நாலு நாள் ஊர் சுற்றிய போது ஏற்படாத அலுப்பு இப்போ ஒரு நாள் காய்ச்சலில் அயரவைத்தது..வந்த அடுத்த நாள் ரெஸ்ட் எடுத்திருக்கணும்.சைட் ல போய் கான்கிரீட்னு நின்னது பிழை..அதுவும் மழையில் நின்னது அதைவிட...ஆனாலும் வாங்கிற காசுக்கு ஒழுங்கா வேலை செய்தாதானே மனசுக்கு நிம்மதி...அதுவும் footing கான்கிரீட் இரண்டு அடி கொடுத்தா ஒன்னரை அடி போட்டு மீதி தண்ணீதான் நிக்கும்...அதுனால தான் கூடவே நிக்கிறது...அடுத்த நாள் கொதிக்க ஆரம்பிச்சது உடம்பு..
உடம்பு முழுதும் ஒரு வலி இருந்தது..குளிர் தாங்கவே முடியவில்லை.அன்று சாப்பிட்டது இரண்டே பிஸ்கட்டுகள்..
இப்படி எதாவது வரும்போதுதான் எல்லா இழப்புகளும் நியாபகத்துக்கு வந்து தொலைக்கும்..கண்ணீர் வேறு..தானே பார்துக்கனும் விரும்பி ஏத்துகிட்ட தனிமை கூட படுத்துது..இல்லேனாலும் யார் தான் கூட வரமுடியும்..யாருமே வேண்டாம்னும் யாராவது வேணும்னும் ஏன் தோனுது...
எதயாவது எடுத்துக்கலானா எடுத்துகிட்டவங்க முள்ளு தச்ச செருப்ப போட்டு அலையற மாதிரி பட்ற அவஸ்தய பாக்கிறப்போ வேண்டாம்னு தான் தோன்றது..ஏதேதோ யோசித்ததில் தலை வலிக்க ஆரம்பித்தது.என் அம்மாவை கூப்பிட ஆரம்பித்தேன்...அம்மா....
சற்று நேரத்தில் ஒரு பெரிய உருவம் தனிமைக்கும் துணைக்குமென வந்தது..படுக்கயில் அமர்ந்து என் தலையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டது..கை கால் களை நீவிக்கொடுத்தது..தட்டிக்கொடுத்ததில்...கண்ணீர் வழிய ஆழ்ந்து உறங்கிப்போனேன்..
Oh, my dear friend... I am there for you...
ReplyDeleteகொஞ்சம் மெனக்கெட்டிருந்தா அனுபவம் அழகான சிறுகதையாக உருவெடுத்திருக்கும். போகட்டும்.
ReplyDeleteநண்பர்கள் இருக்கும்பொழுது இப்படியெல்லாம் பீல் பண்றதே தப்பு, புரியுதா? :-)
@Sugi and Murli
ReplyDeleteOh my dears en இப்பொழுதின் சந்தோசமெல்லாம் என் நண்பர்களாகிய நீங்கள் என்று சொன்னால் அது மிகையில்லை...