Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Saturday, September 1, 2018

வாசித்தல் எனும் வரம்🍁🍃🍁                  புத்தகம் வாசித்தல் பற்றி நிறைய பேர் பேசி எழுதி இருக்கிறார்கள்...பாரதி க்ரிஷ்ணகுமாரின் பேச்சில் அவர் அவ்வளவு சிலாகித்து சொல்லுவார் , அந்த உணர்வோடு ஒன்றிய நாம் நம்மோடிருக்கும்  உணரும் தருணங்களை புத்தகங்கள் தருகின்றன, இப்போ க. நா. சு வின் "அசுர கணத்தில்""  ஒரு சில வரிகள் வரும் இப்படி, சராசரி மனிதனாக இருந்துவிட முடியுமானால் அதுதான் நல்லது..அதுதான் சுலபமானது... அதுதான் சௌகரியமானது என்று எனக்கு நிச்சையாமாகிவிட்டது... அப்படி இருக்கவே நானும் ஆசைப்படுகிறேன்....முடியவில்லை """" என்று ஆமாம் அது உண்மை வார்த்தைகள்....  ஏன் படிக்கணும் ஏன் ஊர் சுற்றனும் ஏன் கலைகள் ரசிக்கனும்...மூன்று வேளை தின்று ஒரு நாள் மூச்சடைத்து செத்து போய் விடுவோமில்லையா அதற்குள் உயிர்ப்புடன் வாழத்தான்... ஆமாம்...ஒரு நண்பரை தெரிந்தவரை நானும் prem மும் ஒரு Exzibition (ஆர்ட் nd book ) ல பார்த்தோம்...என்னங்க தாடியெல்லாம் விட்டுட்டு book எல்லாம் படிக்கிறீங்க ன்னு பதறு கிறார்... இதில் என்ன இருக்கு...புத்தகம் படித்தல் ஒரு கலை ஒரு நல்ல சிந்தனையை தூண்டும் ...சிந்திப்பது என்றால் கிலோ என்ன விலை என்று கேள்வி வரும் ,,,இங்கு தான் இந்த அரும் பெரும் நாட்டில் தான் இவ்வாறு எல்லாம் கேட்பார்கள்...கேரளாவில் இல்லை கர்நாடகாவில் பெங்காலில் அவ்வாறு கேட்பதில்லை...புத்தகம் படிக்கவில்லை என்றால் தான்  கேட்பார்கள்...நான் என் மர மண்டையை open செய்யவே விரும்பவில்லை என்றால் நல்லது அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்...ஆனால் படிப்பவர்களை ..தாடி வைத்து இருப்பவர்களை.... முடி cut பண்ணியிருந்தால் அதையெல்லாம் கேள்வியாக கேட்காதீர்கள்.... அதற்கு ஒரு சோக காரணம் வேறு கொடுப்பது அச்சோ அவன் book எல்லாம் படிக்கிறான்ப்பா...அவன் தாடி விட்டுருக்கான்பா என்று...முடிந்தால் நீங்களும் தாடி வளர்த்துங்கள்....முடிந்தால் நீங்களும் புத்தகம் படியுங்கள் இல்லைனா சும்மாவேணும் தொன தொனக்காமல் TV பாருங்கள்...மண்டைக்கு மேல் கொண்டை வளர chance இருக்கு.....ஸ்ரீ Prajna

No comments:

Post a Comment