Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Tuesday, February 25, 2014

”Living Alone"...




என்னை handle செய்வது மிகவும் கஷ்டமான காரியம் என்று சுபா சொன்னாள்.. தெரியவில்லை அப்படியும் இருக்கலாம், சமயத்தில் புத்த அமைதியோடு  நிறைவுற்றதாய் சமர்த்தாய் இருக்கும் மனது, ருத்ர தாண்டவம் ஆடி வதைக்கவும் செய்கிறது... ஆனாலும் எனக்கு நான் கொஞ்சம் ஈசிதான்...

என்ன வேண்டும் என்பதல்ல என் பிரச்சனை, எது என்பதில் தான்.. மனமொப்பி எதுவும் செய்ய முடியாதாயிருந்தது.. அருணும், சுபாவும் எனக்கு இது நல்லது என்று  தீர்மானத்திருந்தார்கள், என்னிடம் கேட்கவும் செய்தார்கள், ” இப்படியே தனியளாய் இருந்துவிடமுடியாது, நாங்கள் நம்பர் தருகிறோம், அவர் உன்ன கூப்பிடுவார், பேசிப்பார், பிடித்திருந்தால், பிறகு பார்க்கலாம்” என்று, எனக்கு அது எவ்வளவு தூரம் ஒத்துவரும் என்று தெரியவில்லை, இருந்தாலும்  சரி என்று  சொன்னேன்.

அதிலிருந்து message வரத்தொடங்கியது, goodmorning, goodafternoon சாப்டியா தூங்கிட்டியா அப்பிடின்னு, ரெண்டுநாள் கூடத்தாங்கவில்லை, சுபாவிடம் சொன்னேன், இல்ல இது  வேண்டாம் நான் ஏதோ வித்தியாசமா பண்ணிட்டிருக்கிற மாதிரி தோனுதுன்னு, சரி கூப்பிட்டு சொல்லிரு unnecessary hopes  வேண்டாம் ன்னு சொன்னா... சொல்லிவிட்டேன்...கடலின் முன் அமரும் போது அலை இரைச்சலில்  பேரமைதியில் மனம் நிலைத்திடுமே அப்படி இருந்தது...

ஏன் வேண்டாம் என்று சொன்னேன், ஏதோவொன்று அது என்ன, மனம் மறுபடியும் குடைய ஆரம்பித்தது, சுபா சொன்னாள், ஒன்னு தெரியுது முன்ன பின்ன தெரியாதவங கிட்ட உன்னால பழகமுடியறதில்ல, அதனால தான் maybe...

ரகுவிடம் இதை பகிர்ந்து கொள்ள  நினைத்தேன், அவனை எனக்கு இரண்டரை வருடங்களாக  தொடர்ந்த பழக்கமாயில்லாமல், விட்டு விட்டு தெரியும்.. ஆனாலும் ஒரு ஸ்னேகம், இருந்தது, அவனுடைய அமைதியான சுபாவமோ, genuine ஆ பழகறதோ ஏதோ ஒன்னு... கொஞ்சம் அதிகமா பிடிச்சுப்போனது எப்போன்னா -------------- ஒரு  சமயத்தில், அவன் மிக நிதானமாய் நடந்து, என்னை பாதுகாப்பாய் அழைத்துப்போனது... அன்று இரவு நான் நிம்மதியாய் தூங்கினேன்...

அதற்கு மறு நாள் கூட நன்றாய் இருந்தது, ஏதோ ஒரு தருணத்தில் நான் என்னை வெளிப்படுத்திய போது அவன் என்னிடமிருந்து விலக ஆரம்பித்தான்...nothing wrong na...

ஆனாலும், இதை அவனிடம் பகிர்ந்து கொண்டேன்,
”நீ, அவங்க கிட்ட“comfort “ ட்டா feel பண்ணல, அதான் என்றான்... நான் சிரித்துக்கொண்டேன்...


4 comments: