Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Saturday, April 21, 2012

விட்டுப்பறந்திடுவோம் ஒரு சிட்டுக்குருவி போலே..


எல்லா நாளுமே மற்றுமொரு ஒரு நாளாக காணாமல் போவது இல்லை..ஏதாவது ஒரு நாள் ஒரு special நாளாக கிடைக்கிறது..அப்படிக்கிடைத்த ஒரு நாள்...

எங்கியாவது வெளியூர் போறதுன்னா எவ்வளவு plan பண்றோம் ticket book செய்யறதுல ஆரம்பிக்கிற அலப்பரை dress pack பண்றதுல continue ஆகி போறவரை தொடரும் ,அப்படி பண்ணாம திடீர்ன்னு கிளம்பி போனா எப்படி இருக்கும்னு தோனிச்சு, 8.30 வரை சுகி கிட்ட பேசிட்டு இருந்த எனக்கு அப்படியே கிளம்பி bangalore போகனும்னு ஆசை வந்துச்சு சுகியும் யோசிக்காதே உடனே வான்னு சொல்லவும், office ல இருந்து கிளம்பி central bus stand போனேன் ஒசூர் bus நின்னிட்டிருந்தது.ஏறி உட்கார்ந்து மணி பாத்தா 10.30 டிக்கெட் கொடுக்க வந்த conductor மூணு சீட் லேடீஸ்ப்பா அதுக்கும் பின்னாடி உட்காருங்கன்னு ஒரு அண்ணாத்தகிட்ட செல்லமா சொல்லி பின்னால தள்ளி விட்டாரு..thanks to ctc... இதெல்லாம் correcta தான் செய்யறாங்க.. என்ன அப்பப்ப ஏதாவது ஒரு sticker ஒட்டி காசத்தான் கறந்துட்றாங்க..இந்த celphone companies எப்படி ஒரு நைட்டீம் வச்சு தூக்க மப்புல ஏதாவது ஒன்ன activate செஞ்சு சேவை செய்வாங்களோ அதுக்கு சற்றும் குறையாதது இந்த போக்குவாரத்து துறை செய்யற express , point to point, சொகுசு பேருந்து சேவைங்க...ஓசூரிலிருந்து பெங்களுர் வண்டி பிடிச்சு அங்கே போய் சேர்றப்போ 6.30 மணி ஆயிடிச்சு.. ஒரு ரஸ்க் பாக்கெட் வங்கிட்டுப்போய் பால் தொட்டு சாப்பிட்டோம்..எனக்கு ரொம்ப பிடிக்கும் bangalore ரஸ்க்..


வீட்டுக்குப்போய் ப்ரெஷ் பண்ணிட்டு பக்கத்தில் இருந்த lake போய்ட்டோம்.அந்த நேரத்திலே அங்கே இருந்த பறவைங்க விதமான சத்தம் போட்டிட்டு..சுறுசுறுப்பாஇங்கேயும் அங்கேயுமா பறந்திட்டு இருந்தத பார்க்கிறப்போ ஒரே ஏக்கமா இருந்துச்சு..பறவையா பிறக்கலைன்னுதான்.. அங்க time போனதே தெரியாம உட்கார்ந்திருந்தோம்.வீட்டுக்கு வந்தப்போ மணி 10.00..


குளிச்சு breakfast முடிச்சிட்டு ஒரு north indian handcraft exhibition போனோம். ரொம்ப அழகழகா நிறைய things பாக்க முடிஞ்சிது.sleeping budha..smiling budha..அன்பே உருவான அவருக்கு அழகான உருவும் கொடுத்து அசத்திருந்தாங்க..paintings..dresses, chapels, furniture's ன்னு பார்க்க வாங்க நிறைய இருந்துச்சு..


வெளியில் வந்த நாங்க அடிச்சுப்பிடிச்சு போன இடம் சுஜித்ராஸ் ட்ரமா அகாடமி..french movie "camino" ஓடிட்டு இருந்தது.இருட்டுல கொஞ்சமா தேடிட்டே போய் உட்கார்தோம். துறுதுறுன்னு அழகா வளையவர்றா அந்த பொண்ணு “camino".கழுத்தில் ஏர்பட்ற வலியும் அதைத்தொடர்ந்த சிகிச்சையும் என சரியான அழுவாச்சி படம்.ஒரு ரெண்டு நாள் முன்னால சுகிகிட்ட நான் அரசியல் பேசிட்டு இருந்தேன் ..“அகிலேஷ் யாதவ்” பத்தி எல்லாம் சொல்லிட்டு இருந்தேன். அதுக்குதான் என்னை பழிவாங்கினாங்கன்னு நினைக்கிறேன்.


படம் முடிஞ்சு அழுமூஞ்சியோடவே போய் மசால் தோசை சாப்பிட்டோம். பக்கத்திலேயே ஒரு பார்க் இருந்தது அங்கே போய் கொஞ்ச நேரம் கதைச்சிட்டு மெதுவாய் நடக்க ஆரம்பித்தோம்..ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டே..ஒரு 3 கி.மீ நடந்து மெதுவா,வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்


 ஒரு நாள் ஓடிப்போனதே தெரியலை. சேலம் பஸ் தான் கிடைச்சது..பஸ்மாறி கோயமுத்தூர் வந்தேன்..வேற மாதிரியான மற்றுமொரு ஒருநாள் கிடைக்கலாம் எப்பவாவது..ஆனாலும் நினைச்சு நினைச்சு பார்க்கிறதுக்குன்னு இந்த நாள் நியாபகத்துல வந்திட்டே தான் இருக்கும்..


சொல்ல மறந்துட்டேனே போறப்பவும் வர்றப்பவும் நமக்கே நமக்குன்னு கூடவே வர்ற நிலாவும்,அந்த ஜன்னலோர சீட்டும் குளு குளு காத்தும் எல்லாத்தையும் மறக்கடிச்சு தொலைதுரத்துக்கு இழுத்துப்போகிற இருட்டும் இப்படி .எங்கேயவது போறப்போதான் கிடைக்குது...அப்படியே போய்டே இருக்கலாம்னு தான் தோனுது..

2 comments:

  1. நல்லா எழுதிருக்கே டா... Those were nice Moments...

    ReplyDelete
  2. hey thank u da...கண்டிப்பா...

    ReplyDelete