ஒவ்வொன்றுமே ஜீவனுடன் படைக்கப்பட்டது போலிருந்தது.ஜீவனில்லாமல் எதுவும் இல்லை.பாரதி பாடியது போல் பார்கும் இடங்கள் எல்லாமே நந்தலாலா தான்.மரம் மட்டை செடி கொடி புல் பூண்டு மலை காடு மேடு கல் நிலம் நீர் எல்லாமே எல்லாமே.ஜீவனுள்ளவை சாகடிக்கப்பட்டு எங்கு போய் வாழ்வை தேடுவது? என்னடி பண்றே காலைலயே ஆரம்பிச்சிட்டயா.எப்போ பார்த்தலும் செடி கொடி கட்டிட்டு அழு.ஒரு ஒழுங்கே இல்லை.அவன் கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தான்.
எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு அதை பற்றி நினைதாலே எரிச்சல் தான்..இன்னிக்கு ஒழுங்கு காட்டப்போவதில்லை.ஒழுங்குஅவளுக்கு மட்டும் விதிக்கப்பட்டு அவள் மேல் சுமத்தப்பட்டிருந்ததாகப்பட்டது .எல்லாமே தாறுமாறா போட்றது தான்..இதனால் கலாச்சாரம் கெட்டுப்போவதில்லை...இப்படி நினைத்தவுடன் மனதில் ஒரு சமாதானம் ஏற்பட்டது..வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது.. மழையை பார்கிறதுனா சந்தோசமா இருக்கும்.. ஜன்னலோரம் அமர்ந்து மழையை ஊடுருவியும் அதைசார்ந்த எண்ணங்களை உள்ளிருத்தியும் பார்ப்பது சுகமாய் தோன்றவே அப்படியே அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
அவன் வந்த்ததோ கேட்டகேள்வியோ எதுவும் மூளையை எட்டவில்லை...அவன் சற்று உரக்கக்கேட்டான்..ஆனாலும் எதாவது ஒன்றுக்கு பதில் தருவது அவஸ்யமில்லாதது போலதான் அமர்ந்து இருந்தாள்.இந்த கேள்வியும் இதற்கான பதிலும் வளர்ந்து கொண்டே போய்...இன்னுமொரு சண்டையில் முடியும்.அதுக்கு இது பரவாயிலேன்னு தோனிச்சு போல அவளுக்கு...
இவன் அலட்டலை மற்றவர்கள் உணர்திருந்த போது இவள் மட்டும் காதல் என்று நினைத்து வைத்தாள்.மன்மோகனிலிருந்து எல்லோரையும் தெரியும் என்று பினாத்தியது பொய் வெத்து வேட்டு என்று தெரியவந்த போது இவனால் எதுவுமே பேசமட்டும் முடியும் என்ற முடிவுக்கு வரமுடிந்தது.எப்பவாவது குடிப்பாங்கிறது..எப்பவும்னு ஆனது. நிறைய காரணம், குடிய தவிர்த்து மனிததன்மையுடன் கூட அவன் இல்லை.அம்மாவந்தால் அவன் காட்ற அலச்சியம்..”உன் ஆத்தா வந்துட்டு போனா போலிருக்கே..என்ன கொண்டாந்தா..வக்கு வழி இல்ல.” இவனுக்கு என்ன இருந்ததுன்னு தெரியல..அம்மாவின் சுண்டிப்போகும் முகம் நியபகத்துக்கு வந்து இம்சிக்கும்.சமயத்தில் பேசும் கெட்ட வார்த்தைகளில் மட்டும் பாகுபாடே கிடையாது கிரிக்கெட்டின் தேசிய ஒருமைபாடு மாதிரி.அப்போதெல்லாம் அவளுக்கு காளியா மாறி துவம்சம் பண்ணத்தோன்றம்.நிரந்தரமான வேலை என்று எதையும் செய்வதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தான்.
பழகிப்போன விஷயம் திடீரென சிந்தனையைகலைத்தது தாழ்வாரத்தில் கூடுகட்டியிருந்த சிட்டுக்குருவிகளின் சத்தம்..அப்பா குருவிதான் வந்திருந்தது..மாற்றி மாற்றி பார்த்துக்கொள்ளும் குஞ்சு களை..ஒரே கீச் கீச் சத்தம் தான்..என்ன தான் பேசிக்குமோ தெரியலை..அது பாஷை புரிந்தால்..வேண்டாம் வேண்டவே வேண்டாம்..பேசும் பேசப்படும் வார்தைகளெல்லாமே விரயம் தான்..விர்விரென்று பறக்கும் அந்த சிட்டுகுருவியை பார்க்கும் போதெல்லாம் தோன்றும் பறக்க முடிஞ்சா....இந்த பறவைகளையோ அதன் கூட்டையோ குஞ்சுகளையோ ரசிக்கவே தெரியாது அவனுக்கு.ஒரு கறிக்கும் உதவாது எல்லாவற்றிலும் கறிவேண்டும்..இவளை கூட இன்னும் கொஞ்சம் சதை போடு அப்ப தான் நல்லா இருக்கும்னு சொல்லுவான்.இவளுக்கும் அவனை ஏதாவது சொல்லனும்னு தோன்றும்..சொன்னது கிடையாது .
