famous ஆகா இடங்களாய் தேர்ந்து முதலில் நாங்க போனது “Big Banyan Tree" மைசூர் ரோடில் பிராயானித்து, ராஜராஜேஷ்வரி college ஒட்டிய ரைட்டில் திரும்ப அந்த ரோட்டையே பிடித்து travel செய்ய சிறிது தூரத்தில் ஒரு அழகான தாமரை தடாகம் முழுதும் அழகழகான தாமரை பூக்கள் சிறிது நேரம் நின்று ரசித்துவிட்டு மறுபடியும் தொடர்ந்த travel செய்ய “Big Banyan Tree" யை அடைந்தோம்.குரங்குகள் பயமே இல்லாமல் வம்பு பண்ணியதில் நாங்க அலறிஅடிச்சிட்டு ஒடினோம். (உள் நுழையும் போது நான் சொன்னேன் நம்ம கிட்ட தான் helmet இருக்கே ஓங்கினாலே பயப்படும்னு ம்ஹும் அசையவே இல்லையே) 




               ”அக்கா எங்கயிருந்து வர்றீங்கன்னு” கன்னடாலயே கேட்டு friends ஆனாங்க இந்த school பசங்க..


அடுத்து மஞ்சனபேலே reservoir அங்கும் ஆளரவம் அவ்வளவு இல்லை.உட் செல்லும் ஒரு ஒத்தயடி பாதையில் சற்று தொலைவு வந்தால் ஒரு resort இருந்தது. அதில் ஏதோ IT Company ஆட்கள் அவங்க holiday enjoy பண்ணிட்டு இருந்தாங்க.அங்கு மிக சிலவே வீடுகள் இருந்தது.சாப்பிடலாம் ஏதாவது மரத்தினடியில் அமர்ந்து என்று என்னும் போது triples வந்த ரெண்டு கால் குரங்குகளை பார்த்ததும் உடனே வண்டியை கிளப்பினோம்


சென்றோம் சென்றோம் கிட்டத்தட்ட 2 மணி நேர பிரயாணம் வழியெங்கும் ஒரெ ஒற்றையடிப்பாதை ஒரு பக்கம் மலையும் ஒரு பக்கம் காடு மாதிரியான நிலப்பரப்பும் திகிலூட்டுவதாக இருந்தது.சுகி கிட்ட இருந்து சத்தமே இல்லை கொஞ்ச நேரத்துக்கு மாறிமாறி தைரியம் வரவச்சிகிட்டு “சாவன் துர்கா” அப்படின்கிற காட்டு வன துர்க்கை கோவிலுக்கு போனோம் அக்கோவில் இருக்கும் மலையில் நிறைய பேர் trekking போறாங்க.போனதும் சாமி கும்பிட்டவுடன் “ஊட்டா மாடிபிட்டு ஓகுறி” அப்படின்னு அழகான கன்னடால சொல்லவும் அருமையான சூடான சாப்பாடு சாப்பிட்டோம். நானும் பார்த்துட்டேன் கர்னாடகாவிலே எந்த கோவில் போனாலும் எவ்வளவு பேர் போனாலும் சாப்பாடு போடுவாங்க..
                                                       on the way to savan durga..


இந்த மலை யானையின் பின்புறம் மாதிரியே இருக்கிறது, நன்றாய் பழக்கமானவர்களுக்கே 3.00 டொ 3.30 hours ஆகுமாம் ஏறுவதற்கு..அடுத்தமுறை கண்டிப்பாய் முயற்சிக்கனும்..

”ஆட்டை நாங்க ஆட்டைய போட்றதுக்கு முந்தி வாங்கிட்டாங்க”


திரும்பி நுழைவாயிலை அடையும் போது ஒரு சிறு குளம் கண்ணுக்குப்பட்டது அங்கு அமர்ந்து அந்த மலையை ரசிக்க மனசே இல்லாமல் கிளம்பி வழி சுத்தமாய் மாறிப்போய் வீட்டுக்கு போகமுடியுமாங்கிறகேள்வி வந்தது ஒருவழியாய் கேட்டு கேட்டு வ்ந்து சேர்ந்தபோது இரவு மணி ஒன்பது. ஒவ்வொரு part ம் தனித்தனியே வலித்தது நல்ல tired ஆக இருந்தது. 
நாளைக்குரெஸ்ட் தான் எங்கயும் போறதில்லைனு சொல்லிகிட்டே தூங்கிட்டோம்


காலையில் எழும் போது மணி 6.30 மடமடன்னு கிளம்பி மறுபடியும் ஒரு புதிய பாதையில பயணிக்க ஆரம்பிச்சோம்..உலகம் ரொம்ப அழகா இருந்தது....ஆனந்தமாகவும்..

2 comments:

  1. நல்லா சுத்துங்க, வாழ்த்துக்கள். ஆனா ஏன் ஃப்லிம்ஃபெஸ்டிவல் போகலை. அருமையான நிறைய ப்டங்கள் இருக்கிறது இந்த வருட பெங்களூரு திரைப்பட விழாவில்....

    யுவன் சந்திரசேகரின் பாதிப்பு தெரியுதே, சரியா....?

    அப்புறம் முக்கியமான ஒண்ணு, எனக்கு பிரியாணி ரொம்ப ப்டிக்கும்ன்னுதான் படிச்சேன். ஹிஹிஹி...

    ReplyDelete
  2. Thanks pa..போயிருக்கனும் போகலை ஊர் சுற்றும் mood னா அதுல தான் mind போகும். யுவனை இனிமேல் தான் படிக்கனும் அன்னிக்கு விஷ்ணுபுரம் function la தான் பார்த்தேன். அவரோட books refer பண்ணுங்க..

    எப்போ பார்த்தாலும் “biriyani" நியாபகமா? ஆனாலும் அநியாயமா இல்லை வார வாரம் விருந்து சாப்பிட்டுமா? (உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்றேன் நானும் அப்படித்தான் படிச்சேன்..hi hi)

    ReplyDelete