எப்பவும் மனசுக்குள்ள தோன்றது, பறவையாப்பிறக்கனும், இல்ல ஒரு மரமாவவுது இருக்கனும்..பறவைகளுக்கும், மரங்களுக்குமான உறவுதான் எவ்வளவு மகத்தானது..எப்படிப்பட்ட நம்பிக்கைய தருது இந்த மரங்கள்..பறவைகளுக்கு..
அது ஒரு sun day , morning.. சமைக்கிறப்போ gas தீந்து போச்சுன்னு, மாத்த போன sister ரோட பையன், பயங்கரமா சத்தம் போட்டு கூப்பிட்டு இருந்தான்.. என்னாச்சுன்னு போய் பார்த்தா.. சின்னதா எலும்பும் தோலும ரெண்டு மைனா குஞ்சு , செடி வச்சிருந்த தொட்டிக்குள்ள விழுந்திருந்துச்சு..
அப்பதான் பார்த்தா ஒரு மைனா குஞ்சோட கால் ஒடஞ்சிருக்கு.. வீட்ல இருந்த Neosporin, போட்டுவிட்டோம்.. ஆனா proper food என்னனு தெரியல.. சுகி, murli, Anu, prakash, manikandan, gayathri எல்லார்கிட்டயும் கேட்டாச்சு.. சுகி அவங்க friend கிட்ட கேட்டு சொன்னாங்க,,முட்டையோட மஞ்சள் கரு, அந்த வெள்ளை ஓடோட powder கொஞ்சம், marie gold biscuit powder, polybion syrub எல்லாம் mixer ல அடிச்சிட்டு கொதிக்க வச்சு ஆறவச்ச தண்ணீ போட்டு கடுகு size உருண்டை பண்ணி கொடுக்க சொன்னாங்க..
அன்னிக்கு Sunday சமாளிச்சிட்டேன்.. மறுநாள் office வரனும்.. மைனா குஞ்ச என்ன பண்றதுன்னு தெரியல..Fire service ல work பண்ற தெரிஞ்சவர் கிட்ட கேட்டேன் திரும்பவும் அதோட கூட்ல வச்சு தருவாங்கலான்னு.. வேற வேலை இல்லயா தூக்கி வீசிட்டு வேலைய பாருங்கன்னு advice பண்ணாரு.. மரம் ஏறுனவுங்க number வாங்கி phone பண்ணி கேட்டா கோவில் திருவிழா இப்ப வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க.. எதாவது idea பண்ணலாம்னு opposite வீட்ல work பண்ணிட்டிருந்தவர கூப்பிட்டு அந்த மரத்துக்கும் மொட்டை மாடிக்கும் ஒரு கம்பி கட்டி அதுல இந்த box தொங்க விட்டோம்.. அதோட அம்மா வந்து பாத்துக்கும்ன்னு நெனச்சு, ஏன்னா அதோட அம்மாவும் கத்திட்டே தேடிட்டு இருந்துச்சு.. காக்காய் தான் வந்துச்சு மைனாஸோட அம்மா வரல.. காக்கா சுத்த ஆரம்பிச்சோன அது ஏதாவது பண்ணிடுமோங்கிற பயத்தில திரும்பவும் வீட்டுக்கே கொண்டாந்துட்டேன்..
அந்த boxச ஒரு bed sheet ல சுத்தி காத்துபோற அளவு gape விட்டு வண்டி ல வச்சு office கொண்டாந்திட்டேன்.. அதுக்கு every half an hour, அதோட food குடுக்கனும்னு சுகி சொன்னாங்க..so எங்கூடவே மைனாஸும் office வந்திரும்.. நான் site க்கு போகல வெளியூர் போகல... time அவ்ளோ packed டா இருந்துச்சு..அவங்க ரெண்டு பேருக்கும் பேர் வச்சேன்..அந்த கால் ஒடஞ்சிருந்தவன் சக்திவேல், இன்னொருத்தன் ஞானவேல்...
எங்கேயும் போகமுடில ஆனா இவங்க ரெண்டு பேரையும் பாத்துக்கறதே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு..என்னோட time ரொம்ப use full லா போயிட்டிருக்கிறமாதிரி ஒரு feeling…ஆனா எவ்ளோ பெரிய வேலைய இந்த பறவைங்க செய்யுது.. கொஞ்சம் late ஆயிடுச்சின்னா இந்த ஞானவேல் அப்பிடித்தான் பசில பறப்பான்..
சக்தி கால் விரல் மடங்கி சரியா work ஆகல.. அவன daily morning வீட்ல இருக்கிற மரக்கிளைகள்ல உக்கார வச்சு சின்ன செடில உக்கார வச்சு practice குடுக்க ஆரம்பிச்சேன்...ஞானு கொஞ்சம் பயப்படும் சக்தி அப்படி இல்ல.. நல்லா confident டா try பண்ணும்...இப்படியே நானும் மைனாசும் ரொம்ப close ஆயிட்டோம்...நான் அவங்கள அடைச்சே வைக்கல office la ஒரு room (dining) இருந்துச்சு அதோட closed ventilator ல போய் உக்காந்துக்கும்.. வீட்டுக்கு வந்தாலும் windows open பண்ணாம அப்பிடியே விட்டிருவேன் screen rod ல போய் உக்காந்துக்கும்...கொஞ்சம் கொஞ்சமா இறக்கை எல்லாம் பெரிசாயிடுச்சு.. ஆனா அதுவா கொத்தி தின்ன தெரியல.. கொஞ்சமா அதுக்கும் பழக்கி விட்டேன்..தட்டுல வச்சா திங்க ஆரம்பிச்சது.. basin ல தண்ணி வச்சா அழகா bathing பண்ணுச்சு
...