பக்கத்து வீட்டு சிறுமி அக்கா வாயேன் சர்க்கஸ் போலாம்னு ரெண்டு மூணுநாள் முன்னாள் இருந்து கூப்பிடுவது நினைவுக்கு வந்தவுடன் அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு சென்றாள்..என்ன உழைப்பு இந்த சர்கஸ் கலைஞர்களுடயது அந்தரத்தில் தொங்குவதும் ஒருவன் மேல் ஒன்பது பேர் சவாரி செய்வதும் மண்ணெய் வாயில் ஊற்றி தீப்பிழம்பு வரச்செய்வதும், ஆஸ்திரேலிய கிளிகள் தடியின் ஆட்டத்திற்கேற்ப ஊஞ்சல் ஆடியது.சக்கரம் சுற்றியது.ஒரு கிளியை உட்காரவைத்து வண்டி ஓட்டியது.பயந்து தானே இத்தனையும் செய்கிறது.சிறகுகள் இருந்தாலும் பறக்க எண்ணம் வேண்டும்..
மாட்டிக்கொண்ட கிளிமேல் பரிதாபம் தோன்றியது.தன்னை போல் எனும் எண்ணம் வந்ததயும் தவிர்க்க முடியவில்லை. வீடு வந்து சேரும்போது இருட்டியிருந்தது.
உருமிக்கொண்டே அமர்ந்திருந்தான்.எங்கே ஊர் மேஞ்சுட்டு வர்றே போன்ற கேள்வி சாதாரணமாய் கேட்டான்.அதிக்கப்படியாய் குடித்திருந்தான்.உயிர் வாழ்வதெற்கென்று சில கணங்களை அனுமதிப்பது போல் தோன்றியது.எத்தனை நாள் போரட்டத்தை நடத்திக்கொண்டிருப்பது ஆயசமாக அலுப்பாக இருந்தது.சில அக்காகளின் கேள்விகளை எதிர்கொண்டே ஆகனும்.பல அண்ணன்களின் பார்வையை மிதித்து நகரனும்.அவர்கள் சில அத்துமீரிய கேள்விகளை வைத்துக்கொண்டு அலைகிறார்கள் பதில் தெரிவதற்கும் ஆவல் கொண்டவர்கள்.கூடாரத்தை தாண்டிய உலகம் கண்ணுக்குள் விரிந்தது.என்றாவது இந்த நாத்தமும் மிருகத்தனமான இச்சைஅணைப்பும் தேவைப்படுமா?தலையை சிலுப்பினாள்.பின் அமைதியாய் சென்று உறங்கினாள்.
அதிகாலை கிளம்பி அம்மாவீடு சேர்ந்தபோது இரவு ஒரு ஏழு மணி இருக்கும்.அம்மா வா என்ன திடீர்னு என்றாள்.உன்ன பார்க்கனும்னு கழுத்தை கட்டிக்கொண்டு சொன்னாள்.என் சர்டிஃபிகேட்லாம் எங்கேம்மா.வேலைக்கு ட்ரை பண்றேன். வெளியூர் போயிடலாமினிட்டு.அம்மாவின் கண்கள் இவளை நோக்கி வெட்டியதில் அந்த முகம் பிரகாசிப்பதாய் தோன்றியது.அவளுக்கு பிடித்த பனியாரமும் மிளகாய் சட்னியும் செய்வதாக கூறினாள்.
Thank You for this good image- My Dearest Senthilpavai Kasiannan Architect
எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலே... இப்படியும் வாழ்க்கை இருக்கிறது தான்... பரவால்ல கடைசிலே விடுதலை :)
ReplyDelete"அம்மாவின் கண்கள் இவளை நோக்கி வெட்டியதில் அந்த முகம் பிரகாசிப்பதாய் தோன்றியது"
ReplyDeleteNalla Uriyottammana Padaippu easu...
Climax superrr!!! penkallukku muthalil thunivu varaveendum pa arajagathai ethirpatharkku!!
Bharathy Sonnathu pola "Pathagam seibavarai kanndal......"
Nalla Padaippu!!
ReplyDelete(Pls remove the word verification while commenting :) )
@sugirtha..
ReplyDeleteசுகி நிறைய பேருடைய வாழ்வு இப்படியும் இருக்கிறது.சிலது கேட்டும் சிலது கண்டும்.சர்க்கஸ் கிளி மாதிரி இன்னும் இருக்கிறங்கப்பா..
@Ragav Sri..
ReplyDeleteம்ம்..வரனும்.நிறைய தாண்டி வரனும்டா..எதையும் சட்டைபண்ணாமல்...
@kanimozhi..
ReplyDeletehai கனி..first comment உங்க கிட்டயிருந்து..thanks pa