Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Thursday, November 17, 2011

இரண்டாம் ஜாமங்களின் கதை..(நெடும் பயணம்)


” சல்மா” வின் எழுத்தக்களை முதலில் அறிமுகம் செய்தவர் என் நெருங்கிய தோழி பாவை அவங்கதான்.சல்மாவோட கவிதைகளைப் படித்தேன் ரொம்ப  இயல்பா மனதின் பக்கங்களை பிரதி எடுத்த மாதிரியான எழுத்து அப்பதான் “இரண்டாம் ஜாமங்களின் கதை” பற்றியும் சொன்னாங்க அதை படிக்க ஆரம்பிச்சேன். முடிக்கிறப்போ தோனிச்சு ஒரு விஷயம் கூட கூட்டவோ குறைக்கவோ இல்லாமல் வாழ்வியலை குறிப்பா பெண்களின் மனதை பேசிருக்காங்கன்னு. பெண்கள் அப்படின்னும் போது எந்த சமுகமானாலும் அவங்க நிலையில பெரிய வேறுபாடு காணமுடியாது ஆனாலும்  சல்மாவின் சமூகத்திலிருந்து இன்னும் சில restrictions இருக்கும் அதையும் தாண்டி உண்மையை எழுதியிருக்கறதுக்கு அவங்களை பாராட்டியே தீரனும்.

ஆறு குடும்பங்களில் நடக்கும் நிகழ்வுகள் தான் கதையாய் சொல்லப்பட்டிருக்கிறது. எல்லாவயதில் இருக்கும் பெண்களும் கதையில் வருகிறார்கள். அவரவருக்கான நியாயங்கள் யதார்த்தங்கள் புரிதல்கள் வாழ்கையின் கொடுரங்களை கடப்பதுவும் என நகர்கிறது நிஜங்களை உள்ளடக்கி.

யாரையும் குறை கூறாமல் எல்லோரயும் புரிந்துகொண்டு செல்லும் ”றைமா” வும் கொழுந்தன் மனைவியான சொளராவும் அவ்வளவு ஒற்றுமையாக இருந்தாலும் காலம் பிரித்து வைத்து சிரிக்கிறது.வாழ்கையை அதன் அடி ஆழம் வரை காதலிக்கும் எந்த சூழலிலும் தற்கொலைக்கு செல்லக்கூடாது வாழவேண்டும் என்று வாழ்கையை நேசிக்கும் “பிர்தவ்ஸ்’ சின் மரணம் ரொம்ப கொடுரமான முறையில் திணிக்கப்படுகிறது.தனக்கென ஒரு எண்ணமோ செயலோ இருக்ககூடாதவள் போல் தான் பெண்களின் நிலையை சமூகம் அங்கீகரிக்கிறது.அவளுக்கான எண்ணத்துடனும் விருப்புடனும் நடக்கும் போது அது சமூக மீறலாக தெரிவு செய்யப்படுகிறது அதற்கான தண்டனையும் கொடுமையானதாக உள்ளது. ஊருக்கும் உறவுக்கும் பயந்தே ஊரார் வாய் அடக்கவே தமக்கு சம்மதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முடிவுகள் எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதே உண்மை.

எது வேண்டும் வேண்டாம் என்று கூறமுடியாமல் சமயத்தில் சூழ்நிலை நம் விருப்பத்துக்கு மாறாக போய்விடும்போது வாழ்க்கை அமைவதை ஏற்று நடக்க, படும் துயரங்களும் வேதனையும் தான் எத்தனை.அப்படியே நடக்கவேண்டுமானால் மண்ணாகவோ கல்லாகவோ இருக்கவேண்டும் மனது, இல்லாவிட்டால் கஷ்டம் தான்.”பிர்தவ்ஸ்” வாழ்க்கையை நேசிக்கும் அளவுக்கு வாழ்க்கை அவளை நேசிப்பதில்லை.அவளுக்கு பிடிக்காமல் அமையும் திருமணம் அதை ஏற்றுக்கொள்ளாமல் வந்துவிடும் அவள் தாய்வீட்டின் எதிரில் இருக்கும் “சிவாவை” விரும்புகிறாள்.அவள் விருப்பபடியே நடக்கவும் துணிகிறாள்.அதனால் சாகடிக்கவும் படுகிறாள்.

