Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Wednesday, July 18, 2018

காயத்ரி Gomez....உயிர் பெறும் ஓவியம்

காயத்ரி Gomez ன் வீட்டை மரங்கள் சூழ்ந்த சோலையினுள் கண்டடைந்தோம், சற்றே தள்ளி பெரிய ஏரி இருந்தது, அழகான மூங்கில் குடில், கேரள ஆனந்தாவும் , ஸ்பெயின் காயத்ரி Gomez ம் , கோகர்ணாவில் சந்தித்து அவர்களின் வாழ்வை துவங்கியுள்ளனர்... மிகச்சிறந்த ஓவிய படைப்பாளி ஆன காயத்ரி Gomezம்....நல்ல கவிஞருமான ஆனந்தாவும் இந்தியா முழுதும் சுற்றி வந்து இப்போ திருவண்ணாமலையில் ராமணாஸ்ரமத்தில் இருந்து சற்றே தொலைவில் வசித்து வருகின்றனர், இவர்களின் இருப்பிடத்தை நெல் வயல்கள் சூழ்ந்து கிடக்கிறது, மலையின் அற்புத தரிசனத்தை இவர்கள் இருப்பிடத்திலிருந்து காணலாம்....நானும் Prem மும் அரைமணிக்குள் வந்து விடுவோம் என்று சொல்லிச் சென்றோம்...ஒரு மூன்று மணி நேரம் ஓவியம் கவிதை அவர்கள் வாழ்வை கொண்டாடும் ( வாழும்) முறை என்று எங்கள் உரையாடல் நீண்டுகொண்டே இருந்தது, ஆனந்தா சொன்னார் நாம் எப்போதிலிருந்தோ தொடர்பில் உள்ளவர்கள், சேர்ந்து நல்ல விஷயங்கள் செய்வோம் வாங்க அடிக்கடி திருவண்ணாமலைக்கு என்று, கூடிய விரைவில் ஒரு Painting work  shop நடத்த இருப்பதாக காயத்திரி கூறினார், கட்டாயம் செல்லவேண்டும், Gayathri யின் studio விற்காக Mishkin 10 Lakh Donate செய்துள்ளார், ஒரு அழகான கலை கூடம் உருவாகிக் கொண்டிருந்தது....ஒரு booklet யை  Prem கிட்டே காயத்ரி கொடுத்தாங்க, 2 மகன்களில் மூத்தவர் JNU வில் படித்துவிட்டு விடுமுறைக்காக அவருடைய Girl friend உடன் வருவதாகவும் அதற்கு ஒரு குடிலை தயார் படுத்தி இருப்பதாகவும் கூறி அதை காண்பித்தார்கள், எல்லாமே சாணம் போட்டு மெழுக்கப் பட்டிருந்தது, அவ்வளவு கொதிக்கும் வெயில் வெளியில் இருக்க அவர்களின் வசிப்பிடம் மரங்கள் சூழ்ந்து இயற்கை பொருட்களின் கட்டுமானமாதலால் குழுமையாய் இருந்தது,,.. சிறிய அழகான குளிக்கும் குளம் ( Bath tub) ...dry toilets, அங்கு அமைக்கப்பட்டிருந்ததெல்லாமே இயற்கையுடன் இயைந்த பொருட்களால் ஆனது... மூன்று கவிதைகளை வாசித்துக்காட்டினார் ஆனந்தா, அவர்கள் இயற்கை சார்ந்த வாழ்வை முன்னெடுத்துச் செல்கின்றனர்....கோரமான நகரத்து பின்னணியில் எதற்காகவோ வாழ்வை தொலைத்து ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு அவர்களிடம் கற்றுக்கொள்ள இயக்கையை அவர்கள் நேசிக்கும் விதத்தை காண என்று எவ்வளவோ இருக்கிறது, வாழ்வை அர்த்தமுடன் ஆராதிக்கும் அசல் மனிதர்களை சந்தித்த ஆத்ம திருப்தியுடன்....மீண்டும் வருகிறோம் என்று சொல்லி வந்தோம்....

No comments:

Post a Comment