Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Wednesday, January 28, 2026

IVYSAG - Travel

 Day -1

பொதுவாகவே தனியாக பயணம் செய்வது பிடித்ததே இல்லை, யாராவது ஒருவரை இந்த மானம் கெட்ட  மனது எதிர்பார்த்துக் கொண்டே  இருக்கும், அதை  உடைக்கவும் விரும்பினேன்.. காலத்தின்  சூழலில் சென்னையில்  வசிப்பதால் , கிடைத்த 5 நாள் விடுப்பில் ஜெய்பூர், அகமதாபாத், மும்பை மூன்றுக்கும் flight check செய்ததில் , வாய்பில்லை, ராசா என்று தோன்றியது.. மண்டை குடைந்ததில் , தமிழ் ன்னு  ஒரு Friend, ஏன்  நீங்க vysag போகலாமென்னு கேட்க, bus ticket reasonable ஆக இருந்தது, yes என்று book செய்து கிளம்பி விட்டேன் , ஒரு சில இடங்கள் தனிமையில் சென்று இருந்தாலும் நீண்ட வருடங்களாக அவ்வாறு சென்றதில்லை...








Treebo imperia hotel ல  room book, பண்ணியிருந்தேன் ... 7 .30 க்கு reach பண்ணவேண்டிய bus yes 8.00 கெல்லாம் spot  ல இறக்கி விட, auto பிடித்து போகனும்  போல என்று auto விசாரிக்க அந்த தம்புடு , அக்கடா  சூடண்டி  என்று காண்பிக்க , பிடனியில் இருந்தது hotel..

12.00க்கு check in, room free இருந்தால் கொடுக்கிறோம் என்றார்கள் 9.00க்கு கொடுத்துவிட்டார்கள்.. ஹை ஜாலி..

போய் பார்த்தால் அப்படி ஒரு luxury room, வெளிய போகவே மனசுவரலெ, bed, room toilet  எல்லாம் செம்ம neat.. நல்லா குளிச்சு நிதானமா ready ஆகி, கொஞ்சம் rest எடுத்து மதியத்திற்கு மேல் , வெளிய வந்து ஆந்திர meals கிடைக்கல , moodles வாங்கி , முழுங்கி விட்டு, uber la Taxi போட்டு, Thotla konda, buddhist monestry போனேன்.. அந்த taxi driver, hindhi ல அங்க எதுக்கு போறீங்க, அங்க ஒன்னுமே இல்ல, வெறும் lovers வந்து போவாங்க பார்க்க ஒன்னுமே இல்ல, என்று சொன்னதை தாண்டி, சென்றேன்,..

ரொம்ப அழகான சிறிய மலை குன்று, அந்த period la அவ்ளோ planning ஓட அமைந்திருந்த ,  அனைத்து கட்டிட அமைப்பும் வியக்க வைத்தது, planning designing material used and the methodology, Woww.. என்று வியந்து வியந்து பார்த்துவிட்டு , கீழ் வந்தால் வங்காள விரிகுடாவை மலை மேலிருந்து பார்க்கும் view அதி அற்புதம், cab return க்கு போட்டால்  கிடைக்கவில்லை, ..

4பேர் மூன்று bike ல  வந்திருந்தார்கள், lift கேட்டு  கீழே வந்தேன் அதில் ஒருவர் Ruchi konda beach வழி போறேன், drop பண்றேன் என்றார் , yes சொல்லி  அங்கே இறங்கி கொண்டேன், நான் இப்போ சென்னை வாசியாகி விட்டதால், அவர் raajasthan ஜெய்பூர் என்றார்..

Bye, பையா .. Thank you சொல்லிவிட்டு வெறும் 10 rs க்கு இஞ்சி tea குடித்து விட்டு, beach ல்  அமர்ந்து வேடிக்கை பார்த்து, திரும்பி வரும் வழியில், நிறைய கம்மல் வாங்கினேன்.. செம்ம cheap..

6 மணிக்கு அங்கிருந்து, கைலாசகிரி சென்று ரசித்து விட்டு, சில குட்டி பொண்ணுங்க solo travelers ஆ என்று கேட்டதற்கு பெருமையாக ஆமாம் சொன்னேன், திரும்ப Uber book செய்து காத்திருந்த நேரத்தில் ஒரு தம்புடு , நான் safe ஆக சென்று விடுவேனா என்று check செய்து கொண்டார்..

Road neat ஆக இருந்தது, பெரும்பாலும் குப்பை கண்ணில் படவே இல்லை, நல்ல reasonable ரேட்டுக்கு  stay.. good.. இரவு தங்கி இருந்த இடத்திற்கு அருகில் restaurant, treebo வினுடையது , சென்று சாப்பிடேன்... அந்த இசை சூழல் என் தனிமை எல்லாமே விரும்பி அனுபவித்தேன்..

முதல் நாள் இனிதே சென்றது 

No comments:

Post a Comment