கொஞ்சமா வெளில போனாலும் இவங்க ஞபகமாவே இருக்கும்... வந்துடுவேன்.. பறவைன்னா பறந்து அதோட உலகத்த பாக்கனுமே.. அது தானே இயல்பு.. பறக்கவிடனும்.. சுதந்திரமானு தோனிட்டே இருந்துச்சு.. ஆனா விட்டிட்டு இருக்க முடியறது ரொம்ப கஷ்டம்னு தெரிஞ்சிது.. சக்தி அவ்ளவா பக்கதில வராது.. ஞானு.. தலை தோள்ல வந்து உக்காந்துக்கும் மூஞ்சி பார்த்து எதாவது பேசும் புரிஞ்சமாதிரி பாக்கும்..
அவங்க ரெண்டு பேருமே நல்லா பறக்க ஆரம்பிச்சிட்டாங்க..ஒரே type food பிடிக்கல கட்டெரும்பு இஷ்டமா சாப்பிடுவாங்க, புழு பூச்சி எல்லாம் தான் பிடிச்சிருந்தது.. அதுவும் ஒரு Sunday மேல மாடில தண்ணி tank மேல கொண்டு போய் வச்சேன்.. first ஞானு தான் பறந்து போனான் இவ்ளோ பாசாமா இருந்திட்டு போயிட்டானேனு பார்த்தா கொஞ்ச நேரத்தில ஒரு round அடிச்சிட்டு வந்து தோள்ல உக்கார்தான்.. சக்தி சுத்தியும் ஒரு பார்வை பார்த்திச்சு அப்புறம் ஒரே swing ல பறந்து போயேபோயிடுச்சு.. ஞானு கூடவே இருந்தான் ஒரு half an hour.. வீட்டுக்குள்ள வந்து விடவும் ஒருவித சத்தம் எழுப்பி கூப்பிட்டெ இருந்தான்.. சக்திய கூப்பிட்டிருக்கலாம் .. அப்புறம் அவனும் பறந்துபோயிட்டான்...
.
நானும் ஞானுவும், அவன் பறந்துபோறதுக்கு கொஞ்சம் முன்னாடி..
எங்கே மைனாஸ் பார்த்தாலும் ஞானுவையும் சக்தியயும் அதுல தேடிட்டே இருக்கேன்... I miss them so so much…
Thanks to Sugi and Suma for food information's...
Thanks to Kharthik, your words motivated me..
Thanks to Girish ..office ல நான் பண்ணதெல்லாம் பொறுத்ததுக்கு...
wow .. a smile and a tear ..
ReplyDeleteஆமா..ஷஹி..அது நல்ல படியா பறந்து போனது..smile.. அது பிரிஞ்சு போனது tear.. தான்.. தினமும் sugi, murli எல்லாருக்கும் phone பண்ணி திரும்ப வருமானு கேட்டுட்டே இருந்தேன்...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசக்தியோ ஞானுவோ வருவாங்களோ தெரியலை. இல்ல வேற மைனா எதுவும் வருமான்னும் தெரியலை. ஆனா வரும். எதாவது வரும். எதுவாகவாவதோ வரும். வாழ்க்கையை அழகாக்க எதாவது வரும், எதுவாகவாவதோ வரும். சந்தோசமா இருங்க.
ReplyDeleteரொம்ப அழகு டா, மைனாக்களும் உன் மனசும்! ரொம்ப நல்லா எழுதிருக்கே.
ReplyDeleteNice sri..
ReplyDeleteஉண்மை தான்.. ஏதாவது ஒன்று வந்து..அல்லது.. யாராவது வந்து வாழ்க்கை அழகாக்கப் படுகிறது..thanks Murli...cheers..
ReplyDeleteThanks da.. Sugi நீ மட்டும் அவ்வளவு information's.. and encouragement கொடுக்கலைனா.. கஷ்டம் தான்... thank u da...
ReplyDeleteThank You Srini....
ReplyDeleteசக்திவேல் கால் சரியாயிடுச்சா?
ReplyDeleteஇல்லீங்க..கால் கொஞ்சம் bend ஆனமாதிரி தான் இருக்கும்.. ஆனா balance பண்ணி உக்காந்துக்குவான்... பறக்கறதிலயும் எதுவும் problem இருக்கல..actualலா அவன பிடிக்கிறதுதான் கஷ்டம்..சரியா சாப்பிடமாட்டான்..மனசு கேக்காம ஊட்றதுக்கு பிடிச்சா, கைய கொத்திட்டு பறந்து போயிடுவான்...
ReplyDeleteஅழகு,அற்புதம்,அருமை.பதிவிற்கும் பகிர்வுக்கும் வாய்ப்பிற்கும் நன்றி. அக்கா
ReplyDeleteஉங்கள் உணர்வுகளை எனக்கு புரியும்படி தமிழில் கூறியதற்கு மிக்க நன்றி.
இப்படிக்கு தம்பி கு.மோகன்ராஜ்,கரூர்.
அழகு,அற்புதம்,அருமை.பதிவிற்கும் பகிர்வுக்கும் வாய்ப்பிற்கும் நன்றி. அக்கா
ReplyDeleteஉங்கள் உணர்வுகளை எனக்கு புரியும்படி தமிழில் கூறியதற்கு மிக்க நன்றி.
இப்படிக்கு தம்பி கு.மோகன்ராஜ்,கரூர்.
💐☺.. நன்றிங்க மோகன் ராஜ்
ReplyDelete