Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Saturday, December 12, 2015

பதில்...


ஒவ்வொருமுறை சாபத்தின் வார்த்தைகள் தடித்து விழும்போதும், என்னவென்று  சொல்ல முடியாத மொனத்தில் உறைந்து போகும் மனது..வார்த்தைகள் வலிது..முரண்பட்டு நடக்கமுடியா மனதுக்கு விழும் சவுக்கடிகள்...என்  மனதுக்கு மாறுபட்டு காரியங்கள் செய்ய முடிந்ததில்லை, ஆதலால் நான் ஒரு இறவா மனதுக்குச் சொந்தக்காரி...
                                                                                                                                   
 வெறிச்சோடிக்கிடந்த வானத்திடம் பேச ஒன்றுமேயில்லை..ஊமையாய் புலம்பிக்கொண்டிருந்த மனதின் பாவங்களை கவனிக்க ஆரம்பித்தேன், அது தன் சதுரங்க விளையாட்டை ஆடத்துவங்கியிருந்தது..

எனக்கும் அதற்குமான உரையாடல் இப்படித்தான் துவங்கியது, ”உலகின் அதி உன்னதமான அன்பில் நான் திளைத்துக்கொண்டிருக்கிறேன், என்று நான் சொல்ல,  ” அப்படி எதுவும் இல்லை, எதுவுமே இல்லை, நீ அவ்வாறு நினைத்துக்கொண்டிருக்கிறாய்”, அதன் சொற்கள் குறுக்கே வந்து விழுந்தது..

”இதுமாறும்” கடினமாயிருந்தது அந்தச் சொற்கள், of course or maybe, but என்னால் compromise  செய்துகொள்ள முடியாது, முக்கியமாக share செய்து கொள்ளமுடியாது, சமீபமாகத்தான் என்னின் இந்த அவதாரத்தை நான் உணர்ந்தேன்.

possessiveness ன் பரிணாம வளர்ச்சி, அதாவது கோபப்படாமல் , வார்த்தைகளைக் கொட்டிவிடாமல் அடர்ந்த மொளனத்துடன் உதரிவிட்டு நடந்து விடுவது,..என்ற என் தீர்மானத்தைச் சொன்னவுடன் , அது சொன்னது, இல்லை, நீ எப்படிவேண்டுமானாலும் மாறலாம், even நீ compromise க்குக்கூடத் தயாராய் இருப்பாய், அதை எப்படிச்சொல்ல முடியும், அது அதனதன் அன்பின் தீவிரத்தைப் பொறுத்தது..

 சதுரங்க ஆட்டத்தில் அனைத்தையும் இழந்து போராடும் ராணியைப் போல, நான் போரடிக்கொண்டிருக்கிறேன்,  வருடங்களாய், என்னால் சுலபமாய் எதையும் ஏற்றுக்கொள்ளமுடிந்ததில்லை, இதில் நான் என்னை முழுமையாய்   ஈடுபடுத்திக் கொண்டி ருக்கிறேன்..பதிலில்லா தருணங்களில் சில நிமிடங்கள் கரைந்தது..நான் அதனுடன் வாதாடுவதை விட்டுவிட்டேன்..

அது  கருணையோடு என்னைப்பார்த்தது...இல்லை நீ சுயவிரக்கம் கொள்ளாதே, எல்லோரையும் ஏதோ ஒரு இடத்தில் வில்லத்தனம் செய்து விளையாடும் விதி, சுவாரஸ்யமான பக்கங்களால் ஆன வாழ்க்கையாய் நீ இறங்கி ஆடிப்பார்... Live the Game..Then Only U can Enjoy....நிர்ச்சலனமில்லா வானத்தில் ஒரே ஒரு நக்க்ஷத்திரம் மாத்திரம் மின்னிக்கொண்டிருந்தது...

No comments:

Post a Comment