Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Monday, March 19, 2012

சில்வண்டு..



தெருவோரம் நடக்க
என்றோ அத்தெருவில் இருந்த என்
பள்ளி காவல் நிலையமாயும்
பத்து பைசாவிற்கு தேன்மிட்டாயும்,
கம்பர்கட்டும், கிழங்கும் தந்த
பாட்டி கடை ,எவ்வளவு கொண்டு
நுழைந்தாலும் பத்தாதோவென
பதறவைக்கும், பல்பொருள் அங்காடியாக
உள்விளையாட்டு ஆடும் சிறுவர்கள்
போலியாய் திரையை
துரத்திக்கொண்டிருக்க..
பட்டமும்,கோலிக்குண்டும்,பம்பரமும்
நொண்டியும்,மேடு பள்ளமும் உப்புக்கரமும்
கொலகொலயா முந்திரிக்காயும்
ஒளிஞ்சு ஆடும் ஆட்டமும்
ஒரு கொடம் தண்ணியூத்தி ஒரு பூ பூத்ததும்
கனவின் பிம்பங்களாக

பண்டம் பாத்திரம் நிலம் நீச்சி
கலாச்சாரம் கற்பு இத்தியாதிகளும்
வந்தெனையடைய
தொலைத்ததெல்லாம்தேடி
தொலைந்து போகும்
மனம்...






7 comments:

  1. nice..sri..even when i was going to school..we playing by plucking some beautiful flowers in the trees near a pond...now there is no pond and trees...i miss those days..

    ReplyDelete
  2. THANK U NANDHU, இப்ப இருக்கிற குழந்தைகளை பார்க்கப் பாவமாத்தான் இருக்கு..அவங்களுக்கு எப்பவும் போட்டிக்கு தயாராவதிலேயே போயிடுது. நம்மளாவது நிறைய விளையாடிருக்கோம் இல்லையா??

    ReplyDelete
  3. அழகு.... நல்லா இருக்கு நிறைய ட்ரை பண்ணுங்க ஸ்ரீ

    ReplyDelete
  4. Thank U boss..இப்பிடி பெரியவாளெள்லாம் வந்து சொல்றச்ச மனசுக்கு சந்தோசமா இருக்கு...

    ReplyDelete
  5. Thank u shahi..How are U? i thought of writing to you..i told to Sugirtha also..

    ReplyDelete