வா
சிட்டுக்குருவியின் மொழி பழகலாம்...
சில சங்கீதங்கள் ஒன்றாய் ரசிக்கலாம்
சில நூல்கள் பேசித்திரியலாம்.
முன்பனி இரவை பகிரலாம்..
பெளர்ணமி நிலவில் காயலாம்..
கடற்கரை ஓரம் நடக்கலாம்..
சில பல தூரங்கள் சேர்ந்தே
கடக்கலாம்..
சில தடைகள் தாண்டலாம்..
நடை முறைகள் நாம் மீறலாம்
சில கணங்கள் என்னுடன் இரு, அவை
நிமிடங்களாய் கரையட்டும்
சிலநாட்கள் பிரிந்திரு
அவை யுகங்களாய் நகரட்டும்
முறை சொல்லும் உறவொன்றும்
வேண்டாம்
பட்டாம் பூச்சியின் சுதந்திரத்தோடு
இக்கணத்துக்காய் பறந்திருப்போம்
வா....
ஸ்ரீ,
ReplyDeleteநல்லா இருக்கு ஸ்ரீ...
//பட்டாம் பூச்சியின் சுதந்திரத்தோடு
இக்கணத்துக்காய் பறந்திருப்போம்
வா.... //
:)
@சுகிர்தா...
ReplyDeleteஅப்படியா சுகி..தேங்க்யு...
ரைட்டு, இன்னும் என்னென்னமோ தோணட்டும், வாழ்த்துகள்
ReplyDelete@முரளி,
ReplyDeleteதேங்க்யு...
nalla erukku
ReplyDelete@Shreelatha,
ReplyDeleteThank u Latha....