நீ உடுத்தும் உடுப்பல்ல நான்
உன் உடம்புத்தோல்
மாற்ற நினைத்தால் மறைந்து போவாய்
புல்வெளியின் நீர்துளியல்ல நான்
வான் வெளியின் மழைத்துளி
கண்டதை தின்று எச்சமிடும் காக்கையல்ல நான்
பாலை மட்டுமே பருகும் அன்னமே நான்
உன் தூன்டிலின் புழுக்கள் மீன்களை
உணவாக்கவேயன்றி மீன்களுக்கு
உணவளிக்கவல்லவே
நெருப்பல்ல நீ அணைபதற்கு நீரல்ல
நீரல்ல நீ அணையிடுவதற்கு
பரந்து கிடக்கும் ஆகாயமும்
விரிந்து கிடக்கும் வானமுமே
நான்
மாற்றங்களை நான் உருவாக்குவேன்
எனக்குள் என்றும் மாற்றமில்லை
No comments:
Post a Comment