Shri Prajna

Shri Prajna
Live Like a Bird...

Saturday, November 5, 2011

ஒரு கனவுப் பயணம்..

நினைவுகளை தொலைத்து விட்டு
பேசித்திரியவென
கனவுகளைத்
தெரிவுசெய்கிறது மனம்

அப்படியான விடிகாலைக்
கனவில் முழுதும் வெட்டப்
பட்ட மரங்களில் ஒரே ஒரு
கிளையையும் சில துளிரையும்
காண்கிறது

அதிர்ந்து விழிக்கையில்
கனவின் பிம்பம் நிகழ்வுகளுடன்
சம்பந்தப்படுத்தி பதட்டத்துடன்
செல்கிறது பொழுதுகள்...

கனவுகள் காணமல் போக
நினைவுகள் விழிதிருக்கவென
நகரும் நாட்களின்
விடை மட்டும்
தொலைந்த வண்ணம்....

5 comments:

  1. //அதிர்ந்து விழிக்கையில்
    கனவின் பிம்பம் நிகழ்வுகளுடன்
    சம்பந்தப்படுத்தி பதட்டத்துடன்
    செல்கிறது பொழுதுகள்...//

    இந்த வரிகளின் ஊடே பதை பதைப்பு நன்றாக தெரிகிறது...

    நல்லா இருக்கு டா...

    ReplyDelete
  2. @sugi,

    என் அன்பு சுகி,
    உனக்குத்தான் தெரியுமே என் அதிர்வு பற்றி..thanks da chellam...

    ReplyDelete
  3. "கனவுகள் காணமல் போக
    நினைவுகள் விழிதிருக்க
    ......
    விடை மட்டும்
    தொலைந்த வண்ணம்...."

    Nice..... feeling....

    ReplyDelete