Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Sunday, July 1, 2018

வெளிச்சம் --- 2 வாசித்தல்

🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃

வாசித்தல் என்பது ஒரு உணர்தலுக்கானதாய் இருக்கவேண்டும்..அவ்வாறே நான் வாசித்தலைப் பார்க்கிறேன்................வாசித்தல் நமக்குள் நாமே சிந்திக்கவும் நம் மனதுடன் பேசிக்கொள்ளவுமான கருவி, எதை வாசிக்கிறோம் என்பதில் மட்டுமான தெளிவு மிகவும் முக்கியம், இதில் பொதுமை கிடையாது, அவரவர் விருப்பம் தான், அதில் கவனம் தேவை ஏனெனில் வாசித்தல் மனதுடனான உரையாடலை நிகழ்த்துகிறது...அதன் வழி நடக்க முயல்வோம்,,ஆதலால் ......

🍃🍃🍃🍃🍃🍃நான் தத்துவார்த்த புத்தகங்களை தவிர்த்து வந்திருக்கிறேன் , ரொம்ப எந்த இசம் சார்ந்த புத்தகங்களும் வாசித்ததில்லை, அதேபோல் 30 நாளைக்குள் 300 கோடி போன்ற புத்தகங்களுக்குள் போனதே இல்லை....முன்னேற்ற தன்னம்பிக்கை லொட்டு லொசுக்கு புத்தகங்களும் படித்ததில்லை...🍃

  பின் என்ன தான் வாசிக்கிறேன்.. அறிவுக்களஞ்சியத்தையோ தகவல் களஞ்சியத்தையோ வாசித்துவிட்டு ஆஹா என்று திருவள்ளுவர்  எழுதி இருக்க முடியாது, 1330 குறள் நாமறிந்த வகையில் என்றாலும் அவரின் வாழ்வின் இயற்கையின,் மனதின்  யாவற்றின் மீதான நுண்ணுணர்தலே காரணம் யாவற்றையும் பகுத்தறிந்து பயன் இல்லை,நுண் உணர்ந்து  கொள்ளுதல் வாழ்வில் ஒரு புரிதலை சரியான பாதையை வகுத்துக் கொடுக்கும்...

🍃🍃🍃🍃🍃🍃🍃🍃பிறப்பு திணித்து விடும் அத்துணை சடங்கு சம்பிரதாயங்களையும் விட்டு விலகி ஒரு இன்பமான வாழ்வை கொண்டாடிய மனிதன் பற்றிய ஒரு சமூக கட்டமைப்பை மனித மனது பணத்துக்கு போடும் ஆட்டத்தை வெளிப்படுத்திய புத்தகம் "சம்ஸ்காரா"  U. R. Ananda moorthy எழுதியது... பவா வின்  நிலம்....     ஜெயமோகனின் ""அறம்"....Sihahapudin Poithum Kadavu ,...வின் யாருக்கும் வேண்டாத கண் , இப்போ போகனின் கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் ,இராஜேந்திர சோழனின் 8 கதைகள், லாசாரா வின் புத்ர,,, முன்னமே படித்த ஜெயகாந்தன், ஜானகிராமன்,  எல்லாமே அசல் மனிதர்களை அவர்களின் மன தரிசனத்தை, மனதில் நிறுத்தியவை, கலீலின் கவிதைகள், ராமணரின்,  செந்தமிழனின் , மற்றும் தாவோ வின் ஜென் புத்தகங்கள் வேறு பரிமாணங்களை உணர்தல்களை தருகின்றன,...எந்த நோக்கமுமில்லா பயணமே வாழ்வு , இங்கு பூமியை சுற்றிப்பார்க்க வந்துள்ளேன்...அதில் நான் தேர்ந்து படிக்கும் புத்தகங்கள் என்னை வழிநடத்துகிறது...நல்ல புத்தகங்கள்  ஒரு ஆத்ம துணை...

No comments:

Post a Comment