காமுகர்களாக வஞ்சக எண்ணம் கொண்டவர்களாக வரும் ஆண்கள் எல்லாநேரங்களையும் சாதகமாக்கிக் கொள்கிறார்கள்.குழந்தை பிறக்கவில்லையா மனைவியை தள்ளிவைத்து “சுலைமானுக்கு” இரண்டாம் திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது.வயதான காலத்தில் ஒன்றும் முடியவில்லையா மருமகளிடமே மோசமாய் பேசித்திரியும் “சையது”. மனைவி இருக்க வேலைக்கு இருக்கும் பெண்ணை வைப்பாட்டியாய் வைத்துத் திரியும் “கரீம்” மாதிரியானவர்கள் நல்ல சுகத்துடன் வாழ்வை அனுபவித்துக்கொள்கிறார்கள். சுலைமானுக்குப்பதில் சுரேஷ்,சையது வுக்கு பதில் சைமன், கரீமுக்கு பதி ஒருவர் என்று பெயர்கள் வேண்டுமானால் மாறலாம் ஆனால் நடைமுறைகள் மாறுவதில்லை.பாழாய் போன மனதை சுமந்துதிரியும் பெண்களே அல்பாயுசில் போய்விடுகிறார்கள்.

“ஜாதி மத இன பாலின பாகுபாடுகளைத் தாண்டி மனித உணர்வுகளைப் பொதுவானதாக ஏற்றுக்கொள்ளாத எந்த சமூகத்திடமிருந்தும் பெண்களாகிய எமக்குக்கிடைக்கும் வாழ்க்கை ரொம்பவே அநீதியானது என்பதில் ஒரு சந்தேகமும் இல்லைபுனிதத்தன்மைக்குள் வைத்து எம்மை சுரண்டுவதோடல்லா.மல், இன்று எமது படைப்புகளிலும் இதையெல்லாம் பேசாதே என கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிற சமூகமும் இலக்கிய சூழலும் இந்நாவலை எழுதி முடித்ததற்கும் வெளிவருவதற்குமான கால இடைவெளியை தீர்மானித்தன என்றால் மிகையில்லை”
எனும் சல்மாவின் வேதனை தரும் குரலை நாம் ஒதுக்கமுடியாது.

. எல்லோரையும் எல்லாவற்றயும் இனம் மொழி மதம் நாடு தாண்டி மனிதப்பண்புடன் புரிந்து கொள்ளமுயல்வோம்..இன்னும் இன்னும் வாழ்வை நேசிப்போம்.

6 comments:

  1. Easu Dear...

    Romba iyalbha irruku pa unga commends....
    ithi irunthu neenga entha alavuku antha storeiii rasichurpengannu puriyuthu pa.
    naanum seekiramee antha golden storeiii padikeren, appuram vimarsanam panren pa....

    "இன்னும் இன்னும் வாழ்வை நேசிப்போம் dear"....

    ReplyDelete
  2. எனக்கு இந்த புக் வேணுமே?

    ReplyDelete
  3. @Ragav Sri..
    Suma Dear Thanks da kutty...படி நல்லா இருக்கு..

    ReplyDelete
  4. @murli

    Boss நான் try பண்ணினேன் உங்களை மாதிரி story சொல்லலாம்னு ஆனா வரலை.எப்படி boss முடியுது குழந்தைக்கு சொல்ற மாதிரி story சொல்ல.காலச்சுவடு” தான் publish பண்ணிருக்காங்க. i give u..

    ReplyDelete
  5. இன்னும் இன்னும் இன்னும் இன்னும் இன்னும் இன்னும் ... வாழ்வை நேசிப்போம். :)

    ReplyDelete